ஓர் நீதிமன்ற விசாரணை Birmingham, Alabama, USA 64-0412 1இயேசு வரத் தாமதிப்பாரானால், மீண்டும் ஒரு நாளிலே நான் இங்கு வருவேன் என்று விசுவாசிக்கிறேன். இப்பொழுது, அது ஏன் என்று நீங்கள் அதிசயிக்கிறீர்கள் என்பதாக நான் ஊகிக்கிறேன். அன்றொரு நாள் ஒருவர் சொன்னார்... மிகவும் பிரசித்திபெற்ற மனிதனின் அருகில் நான் நின்றிருந்தேன். அந்த மனிதரை நான் நேசிக்கிறேன். அவருடைய பெயரை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் பெயரை சொல்ல வேண்டியதில்லை. என் இருதயத்திற்கேற்ற நண்பர்களில் அவரும் ஒருவர், ஓரல் ராபர்ட்ஸ். ஓரல் என்னுடைய கூட்டங்களுக்கு வருவார். அவரோடு கூட ஜேக்மூர் என்பவரும் வருவார். கான்ஸாஸ் பட்டணத்தின் கிழக்கு பாகத்தில், வெட்டவெளியில் அமைக்கப்பட்ட, கனத்த துணியுடன் கூடிய ஒரு கூடாரம் அவருக்கிருந்தது. இதைவிட சற்றுப் பெரிய அரங்கம் ஒன்றிற்கு நான் சென்றிருக்கிறேன். அவர் அங்கு வந்திருந்தார். என் பக்கவாட்டில் அமர்ந்து, “சகோதரன் பிரன்ஹாமே, தேவன் என் ஜெபத்தைக் கேட்பார் என்று கருதுகிறீர்களா?” என்று கேட்டார். நான், “அவர்கள் யாராயிருந்தாலும், அவர்களுடைய ஜெபத்தை அவர் கேட்பார்” என்று கூறினேன். இப்பொழுது அந்த மனிதன் எவ்வளவுக்கு அதிபதியாக இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. வேதாகமக் கல்லூரியின் கட்டிட மதிப்பு மட்டும், ஐம்பது மில்லியின் டாலர் மதிப்புடைய தாகும். அவருடைய அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடம் மட்டும் மூன்று மில்லியன் டாலர்கள் மதிப்புடையதாகும். ஒக்லஹாமாவைச் சேர்ந்த, ஒரு சிறு பையனுடைய விசுவாசம், தேவனுக்கென்று அவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய முடிந்தது. 2ஒரேகனில் உள்ள போர்ட் லேண்ட் என்னுமிடத்தில், என்னைக் கொன்று போடுவதற்காக, அந்தப் பைத்தியக்காரன் ஓடி வரும் போது, அந்த இரவில், டாமி ஆஸ்பர்ன், அங்கே மேடையில் அமர்ந்திருந்தார். அந்தப் பைத்தியக்காரன், “நீ ஒரு ஏமாற்றுக்காரன்!” என்று கூறினான். “நீ...'' என்று அழைத்தான். என்னவெல்லாம் கூறி இழிவாய்ப் பேசமுடியுமோ, அவ்வாறெல்லாம் இழி சொற்களை சொன்னான். பெரிய உருவம் கொண்ட கனத்த மனுஷன். பிரசங்க பீடத்தண்டை மேடையில் ஏறக்குறைய ஐம்பது பிரசங்கிமார்கள் அமர்ந்திருந்தார்கள். அவனைக்கண்டதும் ஓடி விட்டார்கள். ஏதோ ஒரு நிறுவனத்திலிருந்து ஓடிவந்த பைத்தியக் காரனாயிருந்தான். அவனுடைய கைகள் மிகவும் பருமனாக இருந்தது. நூற்றிருபத்தெட்டு பவுண்டுகள் எடையுள்ளவனாக இருந்தான். ”இரவில், இந்த இடத்தின் மத்தியில் உன்னைக்குத்தி கீழே விழத்தள்ளப்போகிறேன்“ என்று கூறிக்கொண்டே அந்த மேடையில் ஓடிவந்தான். இவைகளைக் காட்டிலும் அவனைக்குறித்து ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் பயத்தினால் பீடிக்கப் பட்டு அங்குமிங்கும் சிதறி பின்னால் சென்றுவிட்டனர். நான் அங்கு அமைதியாக நின்று கொண்டிருந்தேன். உங்களுடைய சொந்த எண்ணங்களை இங்கு புகுத்த முயற்சிக்காதீர்கள். அவ்வாறு செய்வீர்களானால் நீங்கள் இழக்கப்பட்டுப்போவீர்கள். நான் அங்கு சாதாரணமாக நின்று கொண்டிருந்தேன். எனக்கு நானே சொல்லிக் கொள்வதைக் கேட்டேன். அது என்ன வென்றால், “பரிசுத்த ஆவியானவர் என் உதடுகள் மூலமாக பேசுகிறார்” என்பதே. தேவன் மனிதன் மூலமாகவே கிரியை செய்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர் மனிதனைத் தெரிந்து கொள்ளுகிறார். அவர்-அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிப் பதற்காக, நட்சத்திரங்களை தெரிந்து கொண்டிருக்கக்கூடும் அல்லது மரங்கள், காற்று இவைகள் மூலமாகக் கூட கிரியை செய்திருக்க முடியும். ஆனால் அவரோ மனிதனைத் தெரிந்து கொண்டார். மனிதனைத் தெரிந்துக்கொண்டார். அதைத்தான் எப்பொழுதும் செய்கிறவராக இருக்கிறார். “அவருடைய முன்னறி வின்படி, அவருடைய ஊழியக்காரர்களுக்கும், தீர்க்கதரிசி களுக்கும் அவருடைய இரகசியத்தை வெளிப்படுத்துகிறார்” என்று அவர் கூறியுள்ளார். இப்பொழுது, அந்த மனிதன், என்னிலிருந்து சில அடிகள் தூரத்திலேதான் நின்று கொண்டிருந்தான். அவன் என்ன செய்யப்போகிறான் என்பதைக் கூறி பயமுறுத்தினான். அவன் ஒரு கோலியாத்தைப் போலக்காணப்பட்டான். “தேவனுடைய வார்த்தையைப் பலப்பரீட்சைக்கு நீ அழைத்ததினால், இந்த இரவில், நீ என் பாதபடியில் விழுவாய்” என்று பரிசுத்த ஆவியானவர் கூறினார். 3நல்லது, நூற்றியிருபத்தெட்டு பவுண்டுகள் எடையுள்ள மனிதன் - ஏறக்குறைய முந்நூறு பவுண்டுகள் எடை கொண்ட மனிதன் - ஒரு மலையே உங்களுக்கு எதிரில் நிற்பது போல் இருக்கும் - அவன் எண்ணம் எப்படிப்பட்டதாயிருக்கிறது - அதுவும் கொந்தளிப்புடன் சீறிப்பாய்ந்து கடும் சினத்துடன் வருகிறான். அது எப்படிப்பட்ட காட்சியாயிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். “யாருடைய பாதத்தில் நான் விழுகிறேன் என்பதை உனக்குக் காட்டுகிறேன்” என்று கூறிக்கொண்டே, அவனுடைய தடித்த கைவிரல்களை மடக்கினான். நான் அந்த இடத்தை விட்டு அசையவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தேன். என்னை நோக்கி நடந்துவந்தான். என்னைக் குத்துவதற்கு வசதியாக சற்று பின் வாங்கினான். “நான் எதுவும் பேசவேண்டும் என்பதாய் இல்லை” என்று எனக்குள் நான் பேசிக்கொண்டேன். “சாத்தானே, இந்த மனிதனை விட்டு வெளியே வா” என்றேன். இதைக்காட்டிலும் பெரிய சத்தத்தோடு கூறவில்லை. கையை மடக்கிக்கொண்டு வந்த அவன், கைகளை பின்நோக்கி மடக்கிக் கொண்டான். அவன் கரங்களை மேலே தூக்கினான். அவனுடைய கண்கள் பிதுங்கி வெளியே தள்ளிக் கொண்டு வந்தது. அங்கே அவன் சுற்றிச்சுற்றி வந்தான். அவன் நாக்கு வெளித்தள்ளிற்று. வாயிலிருந்து நுரையுடன் கோழை வடிந்தது. அவன் பின்நோக்கி சுழன்று, சுழன்று, சுழன்று சென்று கடைசியாக என் பாதங்களை இறுகப்பற்றிக் கொண்டு விழுந்தான். அவனைத் தேடிக்கொண்டிருந்த காவல்துறையினர் அங்கே வந்தார்கள். அதில் வந்திருந்த இரண்டு காவலர்களை நான் கர்த்தரிடத்தில் வழிநடத்தினேன். இந்த அளவுள்ள பெரிய மண்டபத்தின் பின்னால் அமர்ந்திருந்த, ஆடைகள் உடுத்தும் அறையில் அவர்களைக் கிறிஸ்துவுக்குள் நடத்தினேன். அரங்கத்தினுள்ளே அறுநூறு அல்லது அதற்கு மேலான வர்கள் கூடியிருந்தனர். அரங்கத்தின் வெளியே அதைக்காட்டிலும் இரண்டு மடங்கு ஜனங்கள் கூடியிருந்தனர் என்று நான் எண்ணுகிறேன். மழையும் பெய்து கொண்டிருந்தது. தெருக் களிலே, மேலும் கீழுமாக எங்கும் ஜனங்கள் குடைகளைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். அவன் என் பாதங்களை தரையுடன் அழுத்தினவனாகப் பற்றிப் பிடித்துக் கொண்டான். “அவன் மரித்து விட்டானா?” என்று கேட்டார். “இல்லை ஐயா” என்றேன். “நல்லது'', ”அவன் சுகம் பெற்றானா?“ என்று கேட்டார். “இல்லை ஐயா” என்றேன். “பாருங்கள், அந்த ஆவியை அவன் வணங்குகிறான். அவன் தன் தலையை நிமிர்த்தி எழுந்து நிற்கும் மட்டும், அவனுக்கு உதவி செய்ய ஒரு வழியும் இல்லை” என்றேன். “என் பாதத்தை விட்டு, அவனைப்புரட்டி அகற்றுவீர் களானால், இவ்விடம் விட்டு நான் அகல முடியும்” என்றேன். பாருங்கள்? 4டாமி ஆஸ்பர்ன் அதைப்பார்த்தார். வீட்டிற்குச் சென்று, மூன்று நாட்கள் ஒரு தனியறையில் தாழிட்டுக்கொண்டு அங்கேயே தரித்திருந்தார். தானே காரை ஓட்டிக்கொண்டு நேரே ஜெபர்ஸன்வில் லுக்கு வந்தார். அவர் அவருடைய காரைவிட்டு இறங்கி, சற்று நரம்புக் கோளாறுள்ள மனிதனைப்போல், பயந்து நடுங்கிக் கொண்டு அந்தக் காரைச் சுற்றி, சுற்றி வந்தார். “நான் சுகமாக்கும் வரத்தைப்பெற்றிருக்கிறேன் என்று நம்புகிறீர்களா?” என்றார். நான், “டாமி, செய்வதெல்லாம் வாய்க்கக்கூடிய பையனாக நீ இருக்கிறாய், அது தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென்று ஒரு பங்களிப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினேன். “டாமி அதைச்செய்யாதே, அந்தக் காரியங்களைக் குறித்து சிந்திப்பதை விட்டு விடு” என்று கூறினேன். “சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே தேவன் உன்னை அழைத்திருக்கிறார் என்பதை அறிவாய்” என்றேன். “அவர் உன்னை சுவிசேஷத்தைப் பிரசங்கிப் பதற்காக அழைத்திருப்பாரானால், தெய்வீக சுகமளித்தலும் அதில் சேர்ந்தே இருக்கிறது” என்று கூறினேன். அவர் சகோ.போஸ்வர்த் துடன் சென்றார். 5அன்றொரு நாள், நான் நின்று அவருடைய கட்டிடத்தைக் கவனித்தேன். ஓ, என்னே, ஏறக்குறைய ஒன்றரை மில்லியன் டாலர்கள் அதற்காக செலவிடப்பட்டுள்ளது. நான் அங்கே பார்த்தேன். ஓரலும் அங்கே நின்று கொண்டிருந்தார். நான் காத்துக் கொண்டிருந்தேன். நான் அங்கே இருந்தேன். ஓரல் ஒரு அருமையானவர். மற்றும் அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அதை எனக்குச் சுற்றிக் காண்பித்தார்கள். உண்மையில், அருமையான சகோதரர்கள்!. “அவர்கள் எல்லாம் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்னரே நான் ஊழியக்களத்தில் இருக்கிறேன். அங்கிருந்த அத்தனை பேருமே, அவைகளிலிருந்து ஊக்கம் அடைந்ததாகக் கூறுவார்கள்” என்று எண்ணிக்கொண்டே அங்கிருந்தேன். “அவர்கள் என்னுடைய அலுவலகத்திற்கு வருவார்களானால், அவர்களால் வெறுக்கப்படுவேன்” என்று எண்ணினேன். ஹூம்! அங்கே ஒரு ஓரத்தில், சிறிய தட்டச்சு இயந்திரம் ஒன்று வைத்துள்ளேன். ஹூம் - ஹூம். பாருங்கள்? “அதைப்பார்ப்பார் களானால், அவர்களால் வெறுக்கப்படுவேன்.” “கர்த்தாவே, இங்கே பாரும், மூன்று மில்லியன் டாலர்கள் பெறுமான பெரிய இக்கட்டிடங்கள் என்றெல்லாம் கூறுகிறார்களே அதைப்பாரும்” என்றபடியாய் எண்ணினேன். 6சாலையைப் பார்த்தேன், அப்படியே கடந்து சென்றேன். “அது இன்னார், இன்னாருடைய வருங்கால வீடு” என்று கூறிற்று. “வருங்கால வீடு.” நான் எண்ணினேன், இவைகளையெல்லாம், இந்தச் சகோதர்களை அவமானப்படுத்துவதற்காக கூறவில்லை. எனக்கு என்ன சொல்லப்பட்டதோ அதையே கூறுகிறேன். “என்னுடைய வருங்கால வீடு எங்கேயிருக்கிறது?” என்று எண்ணினேன். “மேலே நோக்கிப்பார்” என்று ஏதோ ஒன்று அவ்வாறு கூறிற்று. அது எனக்குப் போதுமானதாக இருந்தது. என்னுடைய தேவை களுக்காக எதுவரைக்கும் நான் மேலே நோக்கிப் பார்ப்பேன். அவர்கள் அப்படியிருக்க மாட்டார்கள் என்று கூறவில்லை. நீங்கள் கூடப்பாருங்கள், அது என்னை பலப்படுத்தி ஊக்குவிப்பதாக இருந்தது. கவனித்தீர்களா? அவ்விதமாக பணத்தை எவ்விதம் செலவழிக்க வேண்டும் என்ற உணர்வுகூட எனக்கு இல்லை. கர்த்தர் கூட அதை அறிவார். எனக்கென்று பெரிய மகத்தான கடமை என்று ஒன்று இருக்குமானால், அதற்காகவே இந்த இடத்திற்கு வந்திருக் கிறேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? சகோ.ராபர்ட்ஸைப் போல நானும் மூன்று நாட்கள் கூட்டங்களை நடத்துவேன் என்று எண்ணுகிறீர்களா? சகோ.ராபர்ட்ஸ் ஒவ்வொரு நாள் கூட்டத்திலும் பத்தாயிரம் பேர்கொண்ட ஜனக்கூட்டத்தைப் பெற்றிருப்பார். முதல் நாள் கூட்டத்தில் அவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்தை பெற முடியாமல், ஏன் நான் கடினப்படுகிறேன். பாருங்கள். ஏன்? ஐந்துபேர் அல்லது இரண்டுபேர், அல்லது ஒரே ஒரு மனிதன், அல்லது, அவர் எங்கு அனுப்புகிறாரோ அங்கு சென்று என்னால் கூட்டங்களை நடத்த முடியும். ஏன்? அவரைத்தவிர, வேறொன்றும் எனக்குத் தேவையாயிருக்கவில்லை. ஆகவேதான் உங்கள் ஜெபத்தை விரும்புகிறேன். எனவே அவரை அதிகமாகப் பெற்றிருப்பேன். அவரை அதிகமாக அறிந்து கொள்வேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 7ஒவ்வொரு ஜனக்கூட்டத்திலும், மூவகையான மக்கள் இருப்பார்கள். விசுவாசிகள், பாவனை விசுவாசிகள், அவிசுவாசி கள். ஒவ்வொரு கூட்டத்திலும் இப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள். இயேசுவும் கூட அவருடைய கூட்டங்களில் அப்படிப் பட்டவர்களைப் பெற்றிருந்தார். அவர் எவ்வாறு காரியங்களை பகுத்தறிந்து, பிரித்துக் கூறினார் என்றும், அவைகளை அவர் ஒருபோதும் விவரித்துக் கூறினாரில்லை. பாருங்கள்? அவருடைய சரீரத்தை அவர்கள் ஏன் புசிக்க வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கிக் கூறவில்லை , ஏன் அவர் வந்தார், அவர் எப்படி கீழே இறங்கி வந்தார், அது போலவே எவ்வாறு மேலே ஏறிச்செல்வார் என்றும் விளக்கிக் கூறவில்லை . அவர் ஒரு சாதாரண மனிதன் என்றே அந்த ஜனங்கள் அறிந்திருந்தார்கள். அவருடைய தொடக்கமே அவருக்கு கெட்ட பெயர் உண்டாக்கியிருந்தது. ஆனால், அவர்களுடைய விசுவாசத்தை சோதிப்பதற்காக அவைகள் எல்லாம் சம்பவித்தது என்று கூறினார். அந்த சீஷர்கள் அந்த இடத்தைவிட்டு, அசையவில்லை. அவர்களால் அதை விளக்கிக் கூற இயலவில்லை. ஆனால் பேதுரு சொன்னதைக் கவனியுங்கள், “கர்த்தாவே, நாங்கள் யாரிடத்தில் போவோம்?” பாருங்கள். அந்த நாளுக்குரிய கர்த்த ருடைய வார்த்தையை அவர்கள் கண்டார்கள். அது வாக்குத் தத்தமாக இருந்தது. அவ்விதமாகவே உறுதிப்படுத்தப்பட்டது. “அது கர்த்தருடைய வழி என்பதை நாம் அறிவோம்” என்று கூறினார்கள். 8அதுபோலவே, சூனேமியாள் ஸ்தீரியைப் பாருங்கள். எலியா தீர்க்கதரிசி ஆசிர்வதித்த ஆசிர்வாதத்தின் மூலமாக அவள் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டபோதும் நடந்தது. “கோவேறு கழுதையின் மீது சேணம் வை, நான் சொல்லும் மட்டும் நிறுத்தாமல் செல்” என்று அவள் கூறினாள். பாருங்கள்? அவள் தேவனுடைய மனுஷனிடத்தில் சென்றாள். அவருக்கோ ஒன்றும் தெரியாது. ஆனால், “அவள் ஒரு குழந்தையைக் கொண்டிருப்பாய் என்று அவளுக்கு சொல்லும்படி, தீர்க்கதரிசியினிடத்தில் கர்த்தர் சொல்லியிருப்பாரானால், தேவன் ஏன் அவளுடைய குழந்தையை எடுத்துக்கொண்டார் என்பதையும் அறிந்துக்கொள்வேன்” என்று அவள் அறிந்திருந்தாள். அப்படிச் செய்வதில் அவள் விடா முயற்சியுடையவளாய், உறுதியாயிருந்தாள். இன்னொன்றையும் நாம் நினைவு கூற வேண்டும். அது ஏன் சம்பவித்தது என்பதைக் கண்டுபிடிப்பது வரைக்கும் அவளுடைய விசுவாசத்தில் தரித்திருந்தாள். எலியா சென்றார், அவருக்கு என்ன செய்வ தென்று தெரியவில்லை. தரையில் இங்குமங்குமாக நடந்தார்; அந்தக் குழந்தையின் மேல் தன் சரீரத்தைக் கிடத்தினார். அக்குழந்தை ஜீவன் பெற்றது. பாருங்கள். அது ஜனங்களுடைய விசுவாசம். அவர்களால் அதை விவரித்துச் சொல்லமுடியாது. தேவனை யாரும் விவரித்துச் சொல்ல முடியாதது. ஆனால், அவருடைய வார்த்தையில் தேவன் ஏதோ ஒன்றைச் செய்யும் போது, அவர் செய்வேன் என்று வாக்குத்தத்தம் செய்ததைச் செய்யும் போது புரிந்து கொள்ளு கிறோம்! 9அவரை சிலுவையில் அடிப்பதற்குச் சற்று முன், குடி போதையில் திளைத்திருந்த அந்த ரோமப் போர்வீர்களைக் கவனியுங்கள், அந்தநாள் அங்கே அவரை நிறுத்தி, கன்னத்திலும், முகத்திலும் ஓங்கி அறைந்து, இன்னும் இப்படிப் பலவாகச் செய்து, “நீ தீர்க்கதரிசியானால், உன்னைக் குட்டினவன் யார் என்று இப்போது சொல்” என்றனர். அவரை யார் குட்டினார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அதை அவர் வேடிக்கையாக்க வில்லை . பாருங்கள்? அவர் - அவர் ஒன்றும் பேசாதிருந்தார். பரிசுத்த யோவான் 5:19-ல் “மெய்யாகவே, மெய்யாகவே” என்று கூறினார். இப்பொழுது கவனியுங்கள். “மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன் றையும் தாமாய் செய்ய மாட்டார் அவர் எவைகளைச் செய்கி றாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.'' ஆகவே, தரிசனங்கள் மூலமாக தேவன் அவருக்கு காண்பித்தா லொழிய, ஒரு அற்புதத்தைக் கூட ஒருபோதும் அவர் செய்ததே யில்லை. அவருடைய சொந்த வார்த்தையின்படியே என்ன செய்யச் சொன்னாரோ அதையே செய்தார். ”குமாரன் தாமாகவே எதையும் செய்ய மாட்டார்.“ அவர் கேட்கிற விதமாக அல்ல, ”ஆனால் பிதாவானவர் என்ன செய்யக் காண்கிறாரோ, குமாரனும் அதையே செய்கிறார்.“ பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள எந்த தீர்க்கதரிசியும், எந்த ஞானதிருஷ்டிக்காரனும், எதேச்சையாக எதையும் அவர்கள் செய்யவில்லை. தேவன் முதலில் காண்பிக் கிறார். ஆகவே, மாமிசத்தில் வந்த மனுஷர்களோ, மாமிசத்தில் வந்த இயேசுவும் கூட தனக்கு மகிமையை எடுத்துக்கொள்ள முடியாது. சகலமும் தேவனால் உண்டாயிற்று. பார்க்கச் செய்கிறவரும், காணச் செய்கிறவரும் தேவனே. அவர் நமக்குக் காண்பிக்கிற விதமாகவும், நமக்குச் சொல்லுகிற விதமாகவும், நாம் நடக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் அதைத்தான் செய்கிறோம். 10ஆகவே, இப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப் பாராக. இந்த பிற்பகல் வேளையிலே, வேதத்தை வாசிக்கும் போது, உங்களை மறுபடியும் கேட்கப்போகிறேன்.... அப்படிப்பட்ட அருமை யான ஜனங்கள் நீங்கள். இவ்விதமாக நின்று நான் உங்களுடன் பேசிக் கொண்டேயிருக்கலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால், மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இவ்விதமாகச் செய்வதினால், தேவன் எனக்குக் கொடுத்த செய்திக்கு அவகீர்த்தியுண்டாக்குகிறேன்... ஐந்து ஆராதனைகளை நாம் நடத்தியிருக்கலாம். ஆனால் நமக்கு அரங்கம் கிடைக்காது என்று நினைக்கிறேன். ஆகவே அதை நாம் நான்காக வைத்துக் கொள்கிறோம். இங்கே மூன்று இரவுகள், பின் ஒரு சுகமளிக்கும் ஆராதனை. என்ன, பாருங்கள். முதலாவது எதைச் சந்திக்க போகிறோம் என்று உங்களுக்குத் தெரியாது. தேவனுக்குச் சித்தமானால், ஒருநாள், தேவனுடைய ஒத்தாசை யைக் கொண்டு நான், விசேஷித்த ஜனங்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பையும் கொண்டு, நான் திரும்பவும் வந்து, என்னுடைய எல்லாச் சகோதரர்களையும், அவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்ப்பேன். இது ஒருவேளை உங்களுக்கு வேடிக்கையாக தெரியலாம். ஆனால், “வழக்காடுவோம் வாருங்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். அதுவரை, அதுவரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். ஞாபகம் கொள்ளுங்கள், அதை நான் செய்யவில்லை என்றால், மறுபடியும் நதியின் மறுகரையில் உங்களைச் சந்திக்கும் போது, நான் உங்களுக்கு கூறினது உண்மை , சத்தியம் என்று தேவன் சாட்சி கொடுப்பார். இது அவருடைய வார்த்தை. அவ்விதமாக அது சம்பவிக்கவில்லையென்றால், நான் ஒரு மாய்மாலக்காரனாயிருப்பேன். என்ன - என்ன... பொக்கிஷ சாலையில், எதை நான் பெற்றிருப்பேன். என்னுடைய மனைவியும், பிள்ளைகளும் வீட்டில் இருக்கிறார்கள். சற்று நேரத்திற்கு முன்பாகத் தொலைபேசியில், “ஏன் நீங்கள் வீட்டிற்கு வராமலிருக்கிறீர்கள்” என்று அழுகின்றனர். பாருங்கள்? ஆனால் வேறு அநேகப் பிள்ளைகள் வியாதிஸ்தராயும், தேவையுள்ளவர் களாயும் உள்ளனர். மற்றவர்களின் மனைவிமார்களும், கணவன் மார்களும் இரட்சிக்கப்பட வேண்டியவர்களாயுள்ளனர். நான் நதியைக் கடக்க எதிர்பார்ப்பேனேயானால் அதை நான் செய்ய முடியாது. பாருங்கள், அங்கே சற்று அமர்ந்து, ஓய்வு எடுத்துக் கொள்வேன். அதுவரை, நான் முதுமை அடைந்துக் கொண்டிருக் கிறேன். நான் நான் அதைச் செய்ய இயலாது. பல வருடங்களுக்கு முன்னால், நான் ஊழியத்தைத் தொடங்கிய போது இருந்தது போலவே இப்போதும் உணரமுடியாது. ஆனால், எப்படியாயினும் நான் -நான் தொடர்ந்து செல்வேன். எப்படியாயினும் தொடர்ந்து செல்வேன். ஏனென்றால் இந்த என் ஜீவியத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட கடைசித் தருணம் இதுதான். என்னால் முடிந்த மட்டும் ஊழியம் செய்வேன். இதற்கு அடுத்துவரும் ஜீவியத்தில், இது தேவையற்றதாக இருக்கும். 11இப்போது மாற்கு எழுதின சுவிசேஷம் 16-ஆம் அதிகாரத்தை திருப்புகிற வேளையில், அவருடைய வார்த்தைக் குக் கனம் செலுத்தத்தக்கதாக நாம் எழுந்து நிற்போம். 9-வது வசனத்திலிருந்து நான் வாசிக்க தொடங்கி இருக்கிறேன். நீங்கள் விரும்பினால், கவனமாகக் கேளுங்கள். இது கடைசிச் செய்தி. இங்கு நடக்கிற இந்தக் கூட்டங் களின், இந்த நாள் கொடுக்கிற செய்தியானது அதன் ஒரு பாகமாக, கடைசிச் செய்தியாயிருக்கிறது. அவர் உயிர்த்தெழுந்த உடனே, எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக, இயேசு தம்மு டைய சபைக்குக் கூறின் கடைசி வார்த்தையாகும். அந்தக் கடைசி வார்த்தைகளைத்தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். பரிசுத்த மாற்கு எழுதின சுவிசேஷம் 16-வது அதிகாரம். 9-வது வசனத்திலிருந்து தொடங்கி வாசிக்கப் போகிறேன். வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார். அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தி யிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்த வர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்கள் ளிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது..... அதை சற்று நினைத்துப்பாருங்கள். “அவர் உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கேள்விப்பட்ட போது”. ஓ, என்னே! இன்றைக்கும்கூட நாம் அதையே கேள்விப்பட முடியும் என்று நம்புகிறேன். அவர் உயிரோடிருக்கிறார் என்பதை அறிவது. ஹூ-ஹூ அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை. அதன்பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்து போகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார். (மற்றவர்களுக்கு) (அது கிளியோப்பாவும், அவருடைய நண்பரும் எம்மாவூருக்குப் போகும்போது நடந்தது). அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித் தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை . அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியி லிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த் தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவா சத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். (அதே காரியத்தை இப்போது நமக்குச் செய்வார் என்றால் எப்படியிருக்கும், வியப்படைகிறேன். பாருங்கள்?) பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலக மெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களா வன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களி னாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென். இதிலிருந்து, இந்த பிற்பகல் வேளையின் செய்திக்காக நான் எடுத்திருக்கும் தலைப்பு என்னவென்றால், “ஓர் நீதிமன்ற விசாரணை' என்பதாகும். நாம் இப்போது நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 12எங்களின் இரக்கமுள்ள பரம பிதாவே, இப்போது உம்முடைய வார்த்தையை எடுக்க வேண்டுமாய் ஜெபிக்கிறோம். இந்த சாயங்கால வேளையில், உம்முடைய வார்த்தையை ஒரு விசாரணைக்காகக் கொண்டுவரும்போது, உயிர்த்தெழுந்த இயேசு வின் பிரசன்னத்தை நாங்கள் உணரும்படி ஜெபிக்கிறோம். நாங்கள் மந்தப்புத்தியுள்ளவர்களாய் இல்லாதபடிச் செய்யும். எம்மா வூருக்குப் போகும் வழியில் அவர்களோடு உரையாடிக்கொண்டு போகிறபோது, நீர் அவர்களிடம் பேசி, அவர்கள்.... (அவ்விதம் ) இருந்ததாக அவர்களிடம் கூறினீர். “அவர்கள் எதைக்குறித்துக் கவலை கொண்டவர்களாய் இருந்தனர்?”. “ஏன் அவ்வளவு துக்கமாயிருந்தனர்?”. “நீர் அந்நியராயிருக்கிறீரோ?” என்று அவரைக் கேட்டனர். பின்னர் அவர்கள், “நாசரேத் ஊரானாகிய இயேசு என்றும், மெய்யாகவே அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார்” என்றும் சொன்னார்கள். உம்மை அவர்கள் தீர்க்கதரிசியென்று அறிக்கை செய்த போது, நீர் வார்த்தையுடன் இருக்க வேண்டும் என்பது உமக்குத் தகுதியாயிருக்கிறது. நீர் தீர்க்கதரிசியாய் இருக்கையில், வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வரும் என்று உரைக்கப்பட்டுள்ளது. பின்பு அவர்களிடமாகத் திரும்பி, “தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாத மந்த இருதயமுற்றவர்களே, கிறிஸ்து இவ்விதமாய்ப் பாடுபடவும் தமது மகிமையில் பிரவேசிக்க வும் வேண்டியதில்லையா” என்று சொன்னீர். பழைய ஏற்பாட்டி லிருந்து தொடங்கி, தொன்மையின் தொடக்கத்திலிருந்து அவர் களுக்கு அவரைக்குறித்து தீர்க்கதரிசிகள் என்ன கூறியிருக்கி றார்கள் என்பதை விளக்கிக் கூறினீர். ஆனால், அதன்பிறகும் அவர்கள் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், ஒருசமயம் கதவு பூட்டியிருந்தது. அறை வீட்டிற்குள் சிலுவையில் அடிக்கப்படுவதற்கு முன்பு செய்தது போல ஏதோ ஒன்றைச் செய்தீர். அப்பொழுது அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது. சடுதியில் அங்கிருந்து நீர் மறைந்து விட்டீர். இரவு உணவுக்காக பந்தியிருந்தவர்களிடத்திற்கு ஓடி அவர்களுக்கு இக்காரியங்களைக் கூறினார்கள். அவர்களுடைய அவிசுவாசத்தி னிமித்தம் அவர்களை கடிந்துக்கொண்டீர். பூட்டியிருக்கிற வீட்டிற் குள் நீர் பிரவேசித்து அவர்களுக்குச் சொன்னபோதே அவர்கள் உம்மை விசுவாசித்திருக்க வேண்டும். அவர்கள் இருதயமோ கடினப்பட்டது. நீர் அவர்களுக்கு உம்மை அறியப் பண்ணினதினால், எவ்வளவாய் அந்த சீஷர்கள் சந்தோஷமடைந்தார்கள். ஏனென் றால், சிலுவையில் அடிக்கப்படுவதற்கு முன் செய்ததைப் போலவே ஏதோ ஒன்றைச் செய்தீர். அது நீர்தான் என்பதை அறிந்துக் கொண்டார்கள். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவரா யிருக்கிறார். ஓ, தேவனே, தயவு செய்து, இன்று மீண்டும் அதைச் செய்தருளும். எங்கள் மத்தியிலே வாரும். கடைசி நாட்களுக் கென்று இவைகளை வாக்களித்துள்ளீர். எங்கள் இருதயம் மந்த மடையாமலிருப்பதாக... நவீன கால வேத போதகத்தினாலும், உலக காரியங்களாலும், உம்மைக் காணத்தவறுகிறோம். எங்களுடைய புரிந்துகொள்ளுதலையும், கண்களையும் திறந்தருளும். இவைகளை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். நீங்கள் உட்காரலாம். 13இப்பொழுது, அவருடைய தோற்றம், இந்த வாரத்தின் உயிர்த்தெழுதலாய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று விசுவாசிக் கிறேன். நாம் கண்டது, (பார்த்தது) சிறிதளவுதான். இந்த மேடையில் உங்களால் இந்நேரத்தில் அதைப் பார்க்க முடியும். இது முதல்முறையாகவும் இருக்கிறது. அதைக் குறித்து சற்று நம்பிக்கையற்றவர்களாயிருக்கிறோம். ஒருகாரியம் என்னவென் றால், நீங்கள் பார்ப்பது சிறு பாகம்தான். ஆனால், எந்த நேரத்திலும், ஒருபோதும் அது தவறாயிருக்கவில்லை. பதினாயிரம் பதினாயிரமான நேரத்திலும்கூட தவறாயிருக்கவில்லை. அது ஒருபோதும் தவறினதில்லை. அதற்கு எத்தனைபேர் இங்கே சாட்சிகளாயிருக்கிறீர்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள், அது அவ்வாறுதான்... பாருங்கள்? அது எந்த தேசமானாலும், எந்த இடமானாலும், ஏதாவது சம்பவிக்கும். ஒருபோதும் தவறின தில்லை. ஆகவே, அவ்விதமாகவே, துல்லியமாக, சொன்னது சொன்னவிதமாக சம்பவிக்க வேண்டுமானால், அது தேவனே யன்றி ஒருவராலும் அவ்வாறு செய்ய முடியாது. பாருங்கள்? நிச்சயமாக. ஆனால், உண்மையாகவே, அது நம்ப முடியாததுபோல் ஆகிவிடுகிறது. அது அவ்விதமாகத்தான் இருக்கவேண்டும். அவருடைய நாட்களிலும் அதுதான் சம்பவித்தது. இன்றும் இது போன்று, அவருடைய பிறப்பு மற்றும் காரியங்கள் எல்லாம் நம்பமுடியாதவைகளாயிருந்தன. அவருடைய ஜனங்களின் விசுவா சத்தை சோதிப்பதற்காக, தேவன் அவ்விதமாக காரியங்களை நடப்பிக்கிறார். 14இப்போது, இந்த பிற்பகல் நேரத்திலே, அதைக் காட்டிலும் சரியாயிருக்காது... அவர் நம்மத்தியிலே பிரசன்னமானதற்குப் பிறகு, கட்டிடத்தினூடாக கடந்து சென்று இருதயத்தின் எண்ணங்களைப் பகுத்தறிகிறார். மூன்று அல்லது நான்கு வசனங்களை மட்டுமே உங்களுடன் பகிர்ந்துக்கொண்டேன். எல்லா வேதவாக்கியங்களும் ஒன்றோடு ஒன்று இணைந் துள்ளது என்பதைத் தேவன் அறிவார். எந்த ஒரு வசனத்திலும் பிழையென்பதே கிடையாது. ஒரு வசனம் மற்ற ஒரு வசனத்துடன் முரண்படுவதில்லை. அது முரண்படுகிறது என்று ஜனங்கள் இப்போது கூறுகின்றனர். அவ்வாறு வார்த்தை எங்கே முரண் படுகிறது என்பதை யார் எனக்கு காண்பித்தாலும் சரி, என்னுடைய ஒரு வருட ஊதியத்தை அவர்களுக்கு கொடுப்பேன் என்று அறிவித்தேன். வார்த்தை தன்னில்தானே எங்கே முரண்படுகிறது. அது தன்னில் தானே முரண்படுவதில்லை. அவ்வாறு முரண் படுமானால், அதனால் எனக்கு ஒரு நன்மையுமில்லை. அது மிகச் சரியாக, சத்தியமாயிருக்கவேண்டும். இப்போது, தேவன் இந்த உலகத்தை ஏதோ ஒன்றைக் கொண்டு நியாயந்தீர்க்கப்போகிறார். அவர் சபையைக் கொண்டு நியாயந்தீர்க்கப்போகிறார் என்றால், எந்தச் சபையைக்கொண்டு நியாயந்தீர்க்கப்போகிறார்? ஏனென்றால் ஒரு சபை மற்ற சபை களிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஆனால், அவர் இயேசு கிறிஸ்துவைக் கொண்டே நியாயந்தீர்க்கப்போகிறார். பரிசுத்த வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. கிறிஸ்து வார்த்தையா யிருக்கிறார். “ஆதியிலே வார்த்தையிருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது.” அவர் நோவாவின் காலத்தில் அந்த வார்த்தையைக் கொண்டே நியாயந்தீர்த்தார். அவர் மோசேயின் காலத்திலும் அவ்வாறே வார்த்தையைக் கொண்டு நியாயந் தீர்த்தார். ஒவ்வொரு காலத்திலும், அவர் அவ்விதமாகவே நியாயத்தீர்ப்பு வழங்கினார். அவருடைய இந்நாளிலும் - இந்த நாட்கள் மட்டுமாக, ஒவ்வொரு காலத்திற்குமாக வாக்குத்தத்தம் பண்ணின வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்ப்பவராக இருக்கிறார். நாம் அதை விசுவாசித்தாலும் சரி, அல்லது விசுவாசியாமற் போனாலும் சரி, ஆனால் அவருடைய வார்த்தை யைச் சரியென்று நிரூபிக்க கடமைப்பட்டுள்ளார். மத்தேயு 12-ல் அவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா... 15“அவர் அநேகக் காரியங்களைச் செய்திருந்தும், ஜனங் களோ விசுவாசிக்கவில்லை. ஏனென்றால் ஏசாயா சொல்லுகிறார், அவர்களுக்கு இருதயம் இருக்கிறது, ஆனால் அவர்களால் அதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை; கண்களிருந்தும் காணா மலும் காதுகள் இருந்தும் கேளாமலும் உள்ளனர்' என்று.” அது நிறைவேற வேண்டும். அதுபோலவே இதுவும் நிறைவேற வேண்டும். “வீம்புக் காரராயும், அகந்தை உள்ளவர்களாகவும், தேவப்பிரியராயிராமல், சுகபோகப்பிரியராயும், அவதூறு செய்கிறவர்களாகவும், கொடுமை யுள்ளவர்களாகவும், நல்லோரைப் பகைக்கிறவர்களாகவும், தேவ பக்தியின் வேஷத்தை தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறவர் களாகவும், இருப்பார்கள்”. எவ்வளவாய் கவலையளிக்கிறது! அப்படிப்பட்டவனாய் இருப்பாயானால், உன்னுடைய காரியம் என்ன? இதை விசுவாசிக்காத ஒரு ஆணோ அல்லது பெண்ணோ? அவர்களைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அது நீயாக இருப்பாரானால் எப்படியிருக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள். அது-அது பரிதாபத்திற்குரியது. வெறுப்புக் கொள்ள முடியாதது. ஆனால் அது இரக்கத்திற்குரியதாயிருக்கிறது. அது தீர்மானிக்கப்பட்ட சத்தியமாயிருக்கிறது. இப்பொழுது கவனி யுங்கள். ஒரு சில நிமிஷங்களுக்கு வியாதிஸ்தர்களுக்காக ஜெபிப் பதற்கு முன்பதாக, எப்படி வழக்கமாக அழைப்போமோ இன்றும் அப்படி அழைக்கப்போகிறேன். கூடுமானால் அடுத்த நாற்பது நிமிஷங்களுக்குள் இந்த இடத்தைவிட்டு கடந்து செல்ல முயற்சிப்போம். ஆனால், அதற்குமுன், ஒரு சிறிய விசாரணையை நடத்தப் போகிறேன். 16இன்று, இந்த நீதிமன்ற விசாரணையில் நம்முடைய வழக்கு இதுவாக இருக்கிறது. இப்பொழுது இவைகளைக் கவனமாகக் கேட்டு, மனதில் பதியச் செய்வீர்களானால், நான் என்ன கூற முயற்சிக்கிறேன் என்பதை அறிந்துகொள்வீர்கள். அது நீண்டதாக இருக்காது. வழக்கு என்னவென்றால், “வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தைக்கும், உலகத்திற்கும்,” ஆக உண்டான வழக்கு. இப்பொழுது ஒரு வழக்குக்கு, வழக்குமூலம் என்று ஒன்று இல்லாவிட்டால் அது வழக்கு என்று அழைக்கப்பட மாட்டாது. ஏதோ வழக்கு மூலம் இருக்கவேண்டும். அப்படித்தான் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். இந்த பிற்பகல் வேளையில், இந்த நீதிமன்ற அறையில் அழைக்கப்படுகிற வழக்கு என்னவென்றால் இப்பொழுது, நான் விரும்புவது, நீங்கள் ஒவ்வொருவரும், இந்த வழக்கை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். இப்பொழுது வழக்கு என்னவென்றால், “தேவனுடைய வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட வார்த்தைக்கும், உலகத்திற்கும் இடையே உண்டான வழக்கு இது. (உலகம் - எதிர் - வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தை ). “வாக்குத்தத்தத்தை நிறைவேற்றவில்லை (உடன்படிக்கை யில் முறிவு ஏற்பட்டுவிட்டது)” என்பதே இவ்வழக்கின் குற்றச் சாட்டும், வழக்கு மூலமும் ஆகும். நான் பேசுவது எல்லோருக்கும் கேட்கிறதா? சரி. இங்கு , எங்கும் நிரம்பியுள்ள, எவ்விடத்திலுள் ளோராலும் கேட்கமுடிகிறதா? அப்படியானால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். குற்றச்சாட்டு என்னவென்றால், “ஒரு வாக்குத்தத் தத்தை முறித்துப்போட்டதாகும். தேவன் ஒரு வாக்குத்தத்தம் செய்தார். ஆனால் அதை அவர் நிறைவேற்றவில்லை.” தேவனு டைய வார்த்தை ஒரு வாக்குத்தத்தம் செய்துள்ளது. ஆகவே ஒரு வழக்கு விசாரணைக்காக அவர்- அவர் அழைக்கப்பட்டுள்ளார். “வாக்குத்தத்தத்தை நிறைவேற்றாமல் முறித்துப் போட்டுவிட்டார்”. 17இப்போது, குற்றஞ்சாட்டும் வழக்கறிஞர் எப்போதுமே உலகத்தின் சார்பில், உலகத்தைப் பிரதிபலிப்பவராக இருக்கிறார். நீதிமன்ற நடவடிக்கைகளை நான் புரிந்து கொண்டிருப்பேனேயா னால், அது அவ்வாறுதான் இருக்கும். ஆகவே குற்றச்சாட்டு களைக் கூறும் வழக்கறிஞர், உலகத்தைப் பிரதிபலிப்பவராக, உலகத்தின் பிரதிநிதியாக உள்ளார். சாத்தானே குற்றசாட்டுக் கூறும் வழக்கறிஞராக இருக்கிறான் . அவன் உலகத்தின் பிரதி நிதியாக இருக்கிறான். ஏனென்றால் உலகம் அவனுக்குச் சொந்தமானது. அவன் உலகத்தின் பிரதிநிதியாக இருக்கிறான். குற்றஞ் சாட்டுகிற வழக்கறிஞன், உலகத்தார்களுடைய வழக்கறிஞராய் இருக்கிறான். இவ்வழக்கில், சர்வ வல்லமையுள்ள தேவனே பிரதி வாதியாக இருக்கிறார். அவரே பிரதிவாதி. இப்போது, பிரதிவாதி எப்போதுமே, தன்னைக் காத்துக் கொள்வதற்கென்று, வழக்கைத் தோற்கடிப்பதற்காக தன்னுடைய தரப்பு சாட்சிகளுடையவராய் இருப்பார். பரிசுத்த ஆவியானவர் தாம், இவ்வழக்கில், பிரதிவாதி தரப்பு சாட்சியாயிருக்கிறார். நாம் இப்போது வழக்கிற்குக் கடந்து செல்லுகிறோம்.... இவ்வழக்கில் குற்றஞ்சாட்கிற வழக்கறிஞன் தனக்கென்று சாட்சிகளையுடையவனாயிருக்கிறான். அவர்களை நான் பெயர் சொல்லி அழைக்கப்போகிறேன். அவர்களில் திரு.அவிசுவாசி. அதற்கடுத்து வருபவர் திரு.கடவுள் நம்பிக்கையற்றவர். அதற் கடுத்து வருபவர் திரு.பொறுமையற்றவர். இவர்கள்தான் தேவனுக்கு விரோதமாக, நியாயத்தீர்ப்பை பெற முயற்சி செய்பவர் கள். 18எல்லாவிதப் பண்புகளைக் கொண்டவர்களையும் நாம் பார்த்தோம். அப்பட்டிப்பட்டவர்களை நாம் அழைக்கப்போகிறோம். நாம் இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறோம். நீதிமன்றத்தில் அதின் ஒழுங்கில் நாம் அழைக்கப்போகிறோம் சரி. ஒழுங்கு - ஒழுங்கு என்பது என்னவென்றால், நீதிமன்றத்தை அதன் ஒழுங்கு முறைமைக்குள் கொண்டு வந்து, சாட்சிகளை அழைக்கப் போகி றோம் அல்லது அதன் முறைமையில். குற்றசாட்டுகிற வழக்கறிஞன், அவருடைய முதல் சாட்சியை சாட்சி சொல்லும்படி அழைக்கப்போகிறார். சாட்சிகள் கூண்டில் சாட்சி சொல்ல வரும் அவனுடைய முதல் சாட்சி திரு.அவிசுவாசி என்பவர். அவனுடைய குற்றச்சாட்டு என்னவென்றால், “மொத்தத்தில் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உண்மையானவைகள் அல்ல” என்பதாகும். முதல் சாட்சியின் குற்றச்சாட்டு அதுதான். அவனோ, தன்னை ஒரு விசுவாசி என்று உரிமை கோருகிறான்; ஆனால் அவன் விசுவாசியல்ல; ஆனால் அவன் தன்னை ஒரு விசுவாசி என்று உரிமை கோருகிறான். மேலும் கொஞ்சக் காலத்திற்கு முன், இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டதாக கூறுகிறான். “பரிசுத்தாவியினால் நடத்தப்பட்ட ஒரு கூட்டம். அங்கே ஜனங்கள் மற்ற ஜனங்களுடைய தலைகளில் தங்கள் கரங்களை வைத்து, எதை எதைச் செய்வார்கள் என்று வேதாகமம் உரைக்கிறதோ அந்த உரிமைகளை மாற்கு 16-ம் அதிகாரத்தில் கூறப்பட்ட வண்ணம் இதை இதைச் செய் என்று கட்டளை கொடுக்கிறார்கள்” அப்பகுதியை நான் வாசித்தேன். “வியாதி யஸ்தர்கள்மேல் தங்கள் கரங்களை வைப்பார்கள், அப்போது அவர்கள் சொஸ்தமடைவார்கள்'' என்று எழுதப்பட்டிருந்தது. திரு.அவிசுவாசி சாட்சி பகறும்போது, அவர் சொன்னார், “பரிசுத்த ஆவியினால் நிரம்பிய பிரசங்கி என்று சொல்வார்களே, அப்படிபட்டவர் என்மீது அவருடைய கரங்களை வைத்தார். மாற்கு 16-ன்படி அவர் என்மேல் தன் கரங்களை வைத்தார். அதில் வாக்குத்தத்தம் செய்யப்பட்டபடி, அந்த மனிதன் தன்னை விசுவாசி என்று சொல்லிக்கொண்டான். அநேகர் சுகமடைந்த தாகக் கூறினார்கள். அவர் என்மீதும் தன் கைகளை வைத்தார். இது சம்பவித்தது இரண்டு மாதங்களுக்கு முன். ஆனால் ஒன்றும் சம்பவிக்கவில்லை. ஆகவே, அந்த வாக்குத்தத்தம் உண்மை யானதல்ல” என்று கூறினார். சரி. நாம் இப்போது, திரு. அவிசுவாசியை சாட்சிக் கூண்டிலிருந்து கீழே இறங்கச் சொல்வோம். பிசாசாகிய குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன் தன்னுடைய அதற்கடுத்த சாட்சியை அழைக்கிறான். 19அடுத்த சாட்சியாக எழுந்து நின்றவர், திரு.கடவுள் நம்பிக்கையற்றவர். இப்போது அவர் சாட்சி கூறுகிறார். அவர் சொல்ல ஆரம்பித்து, “நான் ஒரு சபைக்குச் சென்றேன். நான் சுகவீனமாயிருந்தேன். நான் சென்ற சபையானது, ஒரு தெய்வீக மேய்ப்பரைக் கொண்ட ஒரு சபையாகும். அந்தச் சபை தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் கொண்ட சபையாகும். அவருடைய மேஜையில் ஒரு சிறிய எண்ணெய் நிரப்பப்பட்ட குடுவை வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஜெபித்துக் கொள்வதற்காக வாஞ்சித்து அங்கு வந்திருந்த எல்லா ஜனங்களையும் அந்த எண்ணெயால் அவர் அபிஷேகம் பண்ணுவார். யாக்கோபு 5:14லிருந்து தேவனுடைய வாக்குத்தத்தத்தை வாசிப்பார். “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக. அவர்கள் கர்த்தருடைய நாமத்தி னாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்” என்ற வேதபகுதியை வாசித்தார். “இப்போது, அந்த மேய்ப்பரிடத்தில் சென்றேன். மற்றவர்கள் மூலமாக அவருடைய சாட்சியைக் கேட்டிருக்கிறேன். என்மீது எண்ணெய் பூசினார், மேலே கூறிய வேதவாக்கியங்களை எனக்கு வாசித்துக் காண்பித்தார். அது தேவனுடைய வாக்குத்தத்தமாக இருந்தது. இது சம்பவித்து ஒரு மாதமாயிற்று. ஆனால் அவர் என்மீது எண்ணெய் பூசும்போது, எவ்விதமான நோயாளியாக - வியாதியஸ்தனாக இருந்தேனோ அதேவிதமாகத்தான் இப்போதும் இருக்கிறேன்” என்று சாட்சி கூறி முடித்தான். ஆகவே, அதுவே அவனுடைய குற்றச்சாட்டாக இருந்தது. இப்போது, திரு.கடவுள் நம்பிக்கையற்றவர், சாட்சிக் கூண்டைவிட்டு கீழே இறங்கட்டும். 20குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன், சாத்தான், அவனுடைய - அவனுடைய அடுத்த சாட்சியை அழைக்கிறான். அவனுடைய அடுத்த சாட்சி திரு.பொறுமையற்றவர். அவன் ஒரு அயோக் கியன். பாருங்கள்? அப்படிப்பட்ட கடுமையான வார்த்தையை நான் உச்சரித்ததற்கு என்னை மன்னியுங்கள். பாருங்கள்? அப்படிப் பட்டவன் உங்களை மிகவும் பயமடையச் செய்வான். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. பாருங்கள்? “ஒரு நாள், வேதம் வாசித்துக்கொண்டிருந்தபோது” என்று திரு.பொறுமையற்றவர் தொடங்குகிறார். உரிமை கோரு கிறான், அவன்... இந்த எல்லா உரிமை கோருதலும் விசுவாசி களுக்கே உரியது. அவர்கள்.... “வேதம் வாசித்ததாக” அவன் உரிமை கொண்டாடுகிறான். அவ்வாறு வாசிக்கும்போது, மாற்கு 11:22 மற்றும் 23 வசனங்களை வாசிக்க நேர்ந்ததாம். அங்கே, இயேசுவே வாக்குத்தத்தம் செய்கிறார். “இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்திலே சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்ற வாக்குத்தத்தம். மறுபடியும் இயேசு கூறுகிறார், “ஆதலால், நீங்கள் ஜெபம் பண்ணும்போது, எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்” என்றும் கூறியுள்ளார். இப்போது அந்தச் சாட்சி இவ்விதமாக கூறுகிறான். “நான் என் கால்களில் முடவனா யிருக்கிறேன், கால்கள் முடவனாய் ஏறக்குறைய முப்பது வருடங் களாய் அவ்வாறு இருக்கிறேன். அந்த வாக்குத்தத்தத்தை ஐந்து வருடங்களுக்கு முன்னரே நான் ஏற்றுக் கொண்டேன், அந்த நாட்களிலிருந்து, இந்நாட்கள் வரைக்கும் ஒன்றுமே சம்பவிக்க வில்லை. நான் எப்போதும் போல முடவனாகவே இருக்கிறேன்” இப்பொழுது - இப்பொழுது... இவைகளைச் சொல்லி முடித்து அவனும் கீழே இறங்கிவிட்டான். 21இப்போது, குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞனுக்கு, வழக்கு இன்னது என்று காண்பிப்பதற்குப் போதுமான சாட்சியம் கிடைத்து விட்டது. ஆகவே, சாத்தானாகிய அந்த குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன் பொது ஜனங்களைப் பார்த்துக் கூறுவதைப் பாருங்கள், “இவர்கள் எல்லோருமே தங்களை விசுவாசிகள் என்று அழைத்துக் கொள்கின்றனர். அவருடைய வார்த்தையில், இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களை அவ்வளவு துரிதமாக, சிந்திக் காமல் கொடுத்ததற்க்கு அவர் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முடியாது. வார்த்தையை உரைத்தால் அந்த வார்த் தைக்கு பின்னால் அவர் இருக்க வேண்டும், அதை அவர் நிறைவேற்றவேண்டும்.” பாருங்கள், அவன் தேவனை குற்றஞ் சாட்டுகிறான். “அவரை விசுவாசிக்கிற பிள்ளைகளுக்கு, இந்த வாக்குத்தத்தங்களை அவருடைய வார்த்தையில் கொடுத்துள் ளார். அவரை விசுவாசிக்கிற பிள்ளைகள், அவருடைய வார்த்தையில் அவர் கூறின வாக்குத்தத்தங்கள் உண்மையென்று அறிக்கை செய்து உரிமை பாராட்டுகிறவர்கள், எனினும் அதிலிருந்து எந்தவிதப் பயனும் அடையவில்லை ”. 22ஆகவே தேவனை இவ்விதமாகக் குற்றப்படுத்தி, அவருக்கு விரோதமாக ஒரு வழக்கை உருவாக்குகிறான். அது என்னவென்றால், “அவரை விசுவாசிக்கிற பிள்ளைகளுக்குத் தேவன் ஏதோ ஒன்றை அவருடைய வார்த்தையில் வைத்துள்ளார். ஆனால், அவர் எதை வாக்குப் பண்ணினாரோ அந்த வார்த்தைக்குப்பின்னால் அவர் இருப்பதில்லை.'' மேலும் அவன் கூறுகிறான், ”அவர் இதைச் செய்வேன் என்று அவரை விசுவாசிக்கிற பிள்ளைகளுக்குக்கூறி, அதை நிறைவேற்ற அவரால் முடியவில்லையென்றால், அப்படிப்பட்ட வாக்குத்தத் தங்களை அவருடைய பிள்ளைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாது. ஆகவே அவருடைய செயல் போற்றத்தக்கதாக இல்லை“. இப்போது, குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன் , பிரதிவாதிக்கு விரோதமாக மிகக்கடினமான ஒரு வழக்கைக் காண்பிக்கிறான். ”அவர் கொடுத்த வார்த்தையின் வாக்குத்தத்தத்தின் பின்னால் அவர் நிற்பதில்லை, ஏனெனில் நமக்கு சாட்சிகள் உண்டு, அதை நிறைவேற்ற அவரால் முடியவில்லை“ என்று கூறுகிறான். குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன் மேலும் பேசுகிறான். குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன், அது சாத்தானே, கூறுகிறான், “மேலும் தேவன் வாக்குப்பண்ணுகிறார், 'விசுவாசிக்கிறவர் களுக்கு சகலமும் கூடும்.' இவ்வாறு தேவன் அவருடைய வார்த்தையில் கூறியுள்ளார்.” இப்படிக் குற்றச்சாட்டுகளைக் கூறி, குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன், தன்னுடைய வழக்கை உறுதிப் படுத்துகிறான். பாருங்கள். மூன்று சாட்சிகள் தங்கள் சாட்சியைக் கூறினபடியால், அவன் தன்னுடைய வழக்கு நியாயமானது என்று எண்ணுகிறான். வேதவாக்கியத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறான். வேதத்திற்கு முக்கியம் கொடுப்பது போலவும் அவன் வழக்கு இருக்கிறது. வேதவாக்கியம் கூறியவாறே, எல்லாவற்றையும் அவர்கள் செய்தனர் (எனினும் பலன் இல்லை என்பதுபோல.) இப்போது குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன், வேறுசில வேத வசனங்களையும் தனக்குச் சாதமாக எடுத்து முத்திரை யிடுகிறான். “விசுவாசிக்கிறவர்களுக்கு சகலமும் கூடும்.” “தேவன் இவ்விதமாக வாக்களித்துள்ளார்” என்றெல்லாம் அவனுடைய குற்றச்சாட்டுகள் அமைந்துள்ளன. 23மேலும், குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன் மறுபடியும் பேசுகிறான், சாத்தான் இவ்விதமாகக் கூறுகிறான். “அவரைச் சிலுவையில் அறைந்தபிறகு, மறுபடியும் அவர் ஜீவிப்பார்” என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். அவர் மரித்தாலும் பிழைப்பேன் என்று வாக்குப்பண்ணுகிறார். அவருடைய வார்த்தையில் மேலும் அவர் வாக்குத்தத்தம் செய்கிறார், எபிரேயர் 13:8-ல், 'அவர் நேற்றும், - இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்' என்று. ஆனால் அவர் எதை வாக்குப்பண்ணுகிறாரோ, அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு உறுதுணையாக அவர் நிற்பதில்லை.“ அதை அவ்வளவு ஆணித்தரமாக, மிக நெருக்கத்தில் வைத்து, அதிலிருந்து தப்பிக்க வழியே இல்லாமல் செய்கிறான். ”அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை. தேவன் அவருடைய வார்த்தையைக் காப்பது இல்லை.“ வேறு வகையில் கூறுவோமானால், ”அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, ஜீவிப்பதாகக் கூறுகிறார்.“ 24“மேலும் யோவான் 14:12ல் சொல்லப்பட்டுள்ள, ”என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.'' என்ற வேதவசனத்தை அவர் உரிமை கோருகிறார். ஆனால் அவரால் அந்த வசனத்திற்கு ஆதரவாக நிற்க முடியவில்லை. மேலும் அவர் இன்னொரு வேத வசனத்திலே, 'இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால், நீங்களும் பிழைப்பீர்கள்' என்று கூறியுள்ளார்.“ “மறுபடியும் கவனியுங்கள், அவர் மாற்கு சுவிசேஷத்தில்.... 17-வது அதிகாரம் (லூக்கா)... சோதோமின் நாட்களைக் குறித்துப் பேசுகிறார், நாம் வாழ்கிற இந்தக்காலம். ”சோதோமின் நாட்களைப் போல“, இவ்வுலகத்தின் நிலைமை அதே போன்ற தொரு காட்சியாயிருக்கும். தேவன் இறங்கி வரவேண்டும். வார்த்தையாயிருக்கிறவர் பூமியில் மாமிசத்தில் வெளிப்பட வேண்டும். தேவன் செய்த அதே கிரியைகளைச் செய்யவேண்டும். அது மனித ரூபத்தில் வெளிப்பட்ட மனிதனாக இருந்தது. ஆபிரகாம் அவரை ”ஏலோஹிம்“ என்று அழைத்தார். ”கடைசி நாட்களில் மனுஷ குமாரன் வெளிப்படுவார்“ என்று இயேசு சொன்னார். லோத்தின் நாட்களில் காணப்பட்டது போல, மனுஷ ரூபத்தில் வெளிப்படுவார். ஒரு காட்சியை அமைக்கிறார்.'' “அவர் நம்மோடும், நமக்குள்ளும் உலகத்தின் முடிவு பரியந்தம் என்றும் அல்லது உலக முடிவு வரைக்கும் இருப்பேன் என்று அவர் வாக்குப்பண்ணியுள்ளார். வானமும், பூமியும் ஒழிந்து போகும், ஆனால் அவருடைய வார்த்தை ஒருபோதும் ஒழியாது என்றும் உரிமை கோருகிறார்” 25குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன், தனக்கு மிகவும் சரியான வழக்கு இருக்கிறது என்று எண்ணிக்கொள்கிறான் என்று நான் நினைக்கிறேன். அதை அவ்விதமாக முத்திரை போடுகிறான். இந்த வேத வாக்கியங்களெல்லாம் சத்தியமல்ல என்று நிரூபிப்பதற்கு அவனுக்குப் போதுமான சாட்சிகள் உண்டு. இப்போது இந்த பிற்பகல் நேரத்தில் நீதிபதியாகவும், நீதிமன்றத்தில் விசாரணையை கவனித்து, தங்கள் கருத்துக்களை நீதிபதிக்கு தெரிவிக்கும் ஒரு குழுவாகவும் இருக்கிறீர்கள். நீங்களும், உங்கள் சிந்தையுமே அப்படிப்பட்ட குழு. உங்களுடைய நடவடிக்கைகள் ஒரு நீதிபதிக்குரிய ஸ்தானமாகும். உங்களுடைய அல்லது தங்கள் கருத்துக்களை நீதிபதிக்கு தெரிவிக்கும் குழுவினரின் கருத்து அதுதான் நீங்கள் கொடுக்கிற தீர்ப்பு. அதன்படியே உங்கள் தீர்ப்பு அமைந்திருக்கும். பாருங்கள்? நீங்கள் அதைச் செய்தாக வேண்டும். ஏனென்றால், உங்களுடைய கிரியைகள், உங்களுடைய வார்த்தையைக் காட்டிலும் பலமாகத் தொனிக்கும். பாருங்கள்? அதுசரியே. நீங்கள் ஒன்றைக் கூறலாம். ஆனால், அதைக் கூறினவிதமாக கிரியை செய்ய முடியாது. பாருங்கள்? உங்களுடைய செயல்கள் உங்களுடைய வார்த்தை யைக் காட்டிலும் பலமாக தொனிக்கும். கவனியுங்கள். இப்போது குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன் கீழே இறங்கட்டும். அவனும், அவனுடைய சாட்சிகளும் சாட்சி கூறினார்கள். குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன், அவன் விரும்புகிற விதமாக வார்த்தையை எடுத்து வைத்து அதை உறுதிப் படுத்தினான். அவன் தன்னுடைய வழக்கை முழுவதுமாக நிரூபித்து விட்டதுபோல் நினைக்கிறான். ஆகவே, குற்றஞ் சாட்டுகிற வழக்கறிஞனும், அவனுடைய சாட்சிகளும், சாட்சி கூண்டிலிருந்து கீழே இறங்கட்டும். 26இப்போது நாம், பரிசுத்த ஆவியானவருடைய, பிரதி வாதியினுடைய சாட்சியை அழைப்போம். பிரதிவாதி என்று ஒருவர் இருப்பாரானால், அவர் சார்பில் சாட்சிகளும் இருப்பார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். ஆகவே பரிசுத்தாவியாகிய பிரதிவாதிக்கு அனுகூலமாக இருக்கிற பிரதிவாதி தரப்பு சாட்சியை நாம் அழைப்போமாக. பரிசுத்த ஆவியானவர் எழுந்து நின்று முதலாவது கூறியது என்னவென்றால், குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன் தன்னுடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவன்தான் இவ்வழக்கில், குற்றச்சாட்டுகளைத் தொடுத்து வழக்கு விசாரணையை செய்ய முயற்சித்தவன். “குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன், ஜனங்களுக்கு வார்த்தையை தவறாக வியாக்கியானம் செய்திருக்கிறான். ஏதேன் தோட்டத்தில், ஏவாளிடத்தில், முதல் மனித இனத்தில் செய்ததுபோல,” பிரதிவாதி தரப்பு சாட்சியாகிய பரிசுத்த ஆவியானவர் இதில் கவனம் செலுத்தும்படி அழைக்கிறார். 27கவனியுங்கள், குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன் மேலும் சொன்னான், “இந்த வாக்குத்தத்தம் யாவும் விசுவாசிகளுக்கே உரியது” என்றும், “இந்த வாக்குத்தத்தங்கள் யாவும் அவிசுவாசி களுக்கோ, கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கோ கிடையாது” என்று. பிரதிவாதியின் சாட்சி, அவருடைய உரிமையும் வாதமும் என்னவென்றால், “இவைகள் யாவும் விசுவாசிகளுக்கே உரியது என்று தேவன் குறிப்பாகச் சொல்லியிருக்கிறார். சாட்சி கூறின அத்தனை பேருடைய கவனத்தையும் கோருகிறார். அவைகள் யாவும் வார்த்தைக்கு விரோதமாக கூறப்பட்டவை. மற்றவர்கள் சுகமாக்கப்பட்டதை ஒத்துக்கொள்கிறார்கள்'' என்பது. பாருங்கள்? ஆகவே இப்பொழுதே அவனை (அப்புறப்படுத்துவோம்), தூக்கி எறிவோம். பாருங்கள், இருப்பினும் இந்த வழக்கை கொஞ்ச நேரத்திற்கு தொடர்ந்து நடத்துவோம். அவர்கள் விசுவாசிகளா அல்லது அவிசுவாசிகளா என்பதை பிரதிவாதி சாட்சி அறிய வேண்டும். ஏனென்றால், அவர் ஒருவரே வார்த்தையை உயிர்ப்பித்துக் கொடுக்கிறவரா யிருக்கிறார். அவர்கள் அதை விசுவாசிக்கின்றனரா, இல்லையா என்பதை அவர் ஒருவரே அறிவார். நீங்களும் அவ்வாறு எண்ணுவ தில்லையா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) அவர் அறிந்திருக்க வேண்டும். அவர்கள் விசுவாசிகளா, இல்லையா என்பதை அவர் அறிவார். ஏனென்றால், அவர் ஒருவரே வார்த்தைக்கு ஜீவனைக்கொடுக்க முடியும். இங்கே என்னுடைய சரீரம், ஆவியின்றி நின்று கொண்டிருக்கமுடியும். அது நான் மரித்துப்போய் விட்டேன் என்பதாகும். ஆனால், ஜீவன் ஒன்றே, இந்தச்சரீரத்தை அசையப் பண்ணக்கூடியதாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் ஒருவரே வார்த்தையை உயிர்ப்பிக்கக் கூடியவராயிருக்கிறார். அவர் ஒருவரே, வார்த்தையை உயிர்ப்பித்து செயல்படுத்துகிறவராயிருக்கிறார். ஆகவே, அவர்கள் விசுவாசி களா அல்லது அவிசுவாசிகளா? என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். அவர்கள் கூறுகிற சாட்சியே, அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது. “மற்றவர்கள் அநேகர் சுகமடைந்ததாகக் கூறுகிறார்கள், இவைகளையெல்லாம் பார்த்ததாக சிலர் கூறுகிறார்கள்.” ஆனால் , அவர்களோ சுகமடையவுமில்லை, பார்க்கவுமில்லை. இப்போது, பாருங்கள், அவனுடைய சாட்சி, ஏற்கனவே, அவனைக் குற்றப்படுத்திவிட்டது. 28ஆனால், இப்போது, வார்த்தையை அவர் உயிர்ப்பிக்கிறார். குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞனுடைய வார்த்தைக்கு மறுபடியும் நம்முடைய கவனத்தை கோருகிறார். அல்லது கேள்வியில் அவனை குற்றஞ்சாட்டுகிறார். “இவ்வளவு காலத்திற்குள் சுகமடை வான் என்று எந்தக் குறிப்பிட்ட கால அளவையும் அவர் ஒருபோதும் வைப்பதில்லை. 'விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை சொஸ்தமாக்கும். தேவன் அவர்களை எழுப்புவார்' என்றே கூறினார். அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள்' என்று கூறினார். உடனடியாக அவர்கள் எழும்பிக் குதிப்பார்கள் என்றும், உடனடியாக சுகமடைவார்கள் என்றும், அவர் சொல்லவேயில்லை. 'விசுவாசித்தால் சுகமடைவார்கள்' என்று மட்டுமே கூறினார். பாருங்கள், வார்த்தையைத் தவறாக வியாக்கியானம் செய்கிறான்! பாருங்கள்?” பிரதிவாதி தரப்பில் நாம் நல்ல சாட்சியை கொண்டவர் களாய் இருக்கிறோம் என்று நான் எண்ணுகிறேன். இப்போது, அங்கே, அவர்கள் விசுவாசிக்கின்றனரா அல்லது விசுவாசிக்க வில்லையா என்பதை அவர் அறிய வேண்டும். அவரால் அதை சொல்ல முடியும். இங்கே அவர் வார்த்தையை சரி செய்கிறார். ஏனென்றால், பரிசுத்த வேதாகம ஒழுங்கின்படி, பிரதிவாதி தரப்பு சாட்சி எப்போதுமே அதைத்தான் செய்கிறார். வார்த்தை எப்போதுமே சீர்படுத்துகிறதாயிருக்கிறது. 29“சாத்தான் அவிசுவாசிக்கு வார்த்தையை தவறாக எடுத்துக்காட்டுகிறான். அவிசுவாசியும் அதன் வேறுபாட்டை அறியாதவனாயிருக்கிறான். ஆனால் விசுவாசிக்கிற ஒருவன் வார்த்தை என்ன சொல்லுகிறது என்பதை சரியாக புரிந்து கொள்வான். அதை இறுக பற்றிக்கொண்டு, அதில் தரித்திருக் கிறான்” என்று அவர் சொன்னார் என்பதை நாம் பார்க்கிறோம். பாருங்கள்? பாருங்கள்? அவர்கள் என்ன கூற வருகின்றனரோ அதை அவர்களால் நிரூபிக்க முடியாது. அவர்கள் தங்களுக்குள்ளே என்ன பொருள் கொண்டிருக்கின்றனரோ அதையே சரியென்று அதிலேயே தரித்திருக்கின்றனர். அதுபோலவே அவர்கள் இருக்கின்றனர். இரட்சிக்கப்பட்டோம் என்று நாம் கூறுவது போல், அவர்களும், “நல்லது, நீ எவ்வாறு இரட்சிக்கப்பட்டாய் என்பதைக் காண்பி” என்று கூறுகிறார்கள். நான் இரட்சிக்கப்பட்டேன் என்று என் ஜீவியமே நிரூபிக்கிறது. நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா அல்லது இல்லையா என்பதை என்னுடைய நடத்தையே நிரூபித்துக்காட்டும். அதைப்பற்றி இங்கே எவ்வளவாய் சாட்சி கூறுகிறேன் என்பதல்ல, நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா அல்லது இல்லையா என்பதை நான் எவ்விதமாக ஜீவிக்கிறேன் என்பதினால் அறிந்து கொள்வீர்கள். அதுபோலவே சுகமாக்கப்படுதலினால் அதை அறிந்து கொள்ள முடியும். அதை ஏற்றுக்கொண்டு, நீங்கள் விசுவாசிப்பீர் களானால், அதுபோலவே நடந்து கொள்வீர்கள். உங்களில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படும்! அதை உங்கள் சிந்தை யிலிருந்து எதுவும் எடுத்து போட்டுவிட முடியாது. அது உங்களுடைய இரட்சிப்பைக் காட்டிலும் சிறந்ததல்ல. அது தேவனுடைய வார்த்தை. அதே அடிப்படையில் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று இயேசு அவருடைய வஸ்திரத்தை தொட்ட அந்த ஸ்திரீயினிடத்தில் சொன்னார். “உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது'' என்றார். இப்போது, என்னுடைய நீண்ட ஜீவிய பாதையில் நான் வேத பண்டிதன் அல்ல. ஆனால், சில வார்த்தைகளை உற்று நோக்கினேன். அந்தச் சொல்லானது, ”சோஷோ“ என்னும் கிரேக்க சொல்லிலிருந்து வந்ததாகும். ”சோஷோ“ என்றால் ”இரட்சிக்கப்படுதல்“ என்று பொருள். அது ஆவிக்குரிய இரட்சிப் பையும், ஒரு பொருள் மீட்கப்பட்டு விட்டது (காப்பாற்றப்படுதல்) என்ற பொருளில் கூறப்பட்டதாக இருக்கிறது. ”நீ இரட்சிக்கப்பட்டு விட்டாய், சோஷோ (sozo)“. தன் இளவயதிலேயே கல்லறைக்கு போய் சேர்வதிலிருந்து அவளை இரட்சித்தார், அதுபோலவே உன்னையும் நரகத்திற்கு செல்லாமல் இரட்சிக்கிறார். அதே ”சோஷோ“ (sozo) என்ற கிரேக்க சொல்லே இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கவனியுங்கள். ”உன்னுடைய விசுவாசம் உன்னை “சோஷோ” (sozo), நீ பெற்றிருந்த அந்த வியாதி யிலிருந்து உன்னை இரட்சித்தது.“ கவனியுங்கள், எல்லாக் காலங்களிலும் அதே வார்த்தை தான். 30“மறுபடியும் உங்கள் கவனத்தை கோருகிறேன். குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன் வார்த்தையைத் தவறாக மேற்கோள் காட்டினான். அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்த உடனேயே, சடுதியில் குதித்தெழுவார்கள் என்று கூற வில்லை. ஆனால், ”விசுவாசிக்கிறவர்கள் சொஸ்தமாவார்கள்“ என்று தான் அவர் கூறினார். அது என்னவென்றால், அவன் விசுவாசித்தால்! அது விசுவாசிகளுக்கே உரியது. “மறுபடியும், இந்த பிற்பகல் வேளையில், பிரதிவாதி சாட்சி உங்களுடைய கவனத்தை நீதி மன்றத்திற்கு செலுத்தும்படி விரும்புகிறார். அவருடைய வார்த்தை ஒரு ”வித்தாக“ இருக்கிறது என்று தேவன் சொன்னார். ”விதைத்தவர் விதைத்த விதை வார்த்தை என்னும் வித்தாக இருக்கிறது.“ இந்த மண், வித்து சரியான மண்ணில் விழுமானால், இந்த விதையை முளைப்பிக்கச் செய்யவும், உயிர்ப்பிக்கச் செய்யவும், போதுமான செழுமையை பெற்றிருக்குமானால், அது வாழும், ஜீவிக்கும்.” 31இப்போது, ஒரு மனிதன் ஒரு விதையை ஊன்றுகிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். நீங்கள் பயிர் செய்கிறவராகவோ அல்லது விதை விதைப்பதைக் குறித்து எதையாவது அறிந்திருப்பீர் களானால், இன்றைக்கு ஒரு விதையை ஊன்றுவீர்களானால், கொஞ்சம் சோள விதைகளை உங்கள் தோட்டத்தில் ஊன்றி வையுங்கள். நாளை காலையில் அங்கு சென்று அந்த இடத்தைத் தோண்டி அதைக் கவனியுங்கள், “நல்லது, அதில் ஒன்றும் வித்தியாசம் காணப்படவில்லை ” என்று கூறுவீர்கள். மறுபடியும் அதை ஊன்றி விடுங்கள். அடுத்த நாள் அங்கு சென்று, அதை கவனியுங்கள், “அதில் ஒன்றும் வித்தியாசமும் இல்லை” என்று தான் கூறுவீர்கள். அது ஒருபோதும் வளராது. அதை முளைக்கச் செய்ய முடியாது. நீ அதைத்தோண்டிய போது, அதனுடைய முழு தன்மையையும் சிதைத்துப்போட்டு விட்டாய். அதை நீங்கள் மண்ணுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். மற்ற காரியங்கள் என்ன செய்ய வேண்டுமோ, பூமி அதை செய்துவிடும். ஒவ்வொரு முறையும் தோன்றுகிற அறிகுறிகளைப் பார்த்து அவைகளைக்குறித்து சாட்சி பகர்ந்து, அவைகளைக் குறித்து முறுமுறுத்துக்கொண்டேயிருந்தால், தேவன் ஒருபோதும் உங்களைச் சுகப்படுத்த மாட்டார். அதை தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்து, அவருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டும். அவர் அதை நிறைவேற்றுவார். அது துளிர்விட்டாலும் சரி, அது எந்த நிலையில் இருந்தாலும் சரி, அதைப்பற்றி கவலை கொள்ளாதே. தேவன் அதை வாக்குப்பண்ணியுள்ளார். அதை நீ ஏற்றுக்கொள்ளும்போது, ஆவிக்குரிய பிரகாரமாக (மறைவாக - வெளித்தோற்றமில்லாமல்) நீ சுகத்தைப் பெற்றுக்கொண்டாய். அது ஒரு விதையான வடிவத்தில் உள்ளது. (சகோ.பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஐந்து முறை தட்டுகிறார் - ஆசிரியர்.) 32நான் உங்களிடத்தில் ஒரு கருவாலி (oak tree) மரத்தைக் கேட்டு, அதற்கு நீங்கள் ஒரு கருவாலி மரக்கொட்டையை (acorn) தருவீர்களானால், ஆவிக்குரிய பிரகாரமாக, மறைமுகமாக நான் ஒரு கருவாலி மரத்தையே பெற்றுக்கொண்டு விட்டேன். நான் உங்களிடத்தில் ஒரு சோளக்கதிரைக் கேட்டு, அதற்கு ஒரு தானியக்கதிர் மணியை எனக்கு கொடுப்பீர்களானால், ஆவிக் குரியபடி மறைமுகமாக நான் ஒரு சோளக்கதிரையே பெற்றுக் கொண்டேன். அதன்பின் அதை மண்ணுக்கு ஒப்புக்கொடுத்து, அதற்கு தண்ணீர் பாய்ச்சி, அதைச்சுற்றியுள்ள களைகளை யெல்லாம் அப்புறப்படுத்தும்போது, அது தன்னை சுற்றியுள்ள நிலப்பகுதியிலிருந்து சத்துவத்தைப் பெற்றுக் கொள்ளும். களைகள் அகற்றப்பட வேண்டும். அதன் பிறகு அது தன்னா லேயே வளரும். ஏனென்றால் அது தன்னை ஒப்புக்கொடுத்தது. அது முளைப்புத்திறன் கொண்ட விதை. அந்த விதையானது முளைப்புத்திறன் கொண்டதாக இல்லையென்றால், அது முளைக்காது. ஆனால் அந்த வித்து தனக்குள் முளைப்புத் திறன் கொண்ட ஜீவனைப் பெற்றிருக்குமானால், அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கு எதுவுமேயில்லை . 33“உயிர்த்தெழுதலைக்குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒருவர் கேட்டார். குளிர் காலத்தில் வெளியே சென்று உங்களுடைய தோட்டத்தில் ஒரு சிறிய சிமெண்ட் பலகையை பரப்பி வையுங்கள். அடுத்த வருட வசந்த காலத்தில் போய்ப் பாருங்கள். அடர்த்தி யான புற்கள் எங்கே போயிற்று? அப்பலகையின் விளிம்பில், பாருங்கள், சூரிய ஒளி பிரகாசிக்கையில், சூரிய பாதையில் உலகத்தை மறுபடியும் அசைக்கும்போது, அதை மறைப்பதற்கு ஒரு வழியுமே கிடையாது. ஜீவன் அதன் வழியை கண்டடைகிறது. அந்த சிமெண்ட் பலகையின் அடியில் சுற்றி சுற்றி அதன் வழியைக் கண்டுகொண்டு, அதன் விளிம்பிற்கு வெளியே வருகிறது. அதன் தலையை உயர்த்திக்கொண்டு, சர்வவல்லமை யுள்ள தேவனைத் துதிக்கிறது. தாவர இனங்களின் ஜீவியத்தை சூரியன் (s-u-n) தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எல்லா நித்திய ஜீவனையும் குமாரன் (s-o-n) தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஏனென்றால் அவர், அவர் ஒருவரே நித்திய ஜீவனையுடையவராயிருக்கிறார். அதை மறைக்க முடியாது! ஒரு உயிர்த்தெழுதல் உண்டாகும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கவலைப்படாதீர்கள், எப்படியும் நீங்கள் உயிர்த்தெழுவீர்கள். நீங்கள் விசுவாசித்து அதை ஏற்றுக்கொண்டால், நீங்கள் சுகம் பெற்றே ஆக வேண்டும். விதைக்கிறவர் விதைத்த ஒரு வித்தாக இருக்கிறது. அது நிலத்தில் விழுந்தது. அது முளைத்து வரும்போது... சில விதைகள் பாறைகளிலும், நீங்கள் அறிவீர்கள், அதற்கு வேர்கள் இல்லை; சில விதைகள் முள்ளுகளுக்குள் விழுந்தது, எதிர்பார்த்தபடி வளரமுடியவில்லை, முட்கள் நெருக்கி போட்டு விட்டது. அது உலர்ந்து போயிற்று. ஆனால் களைகள், முட்கள், பாறைகள் இல்லாத இடத்தில் விழுந்த விதைகள் செழித்து வளர்ந்தது. அது நீ என்னவாய் இருக்கிறாய் என்பதைப் பொறுத்து இருக்கிறது.... அவிசுவாசிகள் சிலரை உன்னுடைய வீட்டிற்குள் வர அனுமதித்தால், அல்லது அவிசுவாசமுள்ள நபர்களை அனுமதிப்பாயானால், அவன் இவ்விதமாக கூறுவான், “அங்கே அது ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, அப்படிப்பட்ட காரியம் எதுவுமே கிடையாது” என்று. அப்படியானால் களைகளை உள்ளே வர அனுமதிக்கிறாய். நீ அதை மனப்பூர்வமாக செய்யவில்லை! “தேவன் அவ்விதமாக கூறினார்!” என்று கூறுங்கள். அதுவே அதற்கு தீர்வாகும். “நான் சுகமாக்கப்பட்டேன், ஏனென் றால் அதை என் இதயப்பூர்வமாக விசுவாசிக்கிறேன்.” அந்த விசுவாசம் அங்கே தரித்திருக்கும், எல்லா அவிசுவாசமும் அங்கிருந்து எடுக்கப்பட்டுவிடும். அது சுகத்தைக் கொண்டுவரும். அது சரியே. 34இப்போது, பிரதிவாதி தரப்பு சாட்சியானவர், ஒரு-ஒரு சில சாட்சிகளை மேடைக்கு அழைக்க விரும்புகிறார். அதைச் செய்வதற்கு நேரம் கிடைக்குமா? இப்பொழுது பிரதிவாதிதரப்பு சாட்சி ஒரு சாட்சியை, தம்முடைய சாட்சிகளை, அழைக்க விரும்புகிறார். குற்றஞ்சாட்டுகிற வழக்கறிஞன் எவ்விதமாக அவனுடைய சாட்சிகளை அழைத்தானோ அது போல, (பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய சாட்சிகளை அழைக்க விரும்புகிறார்.) பிரதிவாதிதரப்பு சாட்சி முதலாவதாக தீர்க்கதரிசி நோவாவை சாட்சி சொல்லும்படி அழைக்கப் போகிறார். அவர் சாட்சி சொல்லட்டும். “நோவாவே, இந்த சாயங்கால வேளையில் அதைக் குறித்து நீ என்ன சொல்லப் போகிறாய்?” “இக்காலத்தில் விஞ்ஞானம் வளர்ந்திருப்பதைக் காட்டிலும் விஞ்ஞானமானது மிகவும் வளர்ந்திருந்த காலத்தில் நான் வாழ்ந்தேன். அப்பொழுது பூமியிலே மழை பெய்ததே கிடையாது. தேவன் பூமியிலுள்ள தாவரங்களுக்கும், இன்னும் பலவற்றிற்கும் பூமியின் அடியிலிருந்து வரும் ஊற்றுக்கள் மூலமாகத் தண்ணீர் பாய்ச்சினார். ஆனால் தேவன் ஒருநாள் என்னிடத்தில் வந்தார். வானத்திலிருந்து மழை பொழியப்போகிறது என்று கூறினார். என்னுடைய செய்தியை நான் கொடுத்தேன். அவர் என்னை ஒரு பேழையைக் கட்டும்படி கூறினார். அதை நான் செய்தேன். வானத்திலிருந்து மழை பொழியும் என்று கூறினேன்.” 35“அங்கே திரு. அவிசுவாசி, திரு.கடவுள் நம்பிக்கை அற்றவர் மற்றும் எல்லோரும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்கள் என்னை பரிகாசம் செய்தார்கள். என்னைப்பார்த்து ஏளனமாய் நகைத்தார்கள். அப்படிப்பட்ட அற்புதத்தை நான் விசுவாசிப்பதைக் குறித்து அப்படிச் செய்தார்கள். மேலே தண்ணீர் இல்லை என்பதை அவர்களுடைய விஞ்ஞானம் நிரூபித்து விட்டது. அவர்களால் சந்திரனை கூட சுட முடியும்; அவர்களால் நட்சத்திரங்களையும் சுட முடியும். அப்படிப்பட்டதான காரியங்களை அவர்களால் செய்ய முடியும். இப்போது நம்மால் கட்ட முடியாத பிரமாண்டமான கட்டிடங்களை அவர்கள் கட்டினார்கள். விஞ்ஞானப்பூர்வமாக அதை நிரூபித்தார்கள். மேலே தண்ணீர் இல்லை என்பதை நிரூபித்தார்கள்.” ஆனால் நோவா, “மழை பெய்யும் என்று தேவன் சொன்னார், அதை நான் விசுவாசித்தேன். தேவன் சொன்னார் என்றால் மேலே தண்ணீரை வைக்க அவரால் முடியும். ஆகவே எல்லா அவிசுவாசத்திற்கும் அப்பால் இருந்தேன். திரு - திரு. அவிசுவாசி என்னை பரிகசித்தார். கடவுள் நம்பிக்கை அற்றவர் என் மீது சந்தேகம் கொண்டார். அப்படியே பொறுமை யற்றவரும்! பேழையை கட்டி முடிக்கும் மட்டும் இவைகள் எல்லாவற்றிற்கும் அப்பால் இருந்தேன். ஒவ்வொரு நாளும், பேழையின் பக்கத்தில் வருவார்கள், ”நல்லது, இன்றைக்கு மழை பெய்யும் என்று அனுமானிக்கிறேன்“ என்று கூறி ஹா-ஹா-ஹா! என்று நகைப்பார்கள்” 36பாருங்கள், அதுபோலவே, “நீ சுகமாய் இருக்கிறாய் என்று எண்ணுகிறேன். நீ சுகமாக இருக்கப் போகிறாய் என்று எண்ணுகிறேன்” என்று கூறுவார்கள். “மழை எங்கே இருக்கிறது? நோவா, ஒரு சாதாரண தீர்க்கதரிசி, தீர்க்கதரிசிகளில் நீயும் ஒருவன் என்று கருதிக்கொள்கிறாய், நீ இவ்விதமாக கூறினாய்,” இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அது அவர்கள் அல்ல..... அவர்கள் விசுவாசிகள் அல்ல. அந்த ஜனங்கள் தங்களை விசுவாசிகள் என்று ஒரு பிரமையை ஏற்படுத்துகின்றனர். இல்லை, திரு.அவிசுவாசி மற்றும் திரு.கடவுள் நம்பிக்கை அற்றவர் மற்றும் அங்கே பலர், தங்களை விசுவாசிகள் என்று உரிமை கோருகிறார்கள். “நல்லது, தீர்க்கதரிசி நோவாவே, நீ ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று தான் எப்போதும் அறிந்து வைத்துள்ளோம். ஏனென்றால் விஞ்ஞானத்தோடு ஒத்துப்போகாத மூடத்தனமான திட்டங்களை வைத்துள்ளாய். இந்த நவீன காலத்தின் போக்குக்கு அது ஒத்துப்போகவில்லை. பாருங்கள், எங்களுடைய மேய்ப்பர்களோடு நீ ஒத்துப்போவதில்லை. உன்னிடத்தில் ஏதோ தவறு இருக்கிறது. உண்மையிலேயே நீ ஒரு தீர்க்கதரிசியல்ல என்பதை நாங்கள் அறிவோம். ஒரு மாதத்திற்கு முன், நீ மழை பெய்யும் என்றாய், ஆனால் இன்னும் மழை பெய்யவில்லை” என்று கூறினார்கள். “இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. 'ஹேய், ஹேய் தீர்க்கதரிசியே, அவ்விதமாக தேவன் கூறினாரா என்று நான் எண்ணினேன்.' “அவ்விதமாக அவர் சொன்னார்” “நல்லது, இப்போது இரண்டு வருடங்கள் கடந்து விட்டது!” “ஐந்து வருடங்கள், இருபது வருடங்கள், ஐம்பது வருடங்கள் கடந்தன. பேழை கட்டி முடிக்கப்பட்டாயிற்று.'” நோவா பேழையின் வாயிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். “திரு.பரிகசிக் கிறவர், திரு.அவிசுவாசி, திரு.கடவுள் நம்பிக்கையற்றவர், திரு. பொறுமையற்றவர் எல்லோரும் அங்கே வந்தார்கள்.” “நல்லது, இப்போது மழை எங்கேயிருக்கிறது?” என்று கேட்டார்கள். “மழை பெய்யப் போகிறது என்று தேவன் கூறினார். அது எப்பொழுது பெய்யும் என்று அவர் கூறவில்லை. 'மழை பெய்யப் போகிறது' என்று அவர் கூறினார். அது எப்பொழுது பெய்யும் என்று அவர் கூறவில்லை. 'மழை பெய்யப் போகிறது. ஒரு பேழையை உருவாக்கு. அதற்குள் நீ பாதுகாப்பாய் இருப்பாய். மழை பெய்யப்போகிறது' என்று வெறுமனே கூறினார். எப்பொழுது மழை பெய்யும் என்று அவர் கூறவில்லை. ”மழை பெய்யப் போகிறது“ என்று மட்டுமே அவர் கூறினார். ஆகவே நான் ஒரு பேழையைக் கட்டினேன்.” “நல்லது, எனக்கு இது எவ்வாறு தோன்றுகிறதென்றால், நீ பேழையைக் கட்டி முடித்து விட்டாயானால், நீ செய்ய வேண்டியதை செய்து முடித்துவிட்டாய். இனி தேவன் செய்ய வேண்டியதை அவர் செய்வார்.” “அவர் அதை செய்வார், அதை அவர் எப்போது செய்யப்போகிறார் என்பதை சொல்லவில்லை. மழை பெய்யும் என்று மட்டுமே கூறினார். ஆகவே மழை பெய்யப் போகிறது.'' 37“இப்படி அவர் சொல்லி, வருடங்கள் கடந்து விட்டன. நூற்றிபத்தொன்பது ஆண்டுகள் கடந்து விட்டன. நூற்றியிருபது வருடமாவதற்கு இன்னும் ஒரு ஏழு நாட்கள் தான் உள்ளன. திரு.அவிசுவாசி, திரு.பரிகசிக்கிறவர் இப்படிப்பட்டவர்கள் அனேகர். அதுவுமல்லாமல் திரு.கடவுள் நம்பிக்கையற்றவர் மற்றும் திரு.பொறுமையற்றவர் இவர்கள் எல்லோருமே என்னை பரிகசித் தனர். என்னவெல்லாம் கூறவேண்டுமோ அவ்வளவாய் பரிகசித் தனர். 'அவசரமாக கொடுத்த ஒரு வாக்குத்தத்தம், அதை நம்பு கிறான், பயித்தியக்காரன் என்றார்கள். அதை தேவன் எனக்கு வாக்குச் செய்திருப்பாரானால், உண்மையில்லாத ஒன்றை அவர் எனக்கு கூறியிருப்பாரானால், அவர் சொன்னதை அவரால் நிறைவேற்ற முடியாமல் போனால்,' என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் நான் தேவனை விசுவாசித்தேன். அதில் ஸ்திரமாக நின்றேன். நான் அவரை விசுவாசித்தேன். அதில் உறுதியாக இருந்தேன். அங்கேதான் நீங்களும்” என்று அவன் கூறுவதை நாம் காண்கிறோம். “உங்களுக்குத் தெரியுமா? ஒருநாள் அவர்கள் அனைவரும் வந்து என்னைப் பரிகசித்தனர். கதவு அடைக்கப் பட்டது. 'நல்லது, அந்த கிழபயித்தியக்காரன் அங்கே உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டான் என்று யூகிக்கிறேன்' என்றார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு பேசுவதை நான் கேட்டேன். 'தேவன் கதவை அடைத்தார். இன்றைக்கு நிச்சயமாக மழை பெய்யும் என்பதில் சந்தேகமில்லை! அது அப்படியே ஆகும்' என்று நான் அவர்களிடம் கூறினேன்.” “முதல் நாள் கழிந்தது. அங்கே மழை பெய்யவில்லை . பின்னர் அவர்கள் உண்மையிலேயே பரிகசித்தனர். ”தேவன் கதவை அடைத்தார்“ என்று கூறினாயே, அவ்விதமான அந்தக் காரியத்தை நான் விசுவாசிக்கவில்லை. நோவாவும் அவருடைய பிள்ளைகளும் கதவை அடைத்தனர்.' பரிகசிக்கிறவர், அவிசுவாசி, மற்றும் கடவுள் நம்பிக்கையற்றவர் இவர்களைப் பாருங்கள்! 38“எல்லாம் சரி, அது கொஞ்ச நேரமே நீடித்தது. ஆனால் ஒரு காலை வேளையில், மே மாதம் பதினேழாம் தேதி மழை பெய்தது. தேவனுடைய வார்த்தையை சோதித்த அத்தனை ஜனக்கூட்டத்தையும் முற்றிலுமாக அது அழித்துப் போட்டது. தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, அதற்காக ஆயத்தப் பட்டவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள்.'' “இன்னும் கொஞ்சம் நான் சாட்சி சொல்லட்டும்...” என்று நோவா கேட்டுக் கொண்டார். “இல்லை. நோவா கீழே இறங்கட்டும். அடுத்த சாட்சியை அழைப்போம். இந்த பிற்பகல் நேரத்தில் நமக்கு நேரம் அதிகமாக விடப்படவில்லை .” பிரதிவாதி சாட்சி இப்போது இரண்டாவது சாட்சியை அழைக்கிறார். அவர் ஆபிரகாமை அழைக்கப்போகிறார். “நான் ஒரு சாதாரண மனிதன். ஒரு விசுவாசி. ஒருநாள், 'சாராளின் மூலமாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வாய்' என்று தேவன் அவருடைய வார்த்தையின் மூலமாக என்னிடத்தில் பேசினார். அப்போது சாராள் அறுபத்தைந்து வயதுடையவளாயும், நான் எழுபத்தைந்து வயதுடையவனாயும் இருந்தோம். பதினாறு வயதுடையவளாயிருந்த போது, அவளை நான் விவாகம் பண்ணினேன். அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரியாயும் இருந்தாள். அவள் மலடியாக இருந்தாள், நானும் அவ்வாறு இருந்தேன். அவள் மலடியாயிருந்தாள். நான் வயது முதிர்ந்தவனா யிருந்தேன். ஆகவே நாங்கள் குழந்தையை பெற்றுக்கொள்வோம் என்பதற்கு ஒரு வழியும் இல்லாதிருந்தது. அவ்வாறே நாங்கள் ஜீவித்து வந்தோம். வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் தேவன் அதை வாக்குப்பண்ணினார். ஆகவே குழந்தைக்கு வேண்டிய எல்லா ஆயத்தங்களையும் செய்தோம். ஊசிகள், ஊக்குகள் இப்படி எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக்கொண்டு குழந்தைக்காக ஆயத்தமானோம். காலுறைகள் இன்னும் அனைத்தும். சாரா ளுக்கோ ...” என்று ஆபிரகாம் கூறினார். “முதல் மாதம் கடந்து சென்றது, 'சாராளே?' என்றழைத் தேன். ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு முடிந்து இருபதாண்டுகள் கடந்து விட்டது. அதை நினைவில் கொள்ளுங்கள். பாருங்கள்? இப்போது கடந்த - கடந்த இருபத்தியெட்டு நாட்களில் சாரா ஏதாவது வித்தியாசம் தெரிந்ததா?' என்று கேட்டேன்.” “இல்லை, ஒரு வித்தியாசமும் இல்லை” என்றாள். “நல்லது, எப்படியும் நாம் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதை அறிந்துள்ளேன். அவ்வாறு கடந்து கடந்து சென்றோம், இவ்வாறு வருடங்கள் கழிந்தன. எனினும் நான் தேவனை விசுவாசித்தேன்.” 39“திரு.அவிசுவாசி, திரு.கடவுள் நம்பிக்கையற்றவர், திரு.பொறுமையற்றவர், அந்த விசுவாசத்தை விட்டு என்னை விலக்கிக் கொள்வதற்கு அவர்களால் முடிந்த மட்டும் முயற்சி செய்தார்கள். நான் தவறு என்று கூற முயற்சித்தார்கள். 'ஆபிரகாமே, நீ ஒரு நல்ல மனிதன், நல்ல விவசாயி என்றெல்லாம் எல்லோருமே நினைக்கிறார்கள். ஆனால் நீயோ மிக ஆழத்திற்கு சென்று விட்டாய். சத்தியம் இல்லாத ஒன்றை சத்தியம் என்று நம்புகிறாய். வயதுசென்ற உன்னைப்போல் ஒரு மனிதனுக்கும், வயது முதிர்ந்த சாராளைப் போன்ற ஒரு மனுஷிக்கும் குழந்தை பிறக்கும் என்பது விஞ்ஞானத்திற்கு முரணானது' என்றெல்லாம் கூறினார்கள்.” “எப்படியாயினும் நான் தேவனை விசுவாசித்தேன்! இவைகளுக்குப் பின், இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு. எப்பொழுது அந்தக் குழந்தை பிறக்கும் என்று அவர் எனக்கு கூறவில்லை. அதை பெற்றுக்கொள்வேன் என்று மட்டும் கூறினார். நான் தேவனை விசுவாசித்தேன். அதற்கு முரணாக வந்த எதையும் நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.” 40“அவிசுவாசத்தினால் தேவனுடைய வாக்குத்தத்தத்தை அவர் அவமாக்கிப்போடவில்லை. 'நீ ஒன்றுமில்லை! உன்னால் எதுவும் முடியாது! அது நடக்காத காரியம்! அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதைப் பார்! உன்னையே சோதித்துப் பார்! நீ ஒரு பயித்தியக்காரன்!' என்று எத்தனை பரியாசக்காரர்கள் சொன்னா லும் சரி. ஆனால் அவர் சொன்னார், எல்லா நேரங்களிலும் விசுவாசத்தில் பலத்தின் மேல் பலமுடையவரானார்.” உண்மையான விசுவாசம் அதைத்தான் செய்யும். அதற்கு சந்தேகம் கொள்ளத் தெரியாது. அதை அறியாமலிருந்தாயானால், எதை எதை விட வேண்டுமோ அதையெல்லாம் உடனடியாக விட்டு விடுவாய். “ஆகவே, ஆபிரகாமே நல்லது, நீ ஒரு நல்ல சாட்சியைக் கொடுத்தாய் என்று நான் நான் நினைக்கிறேன்.” “முதல் மாதத்திலேயே நான் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்வேன் என்று வார்த்தை சொல்லவில்லை. ஆனால் அது நாங்கள் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வோம் என்று மட்டுமே கூறிற்று.” எல்லாம் சரி. உடனடியாக இன்னொரு சாட்சியை அழைப்போம். தீர்க்கதரிசியாகிய ஏசாயா. அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்போம். 41அவர் சொன்னார்; “ஏன்? தீர்க்கதரிசனத்தின் மூலமாக கர்த்தர் ஒருநாள் என்னுடன் பேசினார். நான் ஒரு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தேன். நான் என்ன கூறினாலும் கர்த்தர் அதை நிறைவேற்றி கனப்படுத்தினார். ஆகவே எல்லோரும் என்னை தீர்க்கதரிசி என்று விசுவாசித்தார்கள். இதை ஒவ்வொரு வரும் அறிந்திருந்தார்கள். ஒருநாள் ஒரு வினோதமான வார்த்தை உண்டாயிற்று. 'ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்' என்று அது கூறிற்று. நல்லது, இப்போது, அது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தது.” வழக்கமாக, வழக்கத்திற்கு மாறாக உள்ள காரியங் களில் தேவன் கிரியை செய்கிறவராக இருக்கிறார். பாருங்கள். அது மிகவும் வினோதமாயிருக்கும். யோசேப்பைப் போல. அவர்அவர் மரியாளை நம்ப விரும்பினார். ஆனால் அது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தது, மிகவும் முரணானதாக இருந்தது என்று பாருங்கள். ஆகவே அவர் சொன்னார், “நான் அந்த தீர்க்க தரிசனத்தை உரைத்தபோது, ஒவ்வொருவரும் அதை விசுவாசித் தனர். ஆகவே திருமணம் ஆகாத ஒவ்வொரு கன்னிப் பெண் களும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கன்னி வயிற்றில் பிறக்கும் அக்குழந்தையை பெற்றுக்கொள்ள வாஞ்சித் தார்கள். நாட்கள் கடந்தன. வருடங்கள் கடந்தன. பின்னர், நான் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று விசுவாசிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் நானோ இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களை செய்த அதே தேவன் தான் இதையும் உரைத்தார் என்பதை அறிந்தபடியால் நான் அதில் தரித்திருந்தேன். எண்ணூறு வருடங்களுக்குப்பிறகு குழந்தை பிறப்பதற்கு முன் ஒரு கன்னிகை கர்ப்பவதியானாள். அவருடைய வார்த்தைகள் நிறைவேறிற்று.” உடனடியாக அடுத்த சாட்சியை நாம் அழைப்போம். மோசேயை அழைப்போம். “மோசே, நீ இவ்விதமாய் பிறந்தாய்....” 42எல்லாத்தீர்க்கதரிசிகளுமே முன்குறிக்கப்பட்டவர்கள் என்பதை நாம் அறிவோம். “வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலேயே இருக்கும்.” எரேமியாவிடத்தில் தேவன் கூறினார், “உன் தாயின் வயிற்றில் உற்பத்தியாவதற்கு முன்னமே, உன்னை அறிவேன், உன்னை பரிசுத்தப்படுத்தினேன், தேசங் களுக்கு தீர்க்கதரிசியாக பிரதிஷ்டை பண்ணினேன்” என்று. ஏதேன் தோட்டத்திலிருந்தே இயேசு கிறிஸ்து ஒரு ஸ்திரீயின் வித்தாக இருந்தார். யோவான் ஸ்நானகன் பிறப்பதற்கு முன்னமே, ஏழுநூற்று பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் ஏசாயா அவனைப் பார்த்தார். பார்த்து, 'கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுங்கள்' என்று வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தமுடைய வனாயிருப்பான்“ என்றார். பாருங்கள், வரங்களும் அழைப்பும் ஒருவர் தலையில் ஒருவர் கையை வைப்பதனால் வருவதல்ல. அவ்வாறு தான் தேவன் செய்கிறார். பாருங்கள், பிறப்பு, அந்தப் பிறப்பிலிருந்தே அந்த வரங்கள் உனக்குள் இருக்கிறது. கவனியுங்கள், நீ பிறக்கும் போதே... 43மோசே ஒரு தீர்க்கதரிசியாயிருக்கும்படி பிறந்தார். இங்கே வனாந்திரத்தில் நாற்பது ஆண்டுகளாக எல்லாவற்றையும் மறந்தார் - எகிப்தில் கற்ற கல்வியனைத்தையும் மறந்தார். அப்போது தேவன் அவனை சந்தித்தார். அடையாளத்தின் மூலமாக, சத்தத்தின் மூலமாக, அக்கினிஸ்தம்பத்தின் மூலமாக அவனுடன் பேசினார். அது அவ்வளவு ஆவிக்குரியதாயிருந்தது. “மோசே, நான் உன்னோடு கூட இருக்கிறேன்” என்று அந்த சத்தம் உரைத்தது. “நீ என்னுடைய வாயாயிருப்பாய்” என்றார். மோசே சொன்னார், “நான் முறையிட்டேன். அதற்கு என்னுடைய வாய் தகுதியுடையதாய் இருக்கும் என்று நான் - நான் எண்ண வில்லை.” “நான்... நான் கொஞ்சம் திக்கு வாயுள்ளவன். என்னுடைய - என்னுடைய - என்னுடைய பேச்சு தெளிவாக இல்லை” என்றேன். “மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்?” என்று தேவன் என்னிடம் கூறினார். “இதை விசுவாசிக்க உன்னால் முடியவில்லையென்றால், உன்னுடைய சகோதரன் ஆரோன் இருக்கிறான், அவன் தெளிவாகப் பேசுவான். நீ தேவனாய் இருப்பாய். அவன் உன்னுடைய தீர்க்கதரிசியா யிருப்பான். அவனை கிரியை செய்ய அனுமதி. நீ வார்த்தையை பேசு. நான் உன்னுடைய வாயோடு இருந்து வார்த்தையை பேசுவேன்” என்று. இப்போது இது மிகவும் சரியான காட்சி யமைப்பாய் இருக்கிறது. ஆகவே நான் அங்கிருந்து கடந்து சென்றேன். “எல்லோரும் என்னைப் பார்த்து நகைத்தார்கள். ஏனெனில் அப்போது நான் எண்பது வயதுடையவனாயிருந்தேன். இவ்விதமாக வெண்தாடி கீழே வரைக்கும் தொங்கிக் கொண்டிருந்தது. கோவேறு கழுதையின் மேல் என் மனைவி அமர்ந்திருந்தாள். சிறிய கெர்ஷோம் அவளுடைய இடுப்பில் அமர்ந்திருந்தான். இவ்விதமாக எகிப்திற்கு பிரயாணமானேன். என் கண்கள் பரலோகத்தை நோக்கிக் கொண்டிருந்தது. இந்த வளைந்த பழைய தடி என்னுடைய கையில் இருந்தது. ”ஒரு தனிமனித படையெடுப்பு போல,“ எகிப்தை மேற்கொள்ள சென்று கொண்டிருந்தேன். அது என்னவாக இருந்ததோ அதை செய்தார். அது சரியே. ஒரு வளைந்த கோலைக் கொண்டு அவர் அதை செய்தார். ஒரு பலத்த இராணுவத்தைக்கொண்டு அவரால் அதை செய்யு முடியாது. ஆனால் தேவன் உரைத்தார். அது அப்படியே ஆயிற்று.” 44“ஆகவே, முதலாவதாக நான் பரிசுத்த பிதா, அந்த மேய்ப்பன் பார்வோனுக்கு முன்பாக வந்த போது, உங்களுக்குத் தெரியும், தேவன் செய்யச் சொன்ன அற்புதங்களைச் செய்தேன்; என்னுடைய கரத்தைக் கொண்டு ஒரு அடையாளத்தை செய்தேன், அல்லது அந்த வளைந்த கோணலான தடியைக் கொண்டு; நீங்கள் அறிவீர்கள், அங்கே இருந்த மேய்ப்பன் பார்வோன் என்னுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை. தொடக் கத்தில். ஆனால், என்னுடைய வழிகளை நான் தீவிரமாக்கினேன். நீங்கள் அறிவீர்கள், கர்த்தருடைய கிரியையை செய்ய முயற்சித் தேன். அது மிகவும் கடினமாக இருந்தது. அவன் சொன்னான் அவனிடத்தில் சில மந்திரவாதிகள் இருப்பதாகவும், நான் செய்த கிரியைகளை அவர்களும் செய்வார்கள் என்றும் கூறினான். உலகப்பிரகாரமாக பாவனை செய்கிறவர்கள் பாவனை செய்வதற் கென்று எழும்பினார்கள்.” ஒவ்வொரு அசைவிலும் சாத்தான் அதைத்தான் செய்து வருகிறான். பாவனை செய்கிறவர்கள் யாரோ ஒருவர் ஒன்றை செய்கிறார், மற்றொருவர் அதையே பாவனை செய்ய முயற்சிக்கிறார். “அந்த மாம்சீக பாவனை செய்கிறவர்கள் வந்தபோது, அந்த கோல்கள் எல்லாம் சர்ப்பமாக மாறின. நான் செய்ததை போலவே அவர்களும் செய்தார்கள். பார்வோன் சொன்னான், இது ஒரு மாய வித்தையே தவிர வேறொன்றும் இல்லை. ஒரு திறன் வாய்ந்த மாய வித்தைக்காரன். அதே காரியங்களை அதே விஞ்ஞான வளர்ச்சியை நாமும் பெற்றுள்ளோம். நாமும் அதே போல செய்து காண்பித்தோம். இப்போது, நமக்கு மருத்துவ மனைகள் மற்றும் எல்லாம் உண்டு' என்று. உண்மையாகவே அதை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் தேவன் அதை உரைக்கவில்லை. பாருங்கள்?” இப்போது, அவர் சொன்னார், “கவனியுங்கள், என்னு டைய தரப்பில் செய்யப்பட்டதையெல்லாம் அவர்களும் செய்தனர். அதை கடினமுடையதாகச் செய்ய முயற்சி செய்தான். ஆனால் நான் சாதகமான எண்ணத்தை உடையவனாக இருந்தேன். தேவன் எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாகவும், உரைக்கப்பட்ட வார்த்தையின் மூலமாகவும் பேசிய, எழுதி வைத்த வார்த்தைகள் யாவும் இந்த யுகத்திற்குரியவை என்பதை அறிந்திருந்தேன். ஆகவே அவ்வார்த்தைகளை இறுகப்பிடித்துக் கொண்டேன். அவர்களை எல்லாம் என்னை விட்டு அப்புறப்படுத்தினார். கடைசியாக எங்களை அவர் சொன்ன அம்மலைக்கு அழைத்து வந்தார். நீண்ட நெடிய காலத்திற்குப்பிறகு, அது ஒருநாள் அல்ல, நீண்ட காலம், அதற்குப்பிறகு அவர் அடையாளமாகக் கூறின அந்த மலைக்கு கடைசியாக வந்து சேர்ந்தோம். நான், திரும்பவும் இந்த மலைக்கு வருவாய்' என்னும் வார்த்தையை இறுகப்பற்றிக் கொண்டிருந்தேன்.” 45இன்னொரு சாட்சியை உடனடியாக அழைப்போம். அவர் என்ன சொல்கிறார் என்பதை கேட்போம். இங்கிருந்து கடந்து செல்வதற்கு முன்பாக, இங்கே யோசுவாவை இழுப்போம். யோசுவா சொன்னார், “மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், ஒவ்வொரு ஸ்தாபனத்திலிருந்தும் ஒரு நபரை தெரிந்தெடுத்தார். அந்த தேசத்தை வேவு பார்க்க எங்களை அனுப்பினார். அந்த நதியோரம் நாங்கள் சென்றபோது, அப் புறத்தில் அந்த அமலேக்கியர்களையும், எமோரியர்களையும், பெரிசியர்களையும் இன்னும் மற்றவர்களையும் பார்த்தோம். அவர்கள் அரக்கர்கள் பலவான்கள் என்றனர். இதைச்சொன்ன உடனே ஜனங்கள் பயத்தினால் அலறினார்கள். ”நல்லது, நம்மால் முடியாது!“ என்றார்கள். அப்படிப்பட்ட கூட்டம் ஒன்றுக்கு ஒத்தாசை செய்வோமானால், நம்முடைய ஸ்தாபனம் நம்மை புறம்பே தள்ளிவிடும். நாம் அதை செய்ய முடியாது. அதைப் போன்ற காரியங்களை நம்மால்-நம்மால் கொண்டிருக்க முடியாது. மிகவும் மந்தாரமான சூழ்நிலை. பாருங்கள். நம்மால் முடியாது. நடக்கக் கூடாத காரியம். ஆனால் அவர்கள் திரும்பி வந்தபோது ஒருசாட்சியைக் கொண்டு வந்தார்கள். அந்த தேசத்தில் விளைந்த திராட்சைக் குலையை கொண்டு வந்தார்கள்.” 46இதில் பிரச்சனை என்னவென்றால், ஒரு மனிதனோ அல்லது ஒரு சபையோ, அல்லது ஒரு ஸ்தாபனமோ, அவர் ஜீவிக்கிறார் என்பதற்கான அத்தாட்சியை ருசித்த பிறகு, நம் மத்தியில் அவர் உயிர்த்தெழும் போது எவ்வாறு மறுதலிக்க முடியும்? பெந்தெகோஸ்தே சபையே, நீங்கள் எவ்வாறு அதைச் செய்ய முடியும்? அந்நிய பாஷையில் பேசினீர்கள், அதை மொழிபெயர்க்கிறீர்கள், அவ்வாறு கூறிக்கொள்கிறீர்கள், இந்த யுகத்திற்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை எவ்வாறு புரட்டி போட முடியும்? அதிலே பங்கு பெறுகிறீர்கள், “அது நல்ல தேசம் என்றும், சொந்த கருத்து எதுவும் கிடையாது!” என்று கூறுகிறீர்கள். அது நல்ல தேசமாக இருந்தது. அது செழிப்பான தேசம் என்று நிரூபிக்கப்பட்டது. அந்த ஒரு குலை திராட்சை பழமே எல்லாமும் என்றில்லை. பாலஸ்தீனா முழுவதும் அப்படி நிரம்பியிருக்கிறது! அந்நிய பாஷையில் பேசுவதை நாம் விசுவாசிக் கிறோம். மற்ற எல்லா அற்புதங்களையும், வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பது மற்றும் இன்னபிற காரியங்களையெல்லாம் விசுவாசிக் கிறோம். “சோதோமின் நாட்களில் நடந்தது போல” என்ற வாக்குத்தத்தம் வரும்போது, அல்லது வேறு ஏதோ ஒன்று. மல்கியா 4 சொல்லுகிறது, “சோதோம் எரிந்து தீக்கிரையானது போல, அந்த பெரிதும் பயங்கரமுமான நாளில், புறஜாதி உலகம் எரிந்து சாம்பலாகும். பின் துன்மார்க்கர்களின் சாம்பலில் நீதிமான்கள் நடப்பார்கள். அபிஷேகம் பண்ணப்பட்ட எலியாவை உங்களுக்கு அனுப்புவேன். அவர் வந்து பிள்ளைகளுடைய இருதயத்தைப் பிதாக்களுடைய விசுவாசத்திற்குத் திருப்புவார்.” “பின்னால் திரும்புதல்” எல்லாக் காலங்களிலும், ஒவ்வொரு காலத்திலும் அவர் வருகிறார். அது அவ்வாறு சம்பவித்தது. அவர் கிறிஸ்துவையும், வாக்குத்தத்தத்தையும், தீர்க்கதரிசிகளையும், வார்த்தையையும் மற்றும் ஒவ்வொன்றையும் கொண்டு வந்து, அது தன்னை பரிபூரணமாக அடையாளப் படுத்தும் போது, நீ அதை ஏன் சந்தேகிக்கிறாய். இவைகள் எல்லாம் சம்பவித்தும் கூட, வார்த்தையைப் புரட்டி, “இல்லை, அந்தக் கூட்டங்களோடு ஒத்துழைக்காதீர்கள். அந்தக் கூட்டங் களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், உன் சம்பந்தப்பட்ட ஆவணங் களையெல்லாம், உன்னிடம் திரும்ப கொடுத்து விடுவோம்” என்று ஏன் சொல்கிறாய்? 47அது என்னுடைய பங்களிப்பாக இருக்கிறது. அவர்கள் வேண்டுமானால் ஆட்டுத்தோலை போரத்திக்கொள்ளட்டும்! என்னுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு விசுவாசிகளின் பெயரும் அதில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் திரும்பி வந்தார்கள். “அவர்கள் எல்லோரும் வந்தபோது...” என்று யோசுவா சொன் னான். இந்தப் பொருளில் நான் நீண்ட நேரம் தரித்திருக்க முடியும். ஆனால் நான் என்ன பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்ற நிச்சயமுடையவனாயிருக் கிறேன். ஆகவே, யோசுவா சொன்னான், “நான் ஜனங்களை அமைதலடையச் செய்தேன்.'' மேலும் சொன்னான், ”அவர்கள் பார்வைக்கு எவ்வளவு பெரியவர்களாக காணப்படுகிறார்கள் எனபதைப்பற்றி நான் அக்கறை கொள்ளவில்லை. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் சரி, அது எவ்வளவு பயித்தியமாக இருந்தாலும் சரி! அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. “இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன் அதை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று நாம் எகிப்தில் இருக்கும் போது தேவன் நமக்குச் சொன்ன வார்த்தைகளை நினைவுகூருங்கள்“ என்று யோசுவா கூறினான். அங்கே போவோம். பட்டணத்தைப் பிடிப்போம். கோட்டைச் சுவர்களையெல்லாம் உடைப்போம். அங்கே வந்து, மோரிஸ் நாற்காலிகளைப்போட்டு, உட்கார்ந்து, “உங்களுக்கு படுக்கைகளை ஆயத்தப்படுத்த இளம் கன்னியர்களை வைத்திருக்கிறோம்” என்று கூறவில்லை. அப்படிப்பட்ட வழியில் அவர் அதை செய்யவில்லை. நீங்கள்.... தேவன் யோசுவாவிடத்தில், “உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்” என்று சொல்லியிருந்தார். காலடிகள் என்றால் சுதந்திரமாகப் பெறுவது என்று பொருள். பரிசுத்த வேதாகமத்தி லுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் விசுவாசிகளுக்குரியது. ஆனால் அந்த வாக்குத்தத்தங்களின் வழியாக உன் அடிச் சுவடுகளைப் பதிக்க வேண்டும். ஒவ்வொரு அங்குலத்திற் காகவும் நீ போராட வேண்டும். அதைக்குறித்து உனக்குள் போராட்டம் இருக்குக்கூடாது. அவ்வாறு இருக்குமானால், யுத்த களத்திலிருந்து உன்னை விலக்கிக்கொள். 48சமீபத்தில், இங்கே, (அது இந்த மாகாணத்தில் இருக்கிறது என்று நம்புகிறேன்) ஜார்ஜியா டெக் அல்லது ஏதோ ஒரு மேலே இருக்கிற இடத்திற்கு சென்றேன். அது கிழக்கிலே இருக்க வேண்டும். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இப்போது அறிந்து கொண்டேன். ஒரு கால்பந்து விளையாட்டு மைதானத்திற்கு சென்றேன். ஒரு சிறிய அடையாளத்தைப் பார்த்தேன். அது எப்போதும் என்னை ஊக்குவித்திருக்கிறது. ஆடை அணியும் அறையிலிருந்து நான் வெளிவரும்போது, அந்தக் கதவின் மீது ஒரு அடையாளத்தைப் பார்த்தேன். அது ஒரு அடையாளமாக இருந்தது. அங்கே இவ்விதமாக எழுதப்பட்டிருந்தது. “நாயின் அளவு எவ்வளவு என்பதைப் பொருத்து சண்டை அமையாது. அது நாய் போடும் சண்டையின் அளவை பொருத்தேயுள்ளது” என்று. அதுதான் சரியானதாகும். நீ எவ்வளவு டி.டி.டி., பி.எச்.டி., எல்.எல்.டி. பெற்றுள்ளாய் என்பதல்ல. நீ எவ்வளவாய் கிறிஸ்துவை உன்னில் கொண்டுள்ளாய் என்பதைப் பொருத்தே உள்ளது. இதை எப்படி விவரித்து சொல்லுகிறாய், அதை எப்படி விவரித்து கூறுகிறாய் எனபதல்ல காரியம். உனக்குள் எவ்வளவு விசுவாசத்தை கொண்டுள்ளாய் என்பதைப் பொருத்தே இருக்கிறது. விவரித்து சொல்லுகிற வழிமுறைகள் அல்ல. தேவனிடத்தில் நீ எவ்வளவு விசுவாசம் வைத்துள்ளாய் என்பதாக அது இருக்கிறது, அவர் சத்தியத்தையே பேசுகிறார் என்பதை விசுவாசிக்க வேண்டும். நல்லது, அது உன்னைப் பொருத்தேயுள்ளது. அது நீ எத்தகைய இனம் என்பதைப் பொருத்தது. நீ ஆபிரகாமின் வித்தாயிருப்பாயானால், ஆபிரகாம் என்ன செய்தானோ அதைப்போல நீயும் செய்வாய். “இல்லாதவைகளை இருப்பதை போல விசுவாசித்தான்.'' 49“அமைதியாயிருங்கள்! தேவன் கூறினார்! என்று கூறி ஜனங்களை அமைதிப்படுத்தினேன்” என்று யோசுவா இப்போது கூறினார். (சகோ. பிரான்ஹாம் எட்டு முறை பிரசங்க பீடத்தை தட்டுகிறார் - ஆசிரியர்.) “தேவன் கூறினார், அது உண்மை . ஆனால் காதேஸ் - பர்னேயாவுக்கு செல்ல இரண்டு நாள் பயண தூரம் தான் என்று உங்களுக்குத் தெரியும். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் இருக்க அவர்களுக்கு இரண்டு நாட்களே இருந்தது.” ஆனால், “அந்த தேசத்தை எடுத்துக்கொள்ளும் முன்பாக நாற்பது வருடங்கள் ஆனது. எப்போது அந்த தேசத்தை எடுத்துக்கொள்வோம் என்று அவர் கூறவில்லை. ஆனால், அவிசுவாசிகள், அந்த பழைய சந்ததி மரிக்குமட்டும் விசுவாசிக் கிற இன்னொரு சந்ததியை எழுப்புவதாக சொன்னார். எப்போது அந்த தேசத்தை எடுத்துக்கொள்வோம் என்று கூறவில்லை. ஆனால் அவர்கள் அதை சுதந்தரிப்பார்கள் என்று கூறினார். நாங்கள் சுதந்தரித்துக் கொண்டோம்!” என்று யோசுவா கூறினான். அவர் ஒரு நல்ல சாட்சி என்று நினைக்கிறேன். (சபையார், “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசிரியர்.) அதைச் செய்வோம். “பல வருடங்களுக்குப்பிறகு, அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டோம்.” 50இப்போது நேரம் தாமதித்து விட்டது. நான் இன்னுமொரு சாட்சியை அழைக்கட்டும். நாம் அவ்வாறு செய்வோமா? இங்கே ஒரு பன்னிரெண்டு சாட்சிகளின் பெயர்களை எழுதி வைத்துள் ளேன். ஒரு நூறு அல்லது இருநூறு பேரை நம்மால் சாட்சிக்கு அழைக்க முடியும். ஆனால் இன்னும் ஒரு சாட்சியை மட்டும் நான் அழைக்கட்டும். நீங்கள் என்னை மன்னிப்பீர்களானால், நானே அந்த சாட்சியாக இருக்கப் போகிறேன்? (சபையார், “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசிரியர்.) அவருக்காக நான் நிற்க விரும்புகிறேன். அது அவர்களுடைய காலமாக இருந்தது; இப்போது இது நம்முடைய நேரம். அது அவர்களுடைய சாட்சியாக இருந்தது, ஆனால் ஒருமுறை சாட்சியின் ஸ்தானத்தை நான் எடுத்துக்கொள்ளட்டும். ஓ, என்னே! நான் ஒரு சிறு பையனாக இருந்ததை நினைவு கூருகிறேன். என்னுடைய வாழ்க்கை சரித்திரத்தை நீங்கள் வாசித்திருப்பீர்கள். அந்தச் சரித்திரத்தை நீங்கள் அறிவீர்கள். அங்கே கீழேயிருக்கிற அந்த நதியை நினைவில் வைத்துள்ளேன். ஞாபகத்திற்கு கொண்டு வருகிறேன். அப்போது நான் ஒரு வாலிப பாப்டிஸ்டு பிரசங்கியாயிருந்து, ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் பிற்பகல் வேளையில் பத்தாயிரம் ஜனங்கள் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தனர்... என்னுடைய முதலாவது மகத்தான எழுப்புதல் கூட்டத்தில் ஏறக்குறைய ஆயிரம் பேர் மனந்திரும்பியிருந்தார்கள். அங்கே, அந்தத் தண்ணீரில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தேன். பதினேழாவது நபருக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்காக அவரை தண்ணீருக்குள் வழிநடத்தினேன். அப்போது ஒரு சத்தத்தைக் கேட்டேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். அது உஷ்ணமான ஒரு நேரம். அது 1933-ம் வருடம் ஜூன் மாதமாகும். இந்தியானாவில் உள்ள ஜெபர்ஸன்வில்லில் ஸ்பிரிங் தெருவின் அடிவாரத்தில் இது நிகழ்ந்தது. ஒவ்வொருவருக்காய் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தேன். நதிக்கரையானது மேலும் கீழுமாக ஜனங்களால் நிரம்பியிருந்தது. 51இந்த சிறிய பையனோடு வெளியே நடந்தேன். அவ னைப் பீடத்தண்டையில் பார்த்தேன். “மகனே, இயேசு கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வாயா?” என்று கேட்டேன். “நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று அவன் கூறினான். அவனுடைய பெயர் எட்வர்ட் கால்வின் என்பதாகும். “எட்வர்ட், இப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டேன் . “நான் அதை அறிவேன், சகோ. பிரான்ஹாமே” என்று அவன் கூறினான். “நீ இயேசு கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுவிட்டாய் என்பதை இந்த ஜனங்களுக்குக் காண்பித்து, உனக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கி றேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது, நீ அவருடைய நாமத்தைப் பெற்றுக் கொள் கிறாய். புதிய ஜீவியத்திற்காக எழுந்திருக்கிறாய். இந்த இடத்தை விட்டு நீ கடந்து செல்லும்போது, ஒரு புதிய ஜீவனுக்குள் நீ நடக்க வேண்டும். எட்வர்டு, இதை நீ புரிந்து கொண்டாயா?” என்று கூறினேன். “நான் புரிந்திருக்கிறேன்” என்று அவன் கூறினான். “உன் தலையை தாழ்த்து” என்று நான் கூறினேன். “பரலோகப் பிதாவே, இந்த வாலிப மனிதன் உம்மில் கொண்டுள்ள விசுவாசத்தை அறிக்கை செய்தான். ”நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்“ என்று நீர் எங்களுக்கு கட்டளை கொடுத்தது போல, ”நீர் எங்களுக்குப் போதித்த எல்லாவற்றையும் விசுவாசிக்கும்படிக்கு, இவர்களுக்கு கட்டளை கொடுக்கிறேன் “ என்று ஜெபித்தேன். “ஆகவே என் அன்பான சகோதரனே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உனக்கு ஞானஸ்நானம் கொடுக் கிறேன்.” அவனை தண்ணீருக்குள் மூழ்கச் செய்தேன். நான் நிமிர்ந்து பார்த்தேன். ஏதோவொன்று, “உஷ்...” என்று போய்க் கொண்டிருந்த ஒரு சத்தத்தைக்கேட்டேன். நான் ஜனக்கூட்டத் தைக் கவனித்தேன். மேலும் அது.. “மேலே நோக்கிப்பார்!” என்று கூறின ஒரு சத்தத்தைக்கேட்டேன். “அது என்ன?” என்று எண்ணினேன். நாங்கள் திரு மணம் செய்து கொள்வதற்கு இரண்டு அல்லது மூன்று வருட்களுக்கு முன்பாக, பில்லி, அவனுடைய தாயார். அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தைப் பார்த்தேன், அது (பயத்தினால்) வெளிறிப்போயிருந்தது. அவளுடைய கையில் ஒரு புகைப்படக் கருவி வைத்திருந்தாள். 52“மேலே நோக்கிப்பார்!” இந்த சத்தத்தை நான் இரண்டா வது முறையாகக் கேட்டேன். நான் பயந்து நடுக்கமுற்றேன். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அங்கு பார்த்துக் கொண்டிருந்த ஜனங்கள் வாயடைத்துப்போய், பயந்து, திகைத்துக் கொண்டிருந் தார்கள். “மேலே நோக்கிப்பார்!” என்று சொன்ன சத்தத்தை மீண்டும் கேட்டேன். நான் மேலே நோக்கிப் பார்த்த போது, இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தர வழியாய் நடத்தின அதே அக்கினிஸ்தம்பம் இங்கே வந்தது. ஆயிரக்கணக்கான கண்கள் அதைக் கண்டன. நான் எங்கே நின்று கொண்டிருந்தேனோ, சரியாக அதே இடத்திற்கு கீழே இறங்கி வந்தது. “கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்னோடியாக, யோவான் ஸ்நானகன் அனுப்பப் பட்டது போல, உன் செய்தியும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக சென்று பூமியை நிரப்பும்” என்று சத்தம் உரைத்தது. அந்நிகழ்வு ஒருங்கிணைந்த பத்திரிகையிலும் (Associated Press), செய்தித்தாளிலும் வெளிவந்தது. முனைவர் லீ வேயில் இங்கே இந்த நாள் பிற்பகல் வேளையில் அதைத் தெரிந்தெடுத்து கனடா மற்றும் அதைச்சுற்றியுள்ள நாடுகளில், “உள்ளூர் பாப்திஸ்து பிரசங்கியார் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த போது, அவர் மேல் ஒரு தெய்வீக ஒளி காட்சி யளித்தது” என்னும் செய்தியைப் பரப்பினார். சில வருடங்களுக்கு முன்பாக, ஹூஸ்டன், டெக்ஸாஸ் அல்லது டல்லாஸ், டெக்ஸாஸ் என்னும் இடத்தில் நடந்தது. அதை ஜனங்கள் சந்தேகித்த போது, நான் செய்வதறியாது திகைத்தேன். “தெய்வீக சுகமளித்தல் என்பது ஒன்றும் கிடையாது” என்ற பொருளில் ஒரு நல்ல பாப்திஸ்து பிரசங்கியார் சகோ. போஸ் வர்த்துடன் வாதிட விரும்பினார். அவர் முற்றிலுமாக அதில் தோல்வியுற்ற போது, “அந்த தெய்வீக சுகமளிப்பவர் வரட்டும், வந்து சுகமாக்குவதை நான் பார்க்க வேண்டும்!” என்று சொல்ல ஆரம்பித்தார். நான் கூறினேன்... நான் மாடியின் முகப்பில் இருந்தேன். கீழே இறங்கி வந்தேன். “ஐயா, நான் ஒரு தெய்வீக சுகமளிப்பவன் அல்ல” என்று கூறினேன். 53(ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) “....இயேசுவே, ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ கூறுங்கள்? அவர் களுக்கு உங்களால் பதில் கூற முடியாது. ஒரேயொரு கேள்வி தான். அதுவே போதுமானதாக இருந்தது. அவர் யெகோவா யீரேயாக இருப்பாரானால், அவர் அப்படித்தான் இருக்க வேண்டும்; அவர் அவ்வாறு இல்லையென்றால், அவர் ஒரு இரட்சகரல்ல. உங்களால் பெயர்களைப் பிரிக்க முடியாது. அவர் யேகோவா - ரஃபா, சுகமாக்குகிறவர்! 'நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.'' அந்த மனிதனால் அங்கிருந்து நகர்ந்து செல்ல முடியவில்லை. அங்கே நின்று கொண்டு பேசுவதற்கே தடு மாறினார். உங்களில் அநேகர் அங்கிருந்து அதைக் கேட்டீர்கள் என்று அநுமானிக்கிறேன். அத்தகைய வாதம், திரு.போஸ்வர்த் துக்குத் தைரியத்தைக் கொடுத்தது. அது நடந்த போது, அந்த பாப்திஸ்து பிரசங்கிக்கு ஒரு விஷயம் கூட கிடைக்கவில்லை, அது... அங்கிருந்தவர்களெல்லாம் அந்த நகரத்தின் அதிகாரிகளா யிருந்தனர். வேதம் என்ன கூறுகிறது என்பதை அறிந்திருந்தும் கூட எந்தப்பக்கத்திலும் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அதன் பின்னும், “அவர் வரட்டும்” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நான் மேலே இருந்தது அவர்களுக்குத் தெரியாது. அங்கே என்னுடைய மனைவி மற்றும் சிறிய பெக்கி இவர்களுடன் அமர்ந்திருந்தேன். உயர்நிலைப்பள்ளிப்படிப்பை முடித்து, இந்த வருடத்தில் பட்டப்படிப்பு படிக்கிறாள். நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அவள் ஒரு வயதுடையவளா யிருந்தாள். என்னுடைய கரங்களில் அவளை ஏந்திக் கொண்டிருந் தேன். “சகோ.பிரான்ஹாம் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார் என்பதை நான் அறிவேன். அவர் விரும்பினால், வந்து இதை முடித்து வைக்கவும், சரியா” என்று சகோ. போஸ்வெர்த் கூறினார். ஆனால் நான் கூறினேன்... ஒவ்வொருவரும் சுற்றுமுற்றும் பார்க்க ஆரம்பித்தனர். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, ஏறக்குறைய முப்பதாயிரம் ஜனங்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர். இசை அரங்கத்தில் எண்ணூறு பேரை மட்டுமே கொண்டவர்களாக இருந்தோம். ஜனங்கள் விமானங்கள் மூலமாகவும், தொடர் வண்டிகள் மூலமாகவும் வந்து கொண்டிருந்தனர். வேறு சில வாகனங்கள் மூலமாகவும்..... 54பெந்தேகொஸ்தே குழுவினர் எல்லோரும் அங்கே ஒன்று கூடினர் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன். ஒரு உபத்திரவம் உண்டாகும்போது, அது ஜனங்களை ஒன்றுகூட்டுகிறது. இதை நீங்கள் நம்ப மாட்டீர்கள், ஆனால் அந்த மணி நேரம் வரும்போது.... பாருங்கள், ஒருத்துவக்காரர்கள், இருத்துவக்காரர்கள், திரித்துவக்காரர்கள், நான்கத்துவக்காரர்கள் இன்னும் என்ன வெல்லாமோகாரர்கள் எல்லோரும் ஒன்று கூடினார்கள். அவர்கள் அனைவரும் “தெய்வீக சுகமளித்தல்” என்பதில் பொதுவான விசுவாசம் வைத்திருந்தனர். அவர்கள் எல்லோரும் அங்கே யிருந்தார்கள். “ஒருகூட்ட பரிசுத்த உருளைகள் தவிர, தெய்வீக சுகமளித்தல் என்பதை ஒருவர் கூட விசுவாசிக்கமாட்டார்கள்'' என்று அந்த மனிதன் கூறினான். ரேமாண்ட் ரிச்சி என்பவர் எழுந்து, “பரிசுத்த உருளைகள் என்று கூறினாயே, அதை எப்படி கூறலாம்?” என்று கேட்டார். “பயித்தியக்கார ஜனங்கள் என்று எப்படி கூறலாம்?” என்று கேட்டார். அதற்கு அவர், “பாப்டிஸ்ட்” என்றார். “எல்லாம் சரி. சகோ.பிரான்ஹாம் இங்கு இருந்தபோது, இயேசு கிறிஸ்துவினால் சுகமடைந்ததற்கான மருத்துவ சான்றிதழ் வைத்துள்ளவர்கள் எத்தனை பேர் இக்கட்டிடத்தில் இருக்கி றீர்கள்? உங்களால் அதை காண்பிக்க முடியுமா?” என்று கேட்டார். முந்நூறு பேர் எழுந்து நின்றார்கள். “அதைக் குறித்து என்ன?” பாருங்கள்? ஆகவே சண்டையிடுவதற்கான கோபத்தையுடையவ ரானார். நான் கீழே இறங்கி நடக்க வேண்டும் என்று நினைத்தேன். “கீழே இறங்கி செல்” என்று பரிசுத்த ஆவியானவர் கூறும் சத்தத்தை கேட்டேன். நான் கவனித்தேன். நான் எங்கேயிருந்தேனோ அங்கே அந்த ஒளி தொங்கிக் கொண்டிருப் பதைக் கண்டேன். கீழே இறங்கி அங்கு சென்றேன். “அந்த வரம் கேள்விக்குறியாக இருந்தால், அது வேறு காரியம். ஆனால் நான் ஒரு சுகமாக்குகிறவர் அல்ல. தேவனே சுகமாக்குகிறவர்” என்றேன். “நான் தேவனுக்காக சாட்சி கொடுப்பேனேயானால், தேவனும் எனக்காக சாட்சி கூறக் கடமைப்பட்டு இருக்கிறார்” என்று கூறினேன். 55இப்பொழுது, டக்ளஸ் புகைப்படக்கூடத்தை சார்ந்தவர் கள் அங்கே மிகப்பெரிய புகைப்படக் கருவியை வைத்திருந்தனர். அந்த ஊழியக்காரர், “அந்த வயதான மனிதனை சில புகைப்படம் எடுங்கள்; அவருடைய தோலை உரித்து காட்டப்போகிறேன். அவருடைய மறைவிடத்திலிருந்து அவரை இப்பக்கமாக வெளியே இழுக்கிறேன், அவருடைய தோலை என்னுடைய படிக்கும் அறையின் கதவில் தொங்க விடுகிறேன். தெய்வீக சுகமளித்தல் என்பதற்கான ஒரு ஞாபகக்குறியாக அது இருக்கும்” என்று கூறினார். ஒரு கிறிஸ்தவன் இன்னொரு கிறிஸ்தவரைப்பார்த்து இவ்வாறு கூறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? பாருங்கள், உங்கள் கனிகளினால் நீங்கள் அறியப் படுவீர்கள். ஆகவே, அவன் அவ்வகையான ஆறு புகைப்படங் களை எடுத்தான். அவர் தன் கைவிரல்களை மடக்கிக்கொண்டு சகோ.போஸ்வர்த்தினுடைய மூக்குக்கு கீழே வைத்து, வாக்கு வாதத்தைத் தொடங்குவதற்கு முன், (அவரைக் குத்துவது போல வைத்து), “இவ்விதமாக புகைப்படம் எடு” என்று கூறினார். அவனும் அவ்விதமாக எடுத்தான். சகோ.போஸ்வர்த் சாதாரண மாக அங்கு அமர்ந்திருந்தார். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதை எடுத்துக்கொண்டு புகைப்படக்கூடத்திற்கு சென்று பரிசோதித்த போது அதில் ஒரு படம் கூட இல்லை . ஒவ்வொரு படமும் மிகச்சரியாக அழிக்கப்பட்டு போயிற்று. ஒரு கடவுள் நம்பிக்கை யற்ற மனிதன், தன்னுடைய விரலை ஒரு தேவனுடைய மனுஷனுடைய மூக்கின் கீழ் இவ்விதமாக வைப்பதற்கும், அதை புகைப்படம் எடுப்பதற்கும் தேவன் அனுமதிக்க மாட்டார். 56நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். “தேவனுடைய வரமாகிய பகுத்தறிதலைக்குறித்த கேள்வியானால், அது வேதத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. அதை நிரூபிக்க முடியும். அதை நிரூபிக்க முடியும்” என்று கூறினேன். ஆனால் நான், “என்னைப் பொருத்தமட்டில் நான் சுகமாக்குகிறவன் அல்ல, இல்லை ஐயா, நான் சுகமாக்குகிறவன் இல்லை ஐயா” என்று கூறினேன். “ஒரு மனிதன் என்ற முறையில் உங்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். ஆனால் ஊழியக்காரன் என்ற முறையில் உங்களைக் குறித்து நான்-நான் அதிகமாக நினைப்பதில்லை” என்று அவர் கூறினார். நான், “எனக்குக் கொடுக்கப்பட்ட வெகுமதிகளை யெல்லாம் நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றேன். இவ்வாறு நான் அந்த இடத்தை விட்டு நடந்து சென்றேன். ஆகவே, “(சுகமாக்குதல்) நடப்பதைக் காண விரும்பு கிறேன். யாரோ ஒருவரை நீர் மனோவசியப்படுத்துவதைப் பார்க்க விரும்புகிறேன். இன்றிலிருந்து ஒரு வருடம் கழித்து என்ன நடக்கிறது என்று பார்க்கட்டும்” என்று கூறினார். அவர் சுற்று முற்றும் பார்க்க ஆரம்பித்தார். “தேவனுக்காக நான் பேசுவேன் என்றால், தேவன் எனக்காக பேசுவதற்குக் கடமைப்பட்டுள்ளார்” என்றேன். அதைக் காட்டிலும் மேலான வார்த்தைகள் எதுவும் பேசவில்லை. அந்த சுழற்காற்று இங்கேயும் வந்தது. சபையார் கூடியிருந்த அந்த இடத்தில் இறங்கி வந்தது. அங்கேயே அக்கினிஸ்தம்பம் வந்தது. அந்தப் பெரிய புகைப்படக்கருவி அதைப் படமெடுத்தது. துப்பறியும் ஸ்தாபனத்தின் தலைமை அதிகாரி ஜார்ஜ். ஜெ. லேஸி, கைரேகை ஆவணங்களை பரிசோதித்துப் பார்க்கக் கூடியவர். அந்த நாளின் நடு இரவில் அதை எடுத்துக்கொண்டு போனார். அவர்கள் அதை எல்லாவித சோதனைகளுக்கும் உட்படுத்தினர். அதில் ஒன்றில் மட்டுமே படம் இருந்தது. நீங்கள்.... உங்கள் வீட்டில் உள்ள அலமாரியில் எத்தனை பேர் அந்தப்படத்தை வைத்துள்ளீர்கள்? பாருங்கள்? வாஷிங்டனில், ஒரு மார்க்க சம்பந்தமான கலைக்கூட அரங்கத்தில் அது தொங்கிக் கொண்டிருக்கிறது. “உலக சரித்திரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இதுவே இயற்கைக்கு மேம்பட்ட புகைப்படம்” என்று குறிப்பு எழுதி வைத்துள்ளனர். அது என்ன? அதைக்கவனியுங்கள்! அதை இந்த வாரத்தில் கவனியுங்கள். அதைச் செய்தது எது என்று பாருங்கள். “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்!” எனக்கு இப்போது பத்தாயிரம் நாவுகள் இருந்தாலும், அவரைக் குறித்து என்னால் பேசி முடியாது. ஆம், ஐயா. 57முற்காலத்தைய அந்த நாட்களில், என்னுடைய மேய்ப்பர், “சிறுவனே, நீ ஒரு சொப்பனம் கண்டாய்!” என்றார். அவர் சொன்னதில் கவனம் செலுத்தவில்லை ..... முதலாவது நான் வெளியே புறப்படத்தொடங்கின போது, இந்த தேசத்தின் ஜனங்களாகிய உங்களைச் சந்தித்ததை நான் நினைவுகூருகிறேன். அவர், “முதல் வரம் உனக்குரியது” என்று கூறினார். அந்தச் சத்தத்திற்குப் பின்னால், “வியாதியஸ்தர் மேல் உன் கரங்களை வைப்பாயானால், நீ எதுவும் சொல்லத் தேவை யில்லை, அது என்ன வியாதி என்பதை அதுவே சொல்லும்” என்ற சத்தம் உண்டாயிற்று. அதை எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்துள்ளீர்கள்? (சபையார், “ஆமென்” என்கின்றனர் - ஆசிரியர்.) நான் சொன்னேன்.... “பின்னர் அது அவ்விதமாக நிறைவேறும்” அந்த இரவு அவர் என்னை கிரீன்மில்லில் சந்தித்த போது எனக்கு இவைகளைக் கூறினார். அவர்.... அதைக்குறித்து அவரிடத்தில் கேட்டேன். “தொடக்க காலத்தில் அதுவே வழியாக இருந்தது” என்று கூறினார். “நம்முடைய கர்த்தர், அதே போலத்தான் அவர்கள் - அவர்கள் செய்தார்கள்” என்றும் கூறினார். “அது நிறைவேறும் சமயம் இந்தமணி வேளைதான்” என்றும் கூறினார். 58மூடத்தனமான அநேக காரியங்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன என்பதை நான் அறிந்திருக்கிறேன். வேறு மனிதர் களின் சாட்சிகளுக்கு நான் பொறுப்பாளியல்ல. நான் எனக்காக மாத்திரம் பதில் அளிக்க வேண்டும். தேவனுக்காகவும், அவரு டைய வார்த்தைக்காகவும் நான் சாட்சிக் கூண்டில் நிற்கிறேன். அது சத்தியம் என்பதை நான் அறிவேன். அவர் பேசும் போது, நான் கேட்ட அவருடைய வார்த்தை என்னவென்றால், அதை நான் விசுவாசிக்கவில்லையென்றால், இந்த நாளுக்குரிய வாக்குத் தத்தத்தை வேதாகமத்தில் எங்கிருக்கிறது என்று அவர் எனக்குக் காண்பிக்கவில்லை என்று பொருள். அது சம்பவிக்கும் என்று நான் கூறினதை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளீர்கள்? “அவர்களுடைய இருதயத்தின் இரகசியத்தைக் கூட அறிவாய்” என்று கூறினார். அப்படியானால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். பாருங்கள்? அதை அவர் நிறைவேற்றினாரா?. (சபையார், “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசிரியர்.) இதை அவர் முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன் கூறினார். அது அப்போதே சம்பவிக்கவில்லை. ஒரு விதை முளைத்து வளர்வது போல, அவருடைய வார்த்தையும் அவ்வித மாக வளர்கிறது. அவர் ஜீவிக்கிறார் என்பதற்கு இன்று நான் ஒரு சாட்சியாக இருக்கிறேன். அவர் சுகமாக்குகிறார் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன். 59கவனியுங்கள். நமக்கு நேரம் அதிகமாக இல்லை . ஜெபவரிசைக்கு செல்ல வேண்டும். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இவ்விதமாக வழக்கை முடிக்கப் போகிறேன். எந்த சாட்சியை நீங்கள் விசுவா சிக்க விரும்புகிறீர்களோ அவ்விதமாகச் செய்யலாம். ஆனால் உங்கள் சிந்தையே நியாதிபதியாக இருக்கிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஒவ்வொரு வழக்கிலும், ஒரு நியாதிபதி இருப்பார். இதற்குப் பிறகு, நீங்கள் நடந்து கொள்ளும் விதமே தீர்ப்பை பிரதிபலிக்கும். “வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சுகமடைவார்கள்” என்று வேதாகமம் கூறுகிறபடி நாம் இப்போது செய்யப் போகிறோம். அது என்னவெனில், அவர்கள் விசுவாசி களாக இருக்க வேண்டும். “விசுவாசிக்கிறவர்களை இந்த அடை யாளங்கள் பின்தொடரும்.'' இப்போது நீங்கள் விசுவாசிப்பீர் களென்றால், நாங்களும் விசுவாசிப்போம்; நூற்றுக்கணக்கானவர் கள் இங்கே நிற்கலாம், தேசம் முழுக்க இன்னும் அநேகர் இருக்கிறார்கள். இங்கிலாந்திலுள்ள லண்டனில் மறைந்த ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேலின் கொள்ளுப்பேத்தி ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் (வியாதியில்) கிடந்தாள். அங்கே அந்த படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒன்றுமேயில்லை. ஒரு நிழல் போல காட்சி யளித்தார்கள். புற்று நோய் அவளைத் தின்று விட்டது. அடுத்த பக்கத்தில் நீங்கள் அவளுடைய படத்தைப் பார்க்கலாம்? 60காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உப்ஷாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் அறுபத்தாறு வருடங்களாக சக்கர நாற்காலியிலேயே இருந்தார். கலிபோர்னியாவில் அந்த இரவில் அவர் எழுந்து நின்றார். மேடைக்கு வந்து அங்கே நான் நின்று கொண்டிருந்தேன். அவர்கள் ஜெபவரிசையை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். “நான் ஒரு - ஒரு - ஒரு - ஒரு - கறுப்பு இன சகோதரி என் கண் முன் வந்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். அவளுடைய சிறு குழந்தையைக் கொண்டவளாயிருக்கிறாள். அருகே ஒரு மருத்துவர் நின்று கொண்டிருக்கிறார். அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தவர். அதனால் குழந் தைக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. அந்த மருத்துவர் மிகவும் ஒல்லியானவர். ஆமை ஓட்டு (tortoise shell glasses) கண்ணாடி யை அணிந்திருந்தார். அது குழந்தையை பக்கவாத நோய்க்குள் ளாக்கியது” என்று கூறினேன். அங்கே பாதையின் வெளியில் இருநூற்றியம்பது பவுண்டுகள் நிறையுள்ள வயது சென்ற ஜெமிம்மா என்னும் பெண்மணி தனித்தன்மையுடன் உள்ளே வந்தார்கள். காவலர் களை எல்லா பகுதியிலும் தள்ளிக்கொண்டு ஒரு தூக்குப் படுக்கையை (stretcher) தள்ளிக்கொண்டு வந்தார்கள். அதில் ஒரு குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. “கர்த்தாவே, இரக்கமாயிரும், அது என் குழந்தை” என்று கூறினாள். “சீமாட்டியே, நீ வரிசையில் வரமுடியாது. உன்னிடத்தில் ஜெப அட்டையில்லை” என்று காவலாளி கூறினார். நல்லது, “சீமாட்டியே....” என்று நான் கூறினேன். “நான் மேடைக்கு மேலே செல்லுகிறேன்” என்று கூறினாள். அவர்களால் அவளை தடை செய்ய முடியவில்லை. அவர்களைக் காட்டிலும் அவள் திடமும் கனமுமானவள். ஆகவே ஜெபவரிசையைத் தள்ளிக்கொண்டு மேடைக்குச் சென்று விட்டாள். அவள் மேடையை அடைந்தபோது, “ஒரு நிமிடம் பொறுங்கள் சீமாட்டியே... நீ எதற்காக இங்கே வந்தாய் என்பதை தேவனாகிய கர்த்தர் அறிவாரென்றால்” என்று நான் கூறினேன். “அது ஒரு குழந்தைக்காக, அது சரியா?” என்றேன். “அதைக் குறித்து என்னால் ஒன்றும் உனக்கு கூற முடியாது” என்றேன். “அந்தக் குழந்தைக்காக ஜெபிக்க மட்டுமே அறிந்துள்ளேன். இங்கேயே ஜெபம் ஏறெடுப்பேன்” என்றேன். “ஆனால் நான் எதைப் பார்த்தேனோ அதை மாத்திரமே கூறுவேன்” என்றேன். “ஐயா, அது இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தது” என்றாள். “என் குழந்தை, தொண்டை சதையை அவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றும் போது, அது குழந்தையை பக்கவாதம் அடைய செய்து விட்டது. அது முதல் பக்கவாதம் அடைந்து விட்டது” என்று கூறினாள். “நல்லது, உன்னுடைய விசுவாசம் அவரைத் தொட்டு, அவரைக் கீழே கொண்டு வருமானால், அங்கேயே சற்று உட்கார்ந்து நீ ஏன் ஜெபிக்கக் கூடாது?” என்று கேட்டேன். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். “நான் செய்தியில் கூறுவது போல....” அதே கருப்பின குழந்தை ஒரு தெருவில் சந்தின் வழியாக (அதை போன்ற) போய்க்கொண்டிருந்தாள். பின்பு நான் பார்த்த போது, அந்தச் சிறிய கருப்பின பெண், அதே ஒன்று, கையில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு, அசைத்துக் கொண்டே நடந்து சென்றதைப் பார்த்தேன். “அம்மணியே, தேவன் உன் ஜெபத்தைக் கேட்டார். குழந்தை சுகமாகி விட்டது” என்று கூறினேன். அங்கே குழந்தை எழுந்தது. போர் வீரர்களை வைத்து கூட்டத்தை அமைதி படுத்துவது போல, அமைதிபடுத்த வேண்டியதாயிற்று. அவ்வித மாக கூட்டத்தினூடே அவள் குழந்தையை அழைத்துச் சென்றாள். 61சில நிமிடங்கள் தான் கழிந்தன. “நான் ஒரு வயதான மனிதனைக் காண்கிறேன். அவன் ஒரு வைக்கோல் போர் மீது அமர்ந்திருக்கிறான், அப்பொழுது அவன் ஒரு இளைஞன். அவன் அங்கிருந்து விழுந்து, முதுகெலும்பில் காயம் ஏற்பட்டு ஒடிந்து விட்டது” என்று கூறினேன். “அவனை கட்டிலில் படுக்க வைத்து, தரையிலிருந்து உண்டாகும் அதிர்ச்சியைக் குறைப்பதற்காக, தரையில் துளைகளை உண்டாக்கி அதில் கட்டிலைப் பதிய வைக்க வேண்டியதாயிருந்தது” என்று கூறினேன். பல நூற்றுக்கணக்கான விசுவாசிகள், ஒரு கூட்ட விசுவாசிகள், ஒவ்வொருவரும் ஏக சிந்தையோடும், ஒரு மனதோடும் அங்கே அமர்ந்திருந்தனர். “அவன் ஒரு மகத்தான மனிதனானான், ஒருவகையாக ஒரு பேச்சாளர்” என்று கூறினேன். அது என்னைக் கடந்து சென்றது. கடந்து சென்று நான் தொடங்க ஆரம்பித்தேன். சற்று நேரத்திற்குப் பின், கட்டிடத்தின் பின்னால் ஒரு குழுவினரையும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் ஒருவரையும் டாக்டர் எர்ன் பாக்ஸ்டர் என்பவர் பார்த்தார். “அது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உப்ஷா என்றும், அவரைக்குறித்து எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா?” என்று கேட்டார். “இல்லை, ஐயா” என்று சொன்னேன். “பல வருடங்களுக்கு முன், அவர் ஜனாதிபதி பதவிக்காக முயற்சித்தார்” என்றும் கூறினார். “ஐயா, நான் அவரை அறியேன்” என்று கூறினேன். “அவரை உங்களிடத்தில் காட்டுவதற்கு இங்கே அழைத்து கொண்டு வரட்டுமா?” என்று கேட்டார். “அவர் யார்?” என்று கேட்டேன். “அங்கே உட்கார்ந்திருக்கிறாரே அவர் தான்” என்றார். 62ஆகவே சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டு மேலே கொண்டு வரப்பட்டார். அதை செய்தது அவர் மனைவி தான். “வாலிபனே, என்னை எப்போதாவது அறிந்துள்ளீரா?” என்று கேட்டார். “பாப்டிஸ்ட் சபையின் ஊழியராய் உங்களை பிரதிஷ்டை பண்ணினாரே டாக்டர் ராய் E. டேவிஸ், அவர் சதர்ன் பாப்டிஸ்ட் சபையின் எழுப்புதல் கூட்டத்தில் தலைமை பிரசங்கியாக இருந்தார். அவர் தான் சொன்னார்” என்று கூறினார். மேலும், “அவர்தான் என்னை உங்களிடத்திற்கு அனுப்பி ஜெபித்துக் கொள்ளும்படி கூறினார்” என்றும் சொன்னார். “நான் சிறுவனாக இருந்ததிலிருந்தே எனக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. ஆனால் தேவன் என்னை சுகப்படுத்துவார் என்று எப்போதுமே நம்பி வந்திருக்கிறேன், ஏனென்றால் விலக்கு அளிக்கப்படும் சமயத்தில் நான் சரியான முடிவெடுத்தேன். வெளியே இருந்து மதுபானம் உள்ளே கொண்டுவர இருந்தபோது, உலர்ந்த எலும்புகளில் ஒன்றை அழைத்தேன்.” “நான் எடுத்த முடிவினிமித்தம் ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி பதவியை நான் இழக்க வேண்டிய தாயிற்று” என்று கூறினார். “அது ஒரு தீரமுள்ள செயல் ஐயா” என்று சொன்னேன். “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று கூறினேன். “எல்லாம் சரி. உங்களில் முதல் நோயாளியை இங்கே கொண்டு வாருங்கள். முதலில் யார் இங்கே வரப்போகிறார்கள்” என்று கேட்டேன். அது நடந்தபோது, அந்தப் பெண்மணிக்கு ஏதோ சம்பவித்தது. அந்தச் சத்தம் இதைக்குறித்து அது சொல்லிற்று. மறுபடியும் அதைப் பார்ப்பதற்கு திரும்பினேன். அந்த வயதான காங்கிரஸ்காரர், அவருடைய கால்சட்டை மிகவும் விரைப்புள்ளதாய், சிவப்பு நிற கழுத்துப்பட்டை அணிந்து, கீழே இறங்கிச் செல்வதையும், இவ்விதமாக ஜனங்களுக்கு முன்பாக பணிந்து குனிந்து ஜனக்கூட்டத்தில் புகுந்து கடந்து செல்வதைப் பார்த்தேன். “காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரே, இயேசு கிறிஸ்து உங்களை கனப்படுத்தியிருக்கிறார். இப்போது நீங்கள் எண்பத் தாறு வயதை அடைந்துள்ளீர்கள். ஆனால் தேவன் உங்களை கனப்படுத்தியுள்ளார். அவர் உங்களை சுகப்படுத்த இருந்தார். நீங்கள் ஒரு பையனாயிருந்த போது அவர் உங்களை சுகப்படுத் தியிருக்க வேண்டும். உங்கள் எலும்புகள் எல்லாம் கடினமான தாகவும், அதே சமயத்தில் உடையக்கூடியதாகவும் இருக்கிறது. வளையக்கூடியதாகவும் இருந்தது. அப்பொழுதே உங்களை அவர் சுகப்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் இப்போது அவர் உங்களைச் சுகப்படுத்தி விட்டார்” என்று கூறினேன். “நான் சுகமடைந்து விட்டேன் என்று நினைக்கிறீர்களா?” என்று அவர் கேட்டார். “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று நான் கூறினேன். “நீங்கள் மிகவும் விரைப்பான கால்சட்டை அணிந்திருக்கி றீர்களா?” என்று கேட்டேன். அவர்- அவர் கருநிறமான ஒரு கால்சட்டையும் ஒரு சிவப்பு நிற கழுத்து கச்சையும் (tie) அணிந்திருந்தார். “உங்களுக்கு மிகவும் விரைப்பான ஒரு கால்சட்டை உண்டா?” என்று கேட்டேன். “ஆம், ஐயா, அன்றொரு நாளில் தான் அதை நான் வாங்கினேன்” என்று அவர் கூறினார். “எழுந்து நில்லுங்கள், இயேசு கிறிஸ்து சுகப்படுத்தி விட்டார்” என்று கூறினேன். அவருடைய சாட்சியை எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள்? வெள்ளை மாளிகையின் படிக்கட்டுகளில், பில்லி கிரகாமின் கூட்டத்தில் நின்று, “நித்திய கரத்தை சார்ந்து கொள்ளுங்கள்” என்ற பாடலை பாடினார். மறுபடியும் அவர் கக்க தண்டமோ அல்லது சக்கர நாற்காலியோ பயன்படுத்தவில்லை. எவ்வளவு காலம் ஜீவித்தாரோ ஜீவிய காலமெல்லாம் சக்கர நாற்காலி யிடத்திற்கு போகவில்லை. 63பழைய மெக்ஸிகோவில் ஜேக்மூர் அவர்களும், நானும் அந்த இரவில் ஒரு சுவரின் மீது படுத்து களைப்பார் வேண்டியதாயிற்று. அங்கே ஒரு சிறிய ஸ்திரீ மெக்ஸிகன் கத்தோலிக்க சபையை சார்ந்தவள் இருந்தாள். அதற்கு முந்தின இரவு ஒரு வயதான மனிதனின் கண்கள் மீது கரங்களை வைத்தேன். குருடான மனிதன் பார்வையைப் பெற்றான். அந்த ஸ்திரீ, அவர்கள் சொன்னார்கள். பில்லி என்னிடம் வந்தான் . “அப்பா...'' என்றான். நான் அந்த மனிதனை மாஃபியனா என்றழைத்தேன். மாஃபியனா என்றால் ”நாளை“ என்று பொருள். அவன் மெதுவாக நடந்தான். அவன் ஜெப அட்டைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தான்; பில்லியும் அவனுடன் சென்றான். அவன் ஒன்று கூட கொடுக்கவில்லை. ஆகவே, “எல்லா ஜெப அட்டைகளும் கொடுத்து தீர்ந்தாயிற்று'' என்றான். ”ஒரு ஸ்திரீ ஒரு குழந்தையை வைத்துள்ளாள். அது இன்று காலை மரித்து போய் விட்டது“ என்று கூறினான். ஏறக்குறைய அன்று இரவு பத்து மணியிருக்கும். வெளியில் அங்கே எருதுகள் கூடும் இடமிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. அது பெரிய மைதானம் போல் இருந்தது. அவன் சொன்னான்.... அவர்கள் என்னை உள்ளே கொண்டு வந்தார்கள். ஏணியில் சில படிக்கட்டுகள் இறங்கினேன். சகோ. ஜேக்மூர் அவர்களும் மற்றும் அங்கிருந்த அனேகர் இங்குள்ளனர். அவர் அங்கே மேடையில் இருந்தார். 64“முந்நூறு காவலாளிகள் அங்கே நின்று கொண்டிருந் தனர். அந்த ஸ்திரீயை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை” என்றார். “அவர்கள் தோளில் ஏறி, கீழே குதித்து, அவர்களின் கால்களுக்கிடையே ஓடினாள். அவளால் இங்கு வர முடியவில்லை. ஏனென்றால் அவளிடத்தில் ஜெப அட்டை இல்லை” என்று கூறினார். “எங்களிடத்திலிருந்த ஜெப அட்டை தீர்ந்து போய் விட்டது” என்றார். அதைக்குறித்து அவள் அக்கறை கொள்ள வில்லை. அவள் குழந்தையின் மீது என் கரங்கள் வைக்கப்பட வேண்டும் என்பதிலேயே உறுதியாயிருந்தாள். ஒரு கத்தோலிக்க மனிதன் இருபது அல்லது முப்பது வருடங்களாக குருடனாக இருந்தவன், ஜெபம் ஏறெடுத்த போது அவன் சுகம் பெற்று பார்வையடைந்ததை இவள் பார்த்தாள். அவள்.... பழைய கந்தை துணியை அணிந்திருற்தாள். ஏதோ ஒன்று என்று நினைக்கிறீர்களா? ஓ, இந்த பிரசங்க மேடையைப்போல மூன்று மடங்கு உயரமிருக்கும், எவ்வளவு தூரத்திற்கு உங்களால் பார்க்க முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு பழைய சால்வைகளும், தொப்பிகளையும் உயர்த்திப்பிடித்தனர். அது யாருக்குச் சொந்தம் என்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்? எனக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் விசுவாசித்தார்கள். மிக எளிதாக, குழந்தை யின் விசுவாசத்தைப்போல. 65ஆகவே, “நல்லது” என்று சகோ.ஜேக்மூரிடத்தில் நான் கூறினேன். எனக்கும் அவருக்கும் முடி பாதி பாதியாகக் குறைந்து விட்டது. நீங்கள் அறிவீர்கள், ஆகவே, நான் -நான் “சகோ. ஜேக், உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசத்தை அவள் அறிந்து கொள்ள முடியாது. நீங்கள் கீழே இறங்கிப் போய், அந்தக் குழந்தைக்காக ஜெபியுங்கள்” என்று கூறினேன். “சகோ. பிரான்ஹாம், சரி” என்று அவர் கூறினார். அவர் கீழே இறங்கிச் செல்ல ஆரம்பித்தார். இப்போது, ஜேக் சரியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஆகவே நாங்கள்.... அவர் இறங்கிச் செல்லத் தொடங்கினார். இவ்விதமாக பிரசங்கம் செய்யத் தொடங்கினேன். நான் பார்த்த போது, சிறிய மெக்ஸிகன் குழந்தையைப் பார்த்தேன். சிறிய கருப்பு நிற முகம் கொண்ட குழந்தை எனக்கு முன் நிற்பதைப் பார்த்தேன். அது சிரித்துக் கொண்டிருந்தது. பல் அரணைகள் மட்டும் தெரிந்தது. அவனுக்கு இன்னும் பற்கள் முளைக்கவில்லை . நான், “ஒரு நிமிடம் பொறுங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள். அந்தக் குழந்தையை இங்கே கொண்டு வாருங்கள்” என்றேன். “தேவனாகிய கர்த்தாவே, நான் ஒன்றும் அறியேன்” என்று கூறினேன். அவள் ஓடி வந்தாள். அவள் கையில் சிலுவை ஒன்றை வைத்திருந்தாள். பாட்ரே (Padre) என்று கதறிக்கொண்டு வந்தாள். பாட்ரே என்றால், “அப்பா” என்று பொருள். “இப்பொழுது எழுந்திரு” என்று கூறினேன். 217. அவள் ஒரு சிறிய ஊதா நிறப் போர்வை ஒன்றை வைத்திருந்தாள்; அந்தச் சிறு குழந்தை மரித்து விரைத்துப் போயிற்று. அந்தப் போர்வை மேல் கிடத்தப்பட்டு இருந்தது. முழுவதும் நனைந்து போயிருந்தது. அவளுடைய முடி கீழே தொங்கிக் கொண்டிருந்தது. சிறிய அழகிய ஸ்திரீ. ஒருவேளை அவளுடைய முதல் குழந்தையாக இருக்கலாம்; அவளுக்கு இருபது வயதிருக்கும். நீங்கள் அறிவீர்கள், இவ்விதமாக அவள் சற்று தாழ்த்தித் தன் கரங்களில் பிடித்திருந்தாள். நான்-நான், “அந்தக் குழந்தைக்காக நான் ஜெபிப்பேன்” என்று கூறினேன். என் கரங்களை வைத்தேன். என்னுடைய ஜெபத்தை அவர்கள் மொழிபெயர்க்கவில்லை. “கர்த்தராகிய ஆண்டவரே, தரிசனத்தை மட்டும் நான் கண்டேன். எனக்கு வேறொன்றும் தெரியாது” என்று கூறினேன். அந்த மணி நேரமே அந்தக் குழந்தை ஒரு உதை கொடுக்க ஆரம்பித்தது, கதறவும் அழவும் தொடங்கியது. அந்தக்கூட்டத்தின் தலைவரை நோக்கி, “சகோதரன். எஸ்பினோஷா” என்று அழைத்தேன். “அந்த ஸ்திரீயின் சாட்சியை நீங்கள் ஏன் எடுக்கக்கூடாது? அந்த மருத்துவரிடம் ஒரு சாட்சியை அனுப்புங்கள்” என்று கூறினேன். அந்த மருத்துவர் சாட்சி கையொப்பம் இட்டார். அது, “சுகமாக்கும் சத்தம் (Voice Of Healing)” என்ற பத்திரிகையில் வந்தது. ஒருவகை நுரையீரல் நோய் இரண்டத்தனையாய் அதிகரித்திருந்தது. அந்த நாள் காலை ஒன்பது மணிக்கு அவன் மரித்து விட்டான் என்று அவருடைய அலுவலகத்தில் அறிவிக்கப் பட்டது. சுவாசம் ஒழிந்து போயிற்று. நாள் முழுக்க மழையில் நனைந்திருந்தது. மரித்துப் போயிற்று, அது உயிர்பெற்று சுகத்தைப் பெற்றுக்கொண்டது“ என்றெழுதப்பட்டிருந்தது. அது இன்றைக்கும் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்தமட்டில், தேவனு டைய இராஜ்ஜியத்திற்கென்று ஜீவிக்கிறது. ஆப்பிரிக்காவில், முழுக்க முழுக்க அஞ்ஞானியாயிருந்த முப்பதாயிரம் ஜனங்கள் தங்கள் ஜீவியத்தை இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். சொல்வதற்கென்று அநேக காரியங்கள் உண்டு. தேவன் அவருடைய வார்த்தையைக் காத்து வருகிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அதுதான் அவருடைய சாட்சி. 66நீங்களும் உங்கள் சிந்தையுமே நியாதிபதிகளா யிருக்கிறீர்கள். நீங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்களோ அதுதான் தீர்ப்பு . இப்பொழுது, சற்று நேரம் நம் தலைகளை தாழ்த்துவோம். கர்த்தராகிய இயேசுவே, வழக்கு விசாரணை இன்னும் தொடங்கவில்லை; இன்னும் அநேக சாட்சிகளை இங்கே மேடைக்கு அழைக்க முடியும்! “வியாதியஸ்தர் மேல் அவர்கள் கைகளை வைப்பார்களானால், அவர்கள் சுகமடைவார்கள்” என்று நீர் சொல்லியிருக்கிறீர். “நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வார்கள்” என்றும் கூறியிருக்கிறீர். அந்த ஸ்திரீ உம்முடைய வஸ்திரத்தை தொட்டாள். நீர் திரும்பிப்பார்த்து, என்ன சம்பவித்தது என்று கூறினீர். உம்முடைய எல்லா வார்த்தையையும் காக்கிறவராக, (நிறைவேற்றுகிறவராக) இருக்கிறீர். அவைகளில் ஒன்றும் தவறில்லை. கர்த்தாவே, தவறு எங்கேயுள்ளது என்றால், அவிசுவாசியினிடத்தில் தான் தவறுள்ளது. திரு.அவிசுவாசி, அவர்தான் மனிதனை குழப்பமடையச் செய்கிறவராயிருக்கிறார். திரு.கடவுள் நம்பிக்கையற்றவர் மற்றும் பொறுமையற்றவர் இவர்கள் எல்லாம் கர்த்தருக்குக் காத்திருக்காதவர்கள். இருப்பினும் ஆபிரகாமின் வித்து என்று தன்னை அழைத்துக் கொள் கின்றனர். ஓ, பரிசுத்த ஆவியானவரே, பிரதிவாதியின் சாட்சியா யிருப்பவரே, யாரிடத்தில் விசுவாசம் இருக்கிறது, யாரிடத்தில் விசுவாசம் இல்லை என்பதை நீர் ஒருவர் மாத்திரமே அறிவீர். ஆனால், தேவனே, இந்த பிற்பகல் வேளையில் எல்லா அவிசுவாசத்தையும் நீக்கிப் போட வேண்டுமென்று ஜெபிக்கிறேன். பூமியின் எல்லாவிடங்களுக்கும் மகத்தான நியாதிபதியா யிருக்கிறவரும் வார்த்தையை எழுதினவரும் இப்போது இங்கே முன்னே வருவாராக. அவர் வார்த்தையாயிருக்கிறார். அவர் இங்கே முன்னே வருவாராக. 67இங்கே இந்த ஜனங்கள் கடந்து செல்லும் போது, இந்த பிற்பகல் வேளையில் சுகத்தைப் பெற்றுக் கொள்வார்களாக. ஒவ்வொருவரும் தங்கள் சிந்தையை சீர்படுத்திக் கொள்வார் களாக. அவர்கள் சோதனைக்குள் இருக்கிறார்கள். கர்த்தாவே, அவர்களின் தோள்களின் மீது என் கைகளை வைக்கிறேன். அவர்கள் சிந்தையே அவர்களின் நியாதிபதியாய் இருக்கிறது. இந்த நாளிலிருந்து அவர்கள் நடந்து கொள்கிற முறை, இந்த ஜெபவரிசையில் கடந்து செல்லும் போது, தேவனுடைய வார்த்தையைக் குறித்து அவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பதை நிரூபிக்கும். ஆகவே கர்த்தாவே, அதை அருளிச்செய்யும். உம் முடைய சீஷர்களுக்கு நீர் பிரசங்கித்த இந்த கடைசி செய்தியில், அவர்களுக்குக் கட்டளை கொடுத்தீர். அது உம்முடைய புனித மான உதடுகளில் இருந்து புறப்பட்டு வந்தது. “வியாதியஸ்தர் மேல் அவர்கள் தங்கள் கைகளை வைப்பார்களானால், அவர்கள் சுகமடைவார்கள்” அது விசுவாசிகள். கடைசியாக நீர் சொன்னீர். மனிதனுக்கு கட்டளை கொடுத்தபோது, நீர் கொடுத்த முதல் கட்டளை மத்தேயு 10ன்படி மனிதன் செய்ய வேண்டும் என்பதே. “வியாதிஸ்தரை சுகமாக்குங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்பதே. கடைசி கட்டளை என்னவென்றால், “நீங்கள் உலகமெங்கும் சென்று, பிசாசுகளைத் துரத்துங்கள்; வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பீர்கள், அவர்கள் சுகமடைவார்கள்” என்பதே. கர்த்தாவே, இந்த எல்லா சாட்சிகளுக்கும் நீர் செய்ததை உணர்ந்து விசுவாசம் அவர்களிடத்தில் நங்கூரமிடப்படுவதாக. அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர்! இப்போது சம்பவிக்கா விட்டாலும் பரவாயில்லை; ஆனால் நீர் என்ன சொன்னீரோ அதை நிறைவேற்றுவீர். “உன் இருதயத்தில் சந்தேகிக்காமல் இருந்தால், அது அவ்விதமாகவே நிறைவேறும்.” விதை முளைத்து வளர வேண்டும். ஜனங்கள் அதைப் பார்த்து புரிந்து கொள்ளட்டும். இவைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 68நீ ஒரு விசுவாசியா? (சபையார், “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசிரியர்.) இப்போது அவருடைய எல்லா வார்த்தைகளையும் காக்கிறவராக இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (“ஆமென்”). நாம் ஜெப வரிசையை அழைக்கும் முன்பாக இப்போது ஒவ்வொருவரும் சற்று நேரம் பயபக்தியுடன் இருப்போம். சகலமும் ஒழுங்கும் கிரமமுமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இப்போது, ஞாபகம் கொள்ளுங்கள். உங்கள் சிந்தையை சரிசெய்து கொண்டீர்களா? ஒரு தீர்ப்பு வழங்கும் நீதிபதியாய் வந்துள்ளீர்களா? அவ்விதமாக ஒரு தீர்ப்பு - அதன் முடிவிற்கு வந்துவிட்டீர்களானால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். தேவன் நீதிக்குட்பட்டவரா அல்லது நீதிக்குட்படாதவரா? அவரு டைய வார்த்தை .... அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறாரா அல்லது அவர் அவ்வாறு இல்லையா? இப்போது, உங்கள் கரங்களை உயர்த்தியிருப்பீர்களானால், இந்த ஜெப வரிசையைக் கடந்து சென்று, இங்கிருந்தே உங்கள் (விசுவாச) ஜீவியத்தைத் தொடங்குங்கள். ஆபிரகாமைப் போல ஜீவிக்கப் போகிறீர்களா? அல்லது திரு.அவிசுவாசியைப் போல ஜீவிக்கப் போகிறீர்களா? பாருங்கள், திரு.கடவுள் நம்பிக்கையற்றவர், திரு.பொறுமையற்றவர் இவர்களை அப்புறப்படுத்துங்கள்! நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். 69நான் உனக்கு அந்நியனாயிருக்கிறேன். ஆனால் இப்போது அவர் இன்னும் இங்கேயிருக்கிறார் என்பதை நீ அறிந்து கொள்வாயாக. அவருடைய வார்த்தையை உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டால் மட்டும் போதும். இப்போது, நீ அதைச் செய்ய முடியாதவனாய் கூட இருக்கலாம். ஒரு சந்ததியில் ஒருவர் மட்டுமே அவ்வாறு வாழ்ந்து வந்துள்ளனர். அதில் மோசே ஒருவர். புழுதியை அடித்தான் அது பேன்களாய் மாறிப்போயிற்று. இன்னும் அநேக வாதைகள் உண்டாயிற்று. தண்ணீர் இரத்தமாக மாறிற்று. மற்றவர்கள் அதைப் பார்ப்பதற்கு கூட தங்கள் கழுத்துகளைத் திருப்பவில்லை. அங்கே ஒரு மோசே மட்டும் இருந்தார். மற்றவர்கள் அவர் சொன்னதை விசுவாசித்தார்கள். பாருங்கள்? அங்கே ஒருகூட்டம் ஜனங்கள் ஒன்றுசேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்க விரும்பினார்கள். தாத்தானும் அவனைச் சார்ந்தவர்களும். “அவர்களை விட்டு உன்னைப் பிரித்துக்கொள்” என்று தேவன் மோசேயிடத்தில் கூறினார். பூமி அவர்களை எடுத்துக் கொண்டது. பாருங்கள்? அது ஒரு... மாத்திரமே. அது ஒரு சாயலாக இருந்தது. அச்சாயல் இந்த நாளுக்குரியதாயும் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக பூமி அவர்களை விழுங்கிப் போட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன சம்பவித்தது என்று பார்க்கிறீர்கள். “உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால் எல்லாம் கூடும்” அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார், “ஆமென்” என்று கூறு கின்றனர் - ஆசி.) நிச்சயமாக, அவர்கள் அதை விசுவாசித்தால் சகலமும் கைகூடும். சரி. நீ ஜெபி. சர்வவல்லமையுள்ள தேவனிடத் தில் உன் விசுவாசத்தை வை. 70ஒரு கேள்வியிருக்கிறது. அதை இங்கே சொல்ல விரும்புகிறேன். ஆம். உன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் உன்னைப் பார்க்கும் போது, இந்த பிற்பகல் வேளையிலே நீ இந்த வரிசையில் கடந்து செல்வதைப் பார்த்த ஜனங்கள் இந்த வரிசையில் நீ கடந்து செல்வதைப் பார்த்தவர்கள் நீ நடந்து கொள்ளும் விதத்தையும், உன்னுடைய சாட்சியையும் பார்த்து எப்படிப்பட்ட நியாயத்தீர்ப்பை வழங்கினாய் என்பதைப் புரிந்து கொள்வார்கள். அடுத்த முறை உன்னுடைய மேய்ப்பனைச் சந்திக்கும்போது, “ஓ, நான் இன்னும் அதை அடையவில்லை. அதை மறுபடியும் சோதித்துப் பார்க்க முயற்சி செய்வேன்” என்று கூறுவாய். அப்படிக் கூறுவாயானால், நீ அந்த விதையைத் தோண்டி எடுத்துப் பார்க்கிறாய், அது சம்பவிக்காது. பாருங்கள்? அவ்வாறு உன்னுடைய அந்த வித்தைத் தோண்டி பார்க்காதே. அதை ஒப்புக்கொடுத்து, அங்கேயே அதை விட்டுவிடு. அதை மறந்து விடு. அது தேவனைப் பொருத்தது. உன்னுடைய இருதயத்தில் அதை விசுவாசிக்கக் கூடுமானால், அது நடக்கும். 71ஐயா, சாம்பல் நிற முழுக்கால் சட்டை அணிந்து அங்கே உட்கார்ந்திருப்பவரே, பின்னால் உட்கார்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருப்பவரே, அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், உங்களில் இருக்கும் நரம்பு சம்பந்தமான வியாதி உங்களை விட்டு நீங்கிப் போயிற்று. என்னுடைய ஜீவிய நாளில் அந்த மனிதனை நான் சந்தித்தது இல்லை. ஐயா, நாம் ஒருவருக்கொருவர் அந்நியராயிருக்கிறோம். அப்படித் தானே? அது சரியே. அதன் நிமித்தமாகவே நீங்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் தேவனுடைய ஊழியக்காரன் என்பதை நீங்கள் அறிய வேண்டும். உங்களுக்கருகில் உங்களுக்கு அடுத்து உட்கார்ந்துள்ள ஸ்திரீ வயிற்றுக் கோளாறினால் அவதிப்படுகி றார்கள். அது சரியே? அதை விசுவாசிக்கிறாயா? உன் கரத்தை உயர்த்து. நீ சுகமடைந்து விட்டாய் என்று விசுவாசி. விசுவாசிக்க மட்டுமே செய். அவளுக்கடுத்திருக்கிற ஸ்திரீ இதய நோயுள்ளவர் களாய் இருக்கிறார்கள். தேவன் உன்னைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? சரி, ஐயா. நீ விசுவாசித்தால், அதை நீ பெற்றுக் கொள்வாய். அவளுக்கு அடுத்து அமர்ந்திருப்பவர் ஸ்திரீகளுக்குள்ள பிரச்சனையில் இருக்கிறார்கள். தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? அதற்கடுத்து அமர்ந்துள்ள ஸ்திரீ, பருமனான ஸ்திரீ. சர்க்கரை வியாதியுடையவர்கள். தேவன் உன்னைச் சுகப் படுத்துவாரென்று விசுவாசிக்கிறாயா? அங்கே அமர்ந்துள்ள அந்த ஸ்திரீ. ஏதோ அவளுக்குள் தவறு இருக்கிறது. ஸ்திரீகளுக்குள்ள கோளாறினால் அவதிப்படு கிறார்கள். சரியாக அங்கே கடைசி வரிசையில் அமர்ந்துள் ளார்கள். அவளுடைய மகள் சரியாக அவளுக்குப் பின்னால் அமர்ந்துள்ளாள் என்று நம்புகிறேன். ஒருவகையான தலைவலி யால் அவதிப்படுகிறாள். அது ஒரு விபத்தினால் உண்டானது. அது சரியா? அப்படியானால், மாடி முகப்பில் அமர்ந்திருக் கிறவளே, உன் கரங்களை உயர்த்து. 72அவரைக் குறித்தென்ன? நான் அவருடைய சாட்சியா யிருக்கிறேன். அவர் இந்த பிற்பகல் வேளையில் ஜீவிக்கிறவராய் இங்கே இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார். அவருடைய எல்லா வார்த்தைகளையும் காக்கிறவரா யிருக்கிறார். “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” அங்கே உயரே மாடத்தில் அமர்ந்திருப்பவர்கள் மத்தியிலே என்ன சம்பவித்தது? யாரோ ஒருவர் விசுவாசிக்கிறார், ஒரு நிமிஷம் (காத்திருப்போம்). இப்போது, சில அவிசுவாசிகளை உங்களுக்கு சுட்டிக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அது உங்களை திகில டையச் செய்யும். அது சம்பவித்ததை எத்தனை பேர் பார்த்துள் ளீர்கள்? அது கிரியை செய்கிறது. கோதுமையும் களையும் ஒன்றாக சேர்ந்து வளர நீ அனுமதிக்க வேண்டும். இங்கே, ஜெப்' அட்டைகளை வைத்திருக்கிற இந்த வரிசையிலிருக்கிற அனைவரும் ஒரு... அமைத்துக் கொள் ளுங்கள். காத்திருங்கள், இன்னும் ஒரு நிமிஷம் காத்திருங்கள். இந்த பிற்பகல் வேளையில், விசுவாசமுள்ள மேய்ப்பர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மாற்கு 16 சத்தியம் என்பதை விசுவாசிக்கி றீர்களா? அப்படியானால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். விசுவாசிக்கிற எல்லா மேய்ப்பர்களும் இங்கே வந்துள்ளனர். இங்கிருந்து நான் கடந்து சென்ற பின், இந்த சாயங்கால நேரத்தில் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். இந்த ஜனங்கள் சுகமாக்கப்பட்டு விட்டார்கள். அவர்களில் சிலர் சொல்வார்கள்.... பாருங்கள், வழக்கமாக ஒரு சுவிசேஷகர், ஒரு வித்தியாசமான ஊழியத்தைப் பெற்றிருப்பவர், மேடையை விட்டுச் செல்லும்போது, ஒரு மேய்ப்பனை மேடையில் சபையாருக்கு முன்பாக விட்டுச் செல்வார். அப்போது சபையார், “ஓ, சகோ.ராபர்ட்ஸ் திரும்பி வருவாரானால், சகோ. ஆஸ்பார்ன், இன்னும் சகோ. இன்னார் இன்னார் அல்லது சகோ.பிரான்ஹாம் அல்லது வேறு யாரோ. ஓ, அவர்...'' என்று சொல்லுவார்கள். நான் செய்வதை செய்வதற்கு உங்கள் மேய்ப்பனுக்கும் உரிமையுண்டு. அல்லது யார் வேண்டுமானாலும் செய்யலாம். பாருங்கள். உங்கள் மேய்ப்பர் தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதனாவார். மற்ற எந்தவொரு சுவிசேஷகனைப் போலவே. உண்மையாகவே தேவனுக்குப் பயப்படும் விசுவாசமுள்ள மேய்ப்பர்கள் இங்கே வந்து என்னுடன் ஒரு நிமிட நேரம் நிற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சற்று நேரத்திற்கு இங்கே மேலே வாருங்கள். உங்களுக்கென்று இரண்டு வரிசையை அமைத்துக்கொள்ளுங்கள். உண்மையாகவே விசுவாசிக் கிறவர்கள். அப்படிப் பொருள் கொள்ளுகிறேன். அவிசுவாசிகள் மேலே வருவதற்கு அனுமதியாதிருங்கள்; வியாதியஸ்தரை இடறப்பண்ணுவீர்கள். நீங்கள் - நீங்கள் இந்த வேதவாக்கியத்தை சரியாக நிதானிப்பீர்களானால், இன்று தேவன் நம் மத்தியில் நமக்கு காட்சியளிக்கும்போது, அவர் விசாரணையிலிருக்கிறார் என்பதை காண்பிக்கிறார். அவர் சரியாயிருக்கிறார். அவர் சத்தியத்தையே நமக்கு கூறுகிறார் என்று அவரை நாம் விசுவாசிக்கிறோம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார், “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசிரியர்.) நீங்கள் விசுவாசித்தால், நிச்சயமாக அது சம்பவிக்கும்! ஆமென். 73நரம்புக் கோளாறு உன்னை விட்டு நீங்கி விட்டது என்று விசுவாசிக்கிறாயா? ஐயா, அந்தக் கடைசியில் உட்கார்ந் திருப்பவரே. அவர் உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கி றாயா? சரி. அவருக்கு அடுத்திருக்கிற நீங்கள், உங்கள் வயிற்றுக் கோளாறு, உங்கள் வயிற்றுக் கோளாறு, தேவன் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? அதை விசுவாசி. அதை நீ பெற்றுக் கொள்வாய். இன்று இங்கேயிருக்கிற எல்லா மேய்ப்பர்களும் விசுவாசிக்கிற மேய்ப்பர்களா? சரி. அதுபோதும். ஒருவர் போதும். ஜெப அட்டைகள் வைத்துள்ள அத்தனைபேரும் மாற்கு 16ஐ விசுவாசிக்கட்டும்.... இப்போது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதை விசுவாசிக்கவில்லையென்றால் இங்கே வரவேண்டாம். பாருங்கள்? அப்படிப்பட்ட மாய்மாலத்தோடு மேலே வரவேண்டாம். பாருங்கள்? அது எல்லாவற்றைக் காட்டிலும் மோசமானது. நீங்கள் விசுவா சிக்கவில்லையென்றால், “இல்லை, அதை நான் விசுவாசிக்க மாட்டேன்” என்று கூறுங்கள். திரு.அவிசுவாசி, கடவுள் நம்பிக்கை யற்றவர் அல்லது வேறு யாருடனாவது சென்று விடுங்கள். 74ஆனால், நீ ஆபிரகாமின் உண்மையான வித்தாக இருப்பாயானால், உன்னுடைய நிலை என்னவென்பதை எடுக்க விரும்புவாய். உன்னுடைய தீர்ப்பு அதைச் சந்திக்கும். உன்னுடைய தீர்ப்பு அதை சந்தித்தது என்பதை உலகத்திற்கு காண்பிக்க விரும்புவாய். இயேசு கிறிஸ்து சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மாறாதது என்று விசுவாசிப்பாய். சாட்சிகள் அதை உனக்கு நிரூபித்துக் காட்டினார்கள். இந்த பிற்பகல் வேளையில் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். இங்கே ஜெப அட்டைகளை வைத்திருப்பவர்கள், கீழே இறங்கிச் சென்று அங்கேயே அமர்ந்திருங்கள். இப்பொழுது, உங்களால் கூடுமானால் அங்கேயே நில்லுங்கள். ஒரு வரிசையை அமைத்துக்கொள்ளுங்கள். ஜெப அட்டை வைத்துள்ள இந்தப் பிரிவினர் யாவரும், திரும்பி, சுற்றி பின்னே சென்றுவிடுங்கள். அவர்களுக்குப் பின்னால் ஒருவரிசையை அமைத்து அந்த வரிசையில் அமர்ந்திருங்கள். இந்தப்பக்கமாக இங்குள்ள மற்றப் பிரிவினர் அனைவரும், திரும்பி சுவர் பக்கமாக சென்றுவிடுங்கள். இந்த வரிசைக்குப் பின் சரியாக வேறொரு வரிசையை அமைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இறங்கி வரும்போது அதற்கும் பின்னால், மாடத்திலிருந்து இறங்கி வருகிறவர்கள் வரட்டும் ஜெபித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஜெப அட்டை வைத்திருக்கிற அனைவரும் சிந்தையை சரி செய்து கொள்ளுங்கள். உங்கள் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அது நடந்துவிட்டது. சுவர் பக்கமாகச் செல்லுங்கள், ஒருவரிசைக்குப் பின் ஒரு வரிசையாக அமைத்துக்கொள்ளுங்கள். 75இப்போது, வேதாகமம் என்ன கூறுகிறது? அதை மறுபடியும் நான் வாசிக்கட்டும். வினோதமான ஒன்று இங்கே விழுந்து அந்த இடத்திற்கு ஒரு வழியைத் திறந்தது. அதை நாம் மறுபடியும் வாசிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள். “அதன்பின்னர் அந்தப் பதினொரு பேருக்கும் தரிசனமானார்”. இந்த பிற்பகல் வேளையில் அதையேதான் நமக்கும் செய்கிறார். அவர் இங்கே இருக்கிறார். கிறிஸ்துவும், பரிசுத்தாவியும், அதாவது “கிறிஸ்துவின் ஆவியே பரிசுத்தாவி” என்று எத்தனைப்பேர் விசுவாசிக்கிறீர்கள். (சபையார், “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) உண்மையாக, அதுதான். மூன்று அல்லது நான்கு தேவர்கள் இல்லை. ஒரே ஒரு தேவன்தான் இருக்கிறார். தேவனுடைய பண்புகள் (attributes) மூன்றாக இருக்கிறது. பிதா, குமாரன் மற்றும் பரிசுத்தாவி, ஆனால் அது மூன்று தேவர்கள் அல்ல. அது அஞ்ஞானம். பாருங்கள், ஒரே ஒரு தேவன்தான் உண்டு. மற்றவைகள் எல்லாம் அவருடைய பண்புகள். தேவனாகிய பிதா வனாந்தரத்திலிருக்கும் போது, அக்கினி ஸ்தம்பமாக இருந்தார். அது சரியே. தேவனாகிய குமாரன். தேவனாகிய பிதா ஒரு சரீரத்தை சிருஷ்டித்துக் கொண்டார், அதுவே தேவனாகிய குமாரன், குமாரனுக்குள் வாசமாயிருந்தார். பாருங்கள்? “தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தை அவருக்கென்று ஒப்புரவாக்கிக் கொண்டார்.” அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், அதை விசுவாசியுங்கள். அதன்பின், “கொஞ்சக்காலத்தில் உலகம் என்னைக் காணாது” இப்போது கவனியுங்கள். “நான் தேவனி டத்திலிருந்து வருகிறேன், நான் தேவனிடத்திற்குப் போகிறேன்” என்று இயேசு சொன்னார். அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் இவைகளுக்குப் பின்பு அவர் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார். 76தர்சுப் பட்டணத்து சவுல் தமஸ்குவின் பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய ஒளி, அக்கினிஸ்தம்பம் மறுபடியும் அவருக்குப் முன்னால் தோன்றியது. அதுசரியா? (சபையார், “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) அது என்ன செய்தது? அது அவரைக் குருடாக்கிப்போட்டது. அவர் எழுந்த போது, அவர் சொன்னார்... இப்போது ஞாபகங்கொள்ளுங்கள். அவர் ஒரு யூதன். அது என்ன என்பதை அவர் அறிந்திருந்தார். அல்லது அறியாமலிருந்திருந்தால், “கர்த்தாவே” என்று அழைத் திருக்கமாட்டார். “கர்த்தாவே நீர் யார்?” அவருடைய ஜனங்கள் அந்த ஒளியை அந்த அக்கினிஸ்தம்பத்தை பின்பற்றினார்கள் என்பதை அறிந்திருந்தார். அது அவர்களை எகிப்தை விட்டு அழைத்துக் கொண்டு வந்தது. “கர்த்தாவே நீர் யார், உம்மையா நான் துன்பப்படுத்தினேன்?” “நான் இயேசு” என்று அவர் சொன்னார். “ஆமாம். முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்றார். அது அவரேதான். அக்கினிஸ்தம்பமாக வந்து, அந்த இரவில் பேதுருவை சிறைச்சாலையை விட்டு வெளியே கொண்டு வந்தது. இப்பொழுது கவனியுங்கள், அதே ஆவி திரும்ப வருமானால், இங்கேயும் அதே பண்புகள் காணப்படும். அது அந்த ஒளியானால்? (சபையார் “ஆமென் ” என்று கூறுகின்றனர் - ஆசி) நல்லது, அக்கினி ஸ்தம்பம் என்றால் என்ன? இப்போது, மனிதர்களாகிய உங்களை மறுபடியும் ஒருபோதும் பார்க்க மாட்டேன். ஜனங்களாகிய உங்கள் மத்தியில் என்னுடைய சாட்சி உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பரிசுத்த வேதாகமும் சாட்சி கொடுக்கிறது. விஞ்ஞான உலகம் அதற்குச் சாட்சி கொடுக்கிறது. அந்த ஜார்ஜ் ஜே லேஸி சொன்னார், “சகோ.பிரன்ஹாமே, நான் அடிக்கடி கூறுவதுண்டு அது மனோதத்துவம் என்று. ஆனால்” என்று. ஊதா ஒளிக்கதிருக்கு அடியில் அதை வைத்து பரிசோதித் தேன். எல்லாவிதமான ஒளிக்கதிர்களை அதனூடே பாய்ச்சி னேன். நான் கண்டது என்னவென்றால், ஒளி அந்தக் கேமராவின் கண்ணின் மேல் விழுந்தது. இந்தக் கேமராவின் கண் மனோதத்துவத்தைப் படம் பிடிக்காது“ என்றார். 77ஆகவே, நான் ஜீவித்திருந்தாலும் அல்லது மரித்துவிட்டாலும், எவ்விதத்திலும் அது சாத்தியமே. இப்போது சபை அது சத்தியம் என்பதை அறிந்துள்ளது. விஞ்ஞானம் அது சத்தியம் என்று அறிந்துள்ளது. இப்போது உங்களைக் குறித்த காரியம் என்ன? ஞாபகம் கொள்ளுங்கள், அது நானல்ல. அது அவரேதான். அது நான் அல்ல. நான் ஒன்றுமில்லை, உங்களை போன்றே உங்களில் ஒருவன். அது அவரேதான். அவர் யாரையாவது அடையவேண்டும். ஒருவருமே தகுதியுள்ளவர்கள் அல்ல. ஆனால் யாராவது ஒருவர் அதைச் செய்யவேண்டும். ஞாபகம் கொள்ளுங்கள். அது ஒரு எளிதான செயல் அல்ல. ஆனால் அது மகிமையுள்ள ஒரு ஊழியம். நீங்கள் அறியவேண்டியது என்னவென்றால், உங்களுடைய கர்த்தர் இங்கே இருக்கிறார். உங்கள் சகோதரருக்கு அந்தச் சத்தியத்தை நீங்கள் கூறலாம். ஆனால் அதை அவர்கள் விசுவாசிக்காமல் போகும்போது, அது மிகக் கடினமானதாக இருக்கும். ஆனால் நாம் அனைவரும் அதை எதிர்த்து நிற்கவேண்டும். இப்போது ஞாபகம் கொள்ளுங்கள். இப்போது கேட்டுக் கொண்டிருப்பவர்களே, நீங்கள் அனைவரும் சரியான வரிசையில் வந்து விட்டீர்களா? அவர்கள் அவ்விதமாக இருக்கின்றனர். இப்போது, மாடத்தில் யாராவது இருப்பீர்களேயானால், இந்த வரிசைக்குப்பின்னால் சரியாக வந்து நில்லுங்கள். 78இப்போது ஞாபகம் கொள்ளுங்கள். இவர்கள் அனை வரும் உங்கள் மேய்ப்பர்கள், மற்றவர்கள், தேவனுடைய மனுஷர், தேவனை விசுவாசிப்பவர்கள். நீங்கள் விசுவாசிகளா? மாற்கு 16சத்தியம் என்று விசுவாசிக்கிறோம் என்று சாட்சி கொடுக்க இங்கே நீங்கள் நிற்கிறீர்கள். (ஊழிக்காரர்கள் யாவரும் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) சரி. இப்பொழுது, வேதாகமம் கூறுகிறது, “விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை இரட்சிக்கும்” என்று. தேவன் அவர்களை எழுப்புவார். வியாதியஸ்தர் மேல் அவர்கள் கைகளை வைப்பார் களானால், அவர்கள் சுகமடைவார்கள்“ நீங்கள் பயபக்தியாயும், அமைதியாயும் இருக்கும்போது, நாம் இப்போது உங்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். பிறகு இங்கிருந்து கடந்து செல்வீர்கள், எவ்விதமாக வந்தீர்களோ அவ்விதமாக..... இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நீங்கள் விசுவாசிப்பதாக அறிக்கை செய்தீர்கள். அப்படியானால், ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வதற்கு, தண்ணீர்க் குளத்தண்டை செல்லுங்கள் அல்லது ஓடையினிடத்திற்கோ, அல்லது நதியி னிடத்திற்கோ அல்லது தண்ணீர் எங்கேயிருக்கிறதோ அங்கே செல்லுங்கள். நீங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது, அவ்வளவு தான் ஒரு பிரசங்கி செய்யமுடியும். வார்த்தையைப் பிரசங்கிப்பது, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள்; பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றீர்கள்; ஒரு புதிய ஜீவியத்திற்காக எழுந்திருக்கிறீர்கள். அதற்குபின், நீங்கள் நடந்து கொள்ளும் விதம், நீங்கள் உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டீர்களா அல்லது இல்லையா? என்பது விளங்கும். 79இப்போது, நீங்கள் தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை வைத்திருப்பீர்களானால், அவரே உங்களை சுகமாக்குகிறவர் என்று ஏற்றுக்கொள்வீர்களானால், வியாதியஸ்தர்கள் மீது கரங் களை வைப்பதற்கு நாங்கள் இங்கேயிருக்கிறோம். எஞ்சியுள்ள உங்கள் ஜீவிய காலத்திலும் அதன் முடிவு பரியந்தம், நீங்கள் நடந்து கொள்ளும் விதம், அதுவே தீர்ப்பு வழங்குகிற நியாயாதிபதியாயிருக்கும். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பதைப் பொறுத்தல்ல. பாருங்கள், நான் என்ன பொருள் கொள்கிறேன் என்று புரிகிறதா? நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கும் மட்டும் நீங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்வதும், சுகத்துடன் வாழ்வதும் அதிக நிச்சயமே. அதற்குப்பிறகு எவ்வளவு காலம் நீங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பீர்கள்? நீங்கள் எவ்வளவு காலம் விசுவாசிக்கிறீர்களோ அவ்வளவு காலம் வரை. நீங்கள் எவ்வளவு காலம் விசுவாசிக்கிறீர்களோ, அவ்வளவு காலமாய் நீங்கள் சுகமாக்கப்பட்டிருக்கிறீர்கள். கவனியுங்கள், விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளை பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள் .... சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப் படுத்தாது; வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்த மடைவார்கள். 80இவ்விதமான ஒரு இடைவெளிக்குப்பின், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எடுத்த தீர்மானத்திற்கு என் சிந்தை சென்றது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார். அவரை விசுவாசிப்பதின் மூலம், இந்த பிற்பகல் வேளையில் அவர் தம்மைத்தாமே அடையாளம் காட்டுகிறார். அற்புதங்கள் மூலமாக, உறுதியான முறையில் ருசுப்படுத்துகிறார். எந்தவொன்றும் விவரித்துச் சொல்ல முடியவில்லை என்றால் அது அற்புதமாகும். தன்னை வெளிப்படுத்த எல்லா நேரங்களிலும் அதைச் செய்கிறார். “அதை ஏன் நீங்கள் செய்யக்கூடாது” என்று நீங்கள் கேட்கலாம். ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அவர் “நான் பெலவீனமடைகிறேன்” என்று கூறினார். இது உங்களுக்குத் தெரியுமா? எத்தனை பேர் அதை அறிவீர்கள்? “வல்லமை என்னிடத்திலிருந்து புறப்பட்டு சென்றது” என்றார். இப்போது, அவர் தேவனுடைய குமாரனாக இருக்கிறார். என்னைக்குறித்து என்ன? நானோ, கிருபையினால் இரட்சிக்கப் பட்ட ஒரு பாவி. பாருங்கள்? ஆனால், அதைச் செய்வதாக வாக்குப் பண்ணியுள்ளார். அது அவருடைய வாக்குத்தத்தமாகும். அதை அவர் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால் அதைச் செய்வதாக அவர் வாக்குப் பண்ணியுள்ளார். 81இப்பொழுது, வரிசையில் இருக்கிறவர்கள் அனைவரும் அதை விசுவாசிக்கிறீர்களா? அந்தத் தீர்மானத்திற்கு உங்கள் சிந்தை அந்த நிலையை அடைந்துவிட்டதா? இப்பொழுது, அது உங்கள் மேல் சுமத்தப்பட்ட பாரமாயிருக்கிறது. இயேசுகிறிஸ்து அந்த வார்த்தைகளை பேசினார் என்று விசுவாசிக்கும் அளவுக்கு உங்கள் சிந்தை அந்த நிலையை அடைந்துவிட்டதா? அவ்விதமாக விசுவாசிப்பீர்களானால், வரிசையிலிருக்கிற நீங்கள் உங்கள் பரங்களை உயர்த்துங்கள். அதன் அடிப்படையில் உங்கள் மேய்ப்பர்களும் நாங்கள் அனைவரும் உண்மையிலேயே ஜீவ னுள்ள தேவனுக்கு ஊழியம் செய்கிறோம் என்று விசுவாசித்தால், வரிசையில் இருக்கிற அனைவரும் உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த பிற்பகல் நேரத்தில் அவருடைய சாட்சியாக அவரைப் பார்த்தீர்கள், அவரை நம்முடன் அடையாளப்படுத்திக்கொள்கிறார். வார்த்தையை உருவாக்கினவர் அவர்தான். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார். அவ்விதமாக விசுவாசிப்பீர்களானால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அது சம்பவிக்கவேண்டும். அது நிறைவேறவேண்டும்! நீ யார் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. நீங்கள் நிலைத்திருந்தால், அது நிறைவேற வேண்டும். மழை பொழிவதுபோல; மோசே அவர்களை எகிப்தை விட்டு வெளியே கொண்டுவந்தது போல; பூமிக்குரிய தகப்பன் இல்லாமல், ஒரு கன்னிகை ஒரு குழந்தையைப் பெற்றடுத்தது போல, நீ சந்தேகிக்காமல் இருந்தால், அதேவிதமாக சம்பவிக்கும். 82ராய், இங்கே வா, இதைப்பெற்றுக்கொள். “விசுவாசிக்க மட்டும் செய்” என்ற பாடலைப்பாடு. நாங்கள் ஜெபிக்கத் தொடங்கும் மட்டும், சற்று நேரம் அப்பாடலைப் பாடு. ஊழிக்காரர் களும், எங்கும் இருக்கிற சபையோரும் நம் தலைகளைத் தாழ்த்துவோம். எங்கள் பரலோகப் பிதாவே, இவ்வேளையில் எடுத்திருக் கிற பிரயாசம்! கர்த்தாவே, எத்தனை பேர் உண்மையிலேயே உம்மை விசுவாசிக்கிறார்கள் என்று நாங்கள் அதியசயிக்கிறோம். விதை விதைக்கப்பட்டாயிற்று. வார்த்தை வாசிக்கப்பட்டாயிற்று. கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் பிரசன்னராகி, ஒளியில் இருக்கும் ஜீவனை நமக்குக் காண்பித்தார். அவர் உலகத்திற்கு ஒளியாயிருந்தார். இப்போது அவர் ஒளியா யிருக்கிறார். அவர் மகத்தான நித்திய ஒளி. இந்த பிற்பகல் நேரத்தில் அவர் நம்மத்தியில் தரிசனமானார். இந்த சந்ததியில் என்ன செய்வதாக அவர் வாக்குப்பண்ணியிருந்தாரோ அதைச் செய்தார். வார்த்தை முழுவதுமாக பிரசங்கிக்கப்பட்டது. வார்த்தை முழுவதுமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது. இப்போது, இங்கிருக்கிற ஜனங்கள் முழுவதுமாக முழு உள்ளத்தோடும் அதை விசுவாசிப்பீர்களானால், பிதாவே இவர்களுக்காக ஜெபிக் கிறோம். எல்லா அவிசுவாசத்தையும் எடுத்துப்போடுவீராக..... 83உமக்கு விரோதமாக சாட்சி கொடுத்த மனிதன், இந்த பிற்பகல் நேரத்தில், வயதான அந்த அவிசுவாசி, கடவுள் நம்பிக்கையற்றவர், பொறுமையில்லாதவர் இன்று எங்கள் மத்தியி லிருந்து அகற்றப்படுவார்களாக. முழு அந்தகாரத்திற்குள் செல் லட்டும். இந்தக் கட்டிடத்தைவிட்டு அகன்று போகட்டும். பரிசுத்த ஆவியானவர், பிரதிவாதியின் சாட்சியாய் இருந்தவர், வரிசையில் நடந்துவரும்போது ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுக்கு உயிர்ப் பிக்கப்படுவதாக. அதை அருளிச் செய்யும். இங்கிருந்து அவர்கள் கடந்து செல்லட்டும், அவர்களுடைய சிந்தை ஏற்கனவே தீர்மானம் எடுத்துவிட்டது, ஆகவே அவர்கள் வரிசையில் வந்து கொண்டிருக் கின்றனர். இப்போது, பரிசுத்த ஆவியானவர் வார்த்தையை அவர்களுக்கு உயிர்ப்பித்துக் கொடுக்கிறார். வியாதிஸ்தர் மேல் கைகளை வைத்தல் என்கிற அந்தக் கடைசிக் கட்டளை நிறைவேறி முடிந்துவிட்டது. அப்போதே கிரியை முடிந்துவிட்டது. கர்த்தாவே அதை அருளிச்செய்யும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், ஒவ்வொருவருடைய சுகத்தை உரிமை பாராட்டுகிறேன். 84இப்பொழுது, அடுத்த காரியத்தை நிறைவேற்ற வேண்டும். கரங்களை வைத்தல். ஞானஸ்நானம் போன்ற சடங்குகளைச் செய்ய வேண்டும். அவரோடு அடக்கம் பண்ணப்படுகிறாய், பின்பு எழுந்து, புதிய ஜீவியத்தை தொடங்கி நடந்து செல்கிறாய். பாருங்கள்? அதுபோன்று உணரக்கூடாது. ஆனால் நீ அதை விசுவாசிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அதில் நிலைத்திருக்க வேண்டும். கடைசியாக, கொஞ்சக்காலம் கழித்து, நீ புதிய ஜீவனைப் பெற்றுக் கொண்டாய் என்பதைக் காண்பாய். அதேவழிதான் இங்கேயும் இருக்கிறது. அது விதைக்கப்பட்ட ஒரு விதையாயிருக்கிறது. அதன்மீது கைகளை வைத்தல் மூலமாக, இப்பொழுது ஊன்றியிருக்கிறோம். இதில் நாம் என்ன செய்யப்போகிறோம்? அதனுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலிப்பொருள் மீது தங்கள் கரங்களை வைத்து பலிப்பொருளோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதுப் போல, கிறிஸ்துவின் மேல் விசுவாசத்தினால் நம்முடைய கைகளை வைக்கிறோம். அவ்வாறு அவரோடு கூட நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். இன்று நாம் நம்முடைய கரங்களை வியாதியஸ்தர்கள் மேல் வைக்கிறோம். அது எதற்காகவென்றால், இந்த வார்த்தையோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக. பாருங்கள்? இப்போது விசுவாசியுங்கள், கர்த்தர் உங்களை சுகப்படுத்துவார். 85இப்போது, சகோதரன் பார்டர்ஸ் மெல்லிய சத்தத்தில் பாடப்போகிறார்கள். பியானோ, ஆர்கன் மற்றும் எல்லா இசைக் கருவிகளும் இசைக்கப்படப்போகின்றன. “விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள், சகலமும் கைகூடிடும், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள்” சற்றே கற்பனை செய்துப்பாருங்கள். இயேசு கிறிஸ்து அந்த மலையிலிருந்து கீழே இறங்கி வருகிறார். காக்காய் வலிப்பு நோயுள்ள ஒருவனை சீஷர்களால் சுகமாக்கமுடியவில்லை. அதற்கு சில நாட்களுக்கு முன்பு பிசாசுகளை துரத்துவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். ஆகவே அவர் களிடத்தில் வல்லமை இல்லை என்று பொருள் அல்ல. ஆனால், அவர் கூறினார், “உங்களுடைய அவிசுவாசமே அதற்குக் காரணம்” என்று. பாருங்கள்? ஆனால் அவன் இயேசுவினிடத்தில் வந்தபோது, அங்கே அவன் விசுவாசத்தை சந்தித்ததாக அறிந்து கொண்டான். இப்பொழுது, உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசி யுங்கள். நாம், “விசுவாசிக்கமட்டும் செய்யுங்கள்'' பாடலை மெல்லிய சத்தத்தில் பாடும் போது. சகோதரன் பார்டர்ஸ். (சகோதரன் பிரன்ஹாம் மற்றும் ஊழியக்காரர்கள், சபையார் மெல்லிய சத்தத்தில் “விசுவாசித்தால் மட்டும் போதும்” என்ற பாடலைப் பாடும்போது, ஜெபவரிசையில் கடந்து வருகிறவர் கள் மீது தங்கள் கரங்களை வைக்கின்றனர். ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) விசுவாசியுங்கள், சகலமும் கைகூடிடும், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். மற்றவர்கள் பாடுவதுபோல, இவ்விதமாக நாமும் பாடுவோம். இப்போது நான் விசுவாசிக்கிறேன். (நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நம்முடைய கரங்களை உயர்த்துவோம்!) இப்போது நான் விசுவாசிக்கிறேன். ஓ தேவனே! இந்த கைக்குட்டைகள் யார் யாரை பிரதிநித்துவப்படுத்துகிறதோ அவர்களையெல்லாம் இயேசுவின் நாமத்தில் சுகப்படுத்தும், கர்த்தாவே. உம்முடைய மகிமைக் கென்று, அதை அருளிச்செய்யும், கர்த்தாவே. ....நான் விசுவாசிக்கிறேன், இப்போது நான் விசுவாசிக் கிறேன், ஓ, இதுதான் அந்தவேளை என்று விசுவாசிக்கிறேன், சகலமும் கைகூடிடும், அந்த வேளை இதுதான் என்று நான் விசுவாசிக்கிறேன். 86நாம் என்ன செய்தோம் என்று உங்களுக்குத் தெரியுமா? இயேசுகிறிஸ்துவின் கட்டளைகளை நாம் பின்பற்றினோம். “நான் சுகமடைந்து விட்டேன், நான் சுகத்தைப் பெற்றுக்கொள்வது தடுக்க முடியாத ஒன்று, ஏனென்றால் தேவன் வாக்குப் பண்ணியுள்ளார். மரணத்திற்கேதுவான என்னுடைய உதடுகளைக் கொண்டு, அந்தக் கடைசி காரியமாக, ”நான் சுகமடைந்து விட்டேன், நான் விசுவாசிக்கிறேன்“ என்ற வார்த்தைகளை என் உதடுகளால் உச்சரிப்பேன். (சபையார் ”ஆமென்“ என்று கூறுகின்றனர் - ஆசி) அதைப்போல நீங்கள் விசுவாசிக்கி றீர்களா? அதை நான் விசுவாசிக்கிறேன். என்னுடைய சகோதர, சகோதரிகளே, தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நாம் இப்போது எழுந்து நம் கால்களில் நிற்போம். சற்று நேரத்திற்கு. அது எப்போது சம்பவிக்கும் என்று எனக்குத் தெரியாது. அது இப்பொழுதே நடக்கவேண்டும் என்று விசுவாசிக் கிறேன். நாம் சந்திக்கும் வரைக்கும்!, நாம் சந்திக்கும் வரைக்கும்!, நாம் இயேசுவைச் சந்திக்கும் மட்டும்.... (அவர் இப்போது நம்மத்தியிலே பிரசன்னராயிருக்கிறார்) நாம் சந்திக்கும் வரை!, நாம் சந்திக்கும் வரை! நாம் மறுபடியும் சந்திக்கும்வரை தேவன் உங்களோடு இருப்பாராக! மனதுகுள்ளே அதை மெல்லியதாய் நாம் பாடும்போது, நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. (சகோதரன் பிரன்ஹாம், “தேவன் உங்களோடு இருப்பாராக” என்று மனதுக்குள் மெல்லிய குரலில் பாடத் தொடங்குகிறார் - ஆசி) நாம் சந்திக்கும்வரை! ஓ, தேவனே, உம்முடைய வார்த்தை எங்களுக்குத் தீபமாக இருக்கட்டும். நாங்கள் எதைப்பார்த்தோமோ, எதைக் கேட்டோமோ, எதை வாசித்தோமோ அவைகள் எங்களை உம்முடைய பாதத்தண்டை நடத்தட்டும். உம்முடைய வார்த்தை யை, நீர் வாக்குத்தத்தம் செய்த எல்லாவற்றையும் விசுவாசித் தவர்களாய் அங்கேயே நாங்கள் அமர்ந்திருக்கட்டும். கர்த்தாவே, அதை அருளிச் செய்யும். நாம் சந்திக்கும் வரை!, நாம் சந்திக்கும் வரை! நாம் மறுபடியும் சந்திக்கும்வரை, தேவன் உங்களோடு இருப்பாராக! இப்போது நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். நம்முடைய மிகவும் நேசிக்கத்தகுந்த சகோதரன், சகோதரன் ஜான்சன் ஜெபித்துக் கூட்டத்தை முடித்து வைப்பார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரன் ஜான்சன்…